உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோயில் சொத்துக்களை பாதுகாப்பது அதிகாரிகளின் சட்டப்பூர்வ கடமை; உயர்நீதிமன்றம் உத்தரவு

கோயில் சொத்துக்களை பாதுகாப்பது அதிகாரிகளின் சட்டப்பூர்வ கடமை; உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை : விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் சொத்துக்களை பாதுகாக்க தாக்கலான வழக்கில்,'ஏற்கனவே அரசு நடவடிக்கையை துவங்கியுள்ளது. அறநிலையத்துறை சட்டப்படி கோயில் சொத்துக்களை பாதுகாப்பது அதிகாரிகளின் கடமை,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. ஆழ்வார்திருநகரி ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு: சாத்துார் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகின்றனர். ஆண்டுதோறும் ஆடித்திருவிழா நடைபெறும். கோயிலை நிர்வாகம் முறையாக நிர்வகிக்கவில்லை. கோயில் நிதி தவறாக பயன்படுத்தப்படுகிறது. கோயிலுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. கோயில் வளாகம், கழிப்பறைகளை துாய்மையாக பராமரிக்கவில்லை. வணிக வளாகம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. பொதுப்பாதை, கோயிலைச் சுற்றிலும் உள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. கோயில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு பிறப்பித்த உத்தரவு: ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி, கோயில் சொத்துக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுரை அறநிலையத்துறை இணை கமிஷனர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அறநிலையத்துறை சட்டப்படி கோயில் சொத்துக்களை பாதுகாப்பது அதிகாரிகளின் கடமை. ஏற்கனவே நடவடிக்கை துவங்கியுள்ளதால் இம்மனுவை மேலும் பரிசீலிக்கத் தேவையில்லை. வழக்கு பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

SUBBIAH RAMASAMY
செப் 16, 2025 18:27

இருக்கிற சட்டங்களால் எல்லாம் சரியாக்கலாம். ஆனால் அதிகாரிகள் கோவில் பணத்தில் வாழ்க்கையை அனுபவிக்க ஆசை பட்டு பொறுப்பு இல்லாமல் காலம் கழிக்கின்றனர்.


Muthukumaran
செப் 16, 2025 13:10

இதைப்பற்றி கவலைப்படுவது அவர்களுக்கு வேலையில்லை. கிராமக் கோயில்களூக்கு சொந்தமான காலிமனைகள் கழக ஆதரவாளர்கள் கையில் இருக்கிறது. எப்போது பட்டாவாக மாறும் எனத் தெரியவில்லை. பல இஓ க்கள் தங்காளது கட்டுப்பாட்டிலீலுள்ள சொத்து விபரங்களையே அறீயாதிருக்கின்றனர். அரங்காவலர் குழுவில் கட்சி இதரவாளர்கள் இருப்பதால் இன்மீதான விபரங்கள் வெளியே வர வாய்ப்பில்லை. இணையதளத்தில் காலி மனைகள் விபரம் ஏற்றப்படாதது இதற்கு சாட்சி. சிவன் சொத்து குல நாசம் என்பது பொய். அச்சுறுத்தலுக்காக சொல்லப்பட்ட வசனம் என்பது ஆக்கிரமிப்பாளர்களது கருத்து. தெய்வம் நின்று கொல்லும். ஆனால் அமர்ந்த நிலையிலேயே இருப்பதால் அச்சமில்லை. நீதிமன்றம் அந்தணர் மந்திரம்போல் ஓதிக்கொண்டே இருக்கும் நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்காது.


JeevaKiran
செப் 16, 2025 12:51

நாட் ஒன்லி கோயில் சொத்து. எல்லா அரசு சொத்துக்களையும் காக்க வேண்டியது ஒவ்வொரு அரசு ஊழியரின் கடமை. இதற்காகத்தான் அரசு சம்பளம் பெறுகிறார்கள். நாட்டில் சட்டம் காப்பாற்ற படுவதில்லை. ஆக்கிரமிப்பாளர்கள் தண்டிக்கப்படுவதில்லை. அதனால் தான் அராஜகமும், ஊழலும், ஆக்ரமிப்புகளும் பெருகிவிட்டன.


Oviya Vijay
செப் 16, 2025 10:49

இந்திய அளவில் ஒரு சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளில் வரும் வருமானத்தை ஆண்டிற்கு ஒருமுறை கணக்கிட்டு கண்டிப்பாக 30 லிருந்து 40 சதவீதம் வருமானம் அருகிலுள்ள கண்பார்வையற்றோர் இல்லங்களுக்கும் முதியோர் இல்லங்களுக்கும் கொடுக்கப்பட வேண்டுமென சட்டம் இயற்றப் படவேண்டும். அதற்கென தனி இலாக்கா ஒன்றை ஏற்படுத்தி அதை நடைமுறைப் படுத்த வேண்டும்... ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான பணத்தை இவ்வில்லங்கள் பெருமாயின் பெருமளவில் பார்வையற்ற மாணவர்களுக்கும் முதியவர்களுக்கும் மிக மிக உதவியாக இருக்கும்... தற்போதைய நிலையில் இவ்வாறான இல்லங்கள் பொருளுதவிகள் பெற மிகுந்த அளவில் போராடிக் கொண்டுள்ளனர் என்பதே உண்மை...


S.V.Srinivasan
செப் 16, 2025 09:49

கோவில் சொத்துக்களை பாதுகாப்பது அதிகாரிகளின் சட்டப்பூர்வ கடமை என்பதை எந்த அதிகாரிகள் மதிக்கிறாங்க. எல்லாம் கோவில் சொத்துக்களை ஆட்டைய போட்றதலுதான் குறியா இருக்காங்க. ஹிந்துக்களின் கோவில்கள் இவர்களுக்கு பணம் கொழிக்கும் இடம். ஊருக்கு இளிச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டி.


shyamnats
செப் 16, 2025 08:34

அறநிலையத்துறை கோயில்களை முறையாக நிர்வகிக்கவில்லை எனில் நீதித்துறை மேற்படி துறையை கலைக்க உத்தரவிட வேண்டும். செய்வார்களா? எத்தனையோ கோயில்களில் ஒருவேளை பூஜை கூட இல்லாமல் இருக்கும் போது கோயில் காசில் அவ்வப்போது கல்யாணங்கள் அதுவும் காதல் கல்யாணங்கள்செய்வது அராஜகமாகும். கட்சி நிதியிலிருந்து செய்தால் ஏற்றுக்கொள்ளலாம். அரசுக்கு இந்து கோயில்கள் உண்டியல் பணம் கண்ணை உறுத்தி கொண்டே இருக்கிறது. சொலவடை ஒன்று இருக்கிறது, ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே என்பது பொருத்தமாகத்தான் இருக்கிறது.


GMM
செப் 16, 2025 08:32

கோவில் சொத்துகள் பாதுகாக்க அதிகாரிகள் கடமையாக இருந்தாலும், ஆன்மிக நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் அதிகாரி, மந்திரி இருக்க வேண்டும். நிர்வாக, அரசியல் சட்ட படி அமுல் படுத்த முடியாது. அரசு பணி போல் கோவிலை நிர்வகிக்க முடியாது. அரசு ஊழியர்கள் தகுதி தேர்வு போல் ஒழுக்கம் பின்பற்றும் கோவில் ஊழியர்கள் தனியாக தேர்வு செய்து ஒப்படைத்தால் தான் கோவில் சொத்துகள் பாதுகாக்க முடியும். கோவில் சக்தி பெறும். மேலும் கோவிலுக்கு நாடு முழுவதும் பக்தர்கள் காணிக்கை செலுத்தி வருகிறார்கள். ஆகவே அது மாநில நிர்வாகம், மத்திய அரசு கீழ் இருக்க கூடாது.


Ramesh Sargam
செப் 16, 2025 08:19

உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்படுவதுதான் சேகர்பாபுவின் கடமை, மன்னிக்கவும், மடமை.


T.sthivinayagam
செப் 16, 2025 08:06

தமிழகத்தில் ஆன்மீகத்தை வைத்து கல்லா கட்டும் சில இயக்கங்கள் கோயிலை ஆக்கிரமிப்பு செய்ய மத்திய அரசின் செல்வாக்கை பயன்படுத்த நினைக்கிறார் என்று மக்கள் கூறுகின்றனர்


Sivaram
செப் 16, 2025 07:44

நேற்று முதல் நாள் ஸ்டாலின் மகன் செங்கல் தலைவன் மண்ணின் மைந்தன் நீட் ரகசியம் தெரிந்த முன்னாள் திமுக இளைஞர் அணி தலைவன் 33 ஜோடிகளுக்கு கோயில் சொத்தை காப்பாற்றி காதலர் சேவை என்று கூறி திருமணம் செய்து வைத்தார் இன்னும் இது போல நிறைய திருமணங்கள் செய்வேன் என்று சொல்லி இருக்கிறார் வாழ்க சேகர் பாபு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை