உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொலைதுார பஸ்களில் அவசர வழி அமைக்க வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவு

தொலைதுார பஸ்களில் அவசர வழி அமைக்க வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை:தொலைதுார பஸ்களில் அவசர வழி இருப்பதை உறுதி செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.முசிறி வழக்கறிஞர் ராஜேந்திரன் தாக்கல் செய்த பொதுநல மனு: ஒன்பது பேருக்கு மேல் பயணிக்கும் வாகனங்களில், மோட்டார் வாகனச் சட்டப்படி அவசர வழிகள், இடைவெளிவிட்டு இருக்கைகள் இருக்க வேண்டும். ஆனால் இதை அரசு பஸ்கள் உட்பட இதர வாகனங்களில் நடைமுறைப்படுத்துவதில்லை. சட்டப்படி அவசர வழிகள், இருக்கைகள் அமைக்காத வாகனங்களுக்கான உரிமத்தை அரசு திரும்பப் பெற வேண்டும். விதிமுறைகளை பின்பற்றாத வாகனங்களுக்கு உரிமம் வழங்கக்கூடாது என தமிழக அரசுக்கு மனு அப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: பயணிகளின் பாதுகாப்பு கருதி விதிகள்படி தொலைதுார பஸ்களில் அவசர வழி வசதி இருப்பதை உறுதிப்படுத்த தமிழக உள்துறை, போக்குவரத்துத்துறை செயலர்கள், போக்குவரத்துத்துறை கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ