மேலும் செய்திகள்
சீமைக்கருவேல மரங்கள் மாயமாகுமா?
31-Aug-2025
சென்னை:தமிழகம் முழுதும் சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக, அக்., 10ம் தேதிக்குள் விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் கெடு விதித்து உள்ளது. தமிழகத்தில், சீமை கருவேல மரங்களை அகற்ற உத்தரவிடக் கோரி, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். அவகாசம் இந்த வழக்குகளை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ் குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வனத்துறை தரப்பில், சிறப்பு பிளீடர் டி.சீனிவாசன், தமிழக அரசு தரப்பில், மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி, ''நீர் நிலைகள், வனப்பகுதிகளில், சீமை கருவேல மரங்களை அகற்ற, கணக்கெடுக்கப்பட்டு உள்ளது. ''வருவாய் துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களில் கணக்கெடுப்பு நடத்த வேண்டி உள்ளது. வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ளதால், சீமை கருவேல மரங்கள் கணக்கெடுப்பு, அவற்றை அகற்றுவது தொடர்பான நடவடிக்கை மேற் கொள்ள மூன்று மாதம் கால அவகாசம் வழங்க வேண்டும்,'' என தெரிவித்தார். நடவடிக்கை இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் கூறியதாவது: சீமை கருவேல மரங்களை அகற்றும்படி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து, 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இதுவரை அந்த உத்தரவு முழுமை யாக அமல்படுத்தப்படவில்லை. சீமை கருவேல மரங்களை முற்றிலும் அகற்ற, அரசும் அரசாணை வெளியிட்டு உள்ளது. இருப்பினும், எந்த முன்னேற்றமும் இல்லை. சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி என்பது, 'ராக்கெட் சயின்ஸ்' அல்ல. ஒவ்வொரு மாவட்டத்தி லும், மாவட்ட கலெக்டர்கள் வாயிலாக சீமை கருவேல மரங்களை முற் றி லும் அகற்ற நடவடிக்கை எடுக்கலாம். தனியார் நிலங்களில் உள்ள மரங்களை அகற்ற, நில உரிமையாளர்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பி, குறிப்பிட்ட காலக்கெடு வுக்குள் அகற்றாவிட்டால், அரசே அகற்றி, அதற்கான செலவு தொகையை நில உரிமையாளர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும். தனியார் நிலங்களில் இருந்து மரங்களை அகற்ற, நில உரிமையாளர்கள் அனுமதிக்காவிட்டால், அவர்கள் மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும். சீமை கருவேல மரங்களை அகற்ற, அரசு நிதி எதுவும் ஒதுக்க வேண்டிய அவசியம் இல்லை. பருவ மழை மாறாக, மரங்களை வெட்டி, அதை விற்று வருவாய் ஈட்டலாம். வடகிழக்கு பருவ மழையை காரணம் காட்டி, மரங்களை அகற்றுவதை தள்ளி வைக்க முடியாது. மாநிலம் முழுதும், சீமை கருவேல மரங்களை, முற்றிலும் அகற்று வது தொடர்பாக, விரிவான திட்டத்தை, அரசு அக்., 10ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும். இதில் உரிய பதிலை அளிக்காவிட்டால், நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பிக்க நேரிடும் என எச்சரித்து, விசாரணையை தள்ளி வைத்தனர்.
31-Aug-2025