உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அர்ச்சகர்களின் தட்டு பணத்தை பறிக்கும் ஹிந்து அறநிலையத்துறை

அர்ச்சகர்களின் தட்டு பணத்தை பறிக்கும் ஹிந்து அறநிலையத்துறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொடைக்கானல் : கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவிலில், அர்ச்சகர்களின் தட்டு பணத்தைப் பறிக்கும் ஹிந்து அறநிலையத்துறை அலுவலர்களின் செயலால் பக்தர்கள் கொந்தளிக்கின்றனர்.பழனி முருகன் கோவிலுக்கு, 30-க்கும் மேற்பட்ட உப கோவில்கள் உள்ளன. இவற்றில், கொடைக்கானல் பூம்பாறையில் உள்ள குழந்தை வேலப்பர் கோவிலும் ஒன்று. இக்கோவிலில் அர்ச்சகரின் தட்டில் பக்தர்கள் இஷ்டப்பட்டு செலுத்தும் பணத்தை உண்டியலில் செலுத்த, அங்குள்ள ஹிந்து அறநிலைத்துறை அதிகாரிகள், பக்தர்களிடம் அடாவடியாக நிர்ப்பந்திக்கின்றனர்.அவ்வாறு செலுத்தாதவர்களிடம் கண்டிப்பு காட்டுகின்றனர். பக்தர்களின் வருகையை கண்காணித்து, உண்டியலில் அவர்கள் பணம் செலுத்த மூன்று ஊழியர்களை நியமித்து கெடுபிடி செய்வதோடு, 'சிசிடிவி' கேமராக்கள் அமைத்து அதிகாரிகள் கண்காணிக்கின்றனர்.பக்தர்கள் விரும்பி தட்டில் பணம் கொடுக்கும் போது, அதை பெறும் அர்ச்சகர்கள் பலருக்கு, விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டு துன்புறுத்தப்படும் அவல நிலையும் தொடர்கிறது.பக்தர்கள் பணத்தை உண்டியலில் இடவும், நன்கொடையாக பி.ஓ.எஸ்., இயந்திரம் மூலம் செலுத்தவும் அலுவலர்கள் கட்டாயப்படுத்துகின்றனர். கோவிலில் அன்றாட பூஜை, அபிஷேகம் குறித்த அறிவிப்பு பலகைகள் ஏதுமில்லாமல் ஹிந்து அறநிலையத் துறை இது போன்று ஈடுபடுவது, பக்தர்களை கொதிப்படைய செய்கிறது.

மலேஷியா பக்தர் லீலாவதி கூறியதாவது:

பூம்பாறை வேலப்பர் கோவில் வழிபாட்டிற்கு வந்தபோது கோவில் உண்டியலில் பணம் செலுத்தினேன். தொடர்ந்து, விருப்பத்தின் அடிப்படையில் அர்ச்சகருக்கும் பணம் கொடுத்த நிலையில், வாங்க மறுத்து, பணத்தை உண்டியலில் செலுத்தி விட்டார். இது சம்பந்தமான எவ்வித அறிவிப்பு பலகையும் வைக்கப்படவில்லை.ஹிந்து அறநிலையத் துறையின் இத்தகைய செயல்பாடு வருத்தமளிக்கிறது. கோவில் அர்ச்சகர்களுக்கு கிடைக்கும் இதுபோன்ற சிறு தொகையை அறநிலையத்துறை பறிப்பது நியாயம் இல்லை. கோவில் வழிபாட்டில், அர்ச்சகரின் தட்டில் விபூதி உள்ளிட்டவை பெறும் போது சிறு காணிக்கை செலுத்த வேண்டும் என, என் முன்னோர் கூறி உள்ளனர். அதன் அடிப்படையில் தான் செலுத்தினேன்.

கொடைக்கானல் ஹிந்து முன்னணி ஒன்றிய தலைவர் மகேஷ்வரன் கூறியதாவது:

அர்ச்சகர்களின் தட்டில் பக்தர்கள் வழங்கும் பணத்தை, உண்டியலில் செலுத்த வேண்டும் என்ற நடவடிக்கை வருத்தம் அளிக்கிறது. பொருளாதார ரீதியாக பின்தங்கி உள்ள அர்ச்சகர்களுக்கு பக்தர்கள் இஷ்டப்பட்டு காணிக்கை அளிக்கும் நிலையில், அதை பறிப்பது நியாயம் இல்லை.தமிழக அரசு பிற மத வழிபாட்டில் தலையிடுவதில்லை. கோவில்களில் இது போன்ற நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்நிலையால், பக்தர்கள் கோவில்களில் காணிக்கை செலுத்துவதை தவிர்த்து வருகின்றனர்.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

RAMESH
நவ 02, 2024 19:32

சிவன் சொத்து குல நாசம்..... டில்லி பாபுவுக்கு தெரிந்தால் சரி


Balakrishnen Balu
அக் 30, 2024 13:22

தொன்று தொட்டு உள்ள ஒரு இந்து தர்ம வழக்கம் தான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அர்ச்சகர்களுக்கு தக்ஷணை கொடுப்பது அதையும் இந்த இந்து விரோதி தீமுக தட்டி பறிப்பது சரி அல்ல இந்து மத மக்கள் வருகின்ற தேர்தலில் தூக்கி எறிந்து விடுவார்கள்


T.veluchamy
அக் 30, 2024 07:29

காசுக்கேற்ற பனியாரம் எவ்வளவு காசு போடறீங்களோ அவ்வளவு அருள்


T.veluchamy
அக் 30, 2024 07:22

நல்ல செயல்தான். அர்ச்சகர்கள் காசு கொடுப்பவர்களை ஒரு மாதிரியும் தட்டில் காசு போடாதவர்களை ஒருமாதிரியும் நடத்துவது தவிர்க்கப்பட வேண்டும். தட்டில் காசு போடுவது தடை செய்யப்பட வேண்டும். கடவுளின் அனைவரும் சம்மாக மதிக்கப்பட வேண்டும்


balamurugan mahalingam
அக் 30, 2024 05:51

அரசு இப்படி செய்வது வழிப்பறியை விட கேவலமான செயல்


kamalakannan.s Kannan
அக் 29, 2024 21:53

Again after hearing the news -why this is happening. Its the peoples wish giving money to archagargal and putting money in hundiyal. Nobody has rights to ask archagargal and force people to put only in hundiyal.


kamalakannan.s Kannan
அக் 29, 2024 21:46

Assemble all archagargal and keep a decent meeting. I dont want any ups and downs among yourself. Like I saw some videos showing Vada kalai, thenkalai etc.... It should be for their families welfare ask them their ideas. Consolidate it. For ex : ask each of them on how much will you get when people give money in temple . strictly not to steal from them. Then you can take decision. If you ask me I can say definitely not every archagargal will get the money daily in their plates It depends so my wish will be to give them the salary of 40,000 rs. Or still if any anybody has to say some new ideas let me know I will be waiting. Okay leave this. What will be for beggars in outside of the temple.lot of questions are there to fulfill Why they are becoming beggars? Have to think and fullfill them also.


kamalakannan.s Kannan
அக் 29, 2024 21:29

எதற்கு அர்ச்சகர்களின் தட்டில் செலுத்தும் காணிக்கை ஹிந்து அறநிலையதுறையால் எடுக்கப்படுகிறது. மக்கள் கொடுக்கும் பணத்தில் உங்களுக்கு என்ன சம்பந்தம்.இதற்கு ஒரு சர்வே வேண்டும்.


mohanamurugan
அக் 29, 2024 18:27

லஞ்சம் ‌ எப்போது ஒழிகிறதோ,அப்போதுதான் நம் சமூகம் உருப்படும்.


குமார்
அக் 29, 2024 16:25

அர்ச்சகர்களுக்கு இன்னும் ரெண்டாயிரம் மூவாயிரம் தான் சம்பளம். அவர்கள் எப்படி வாழ்க்கை நடத்த முடியும். முதலில் அரசு கோயிலைவிட்டு வெளியேறினால் இந்துக்கள் பார்த்துக்கொள்வார்கள். சில கோயில்களில் கொள்ளை நடக்கிறது திருச்செந்தூர் போன்ற இடங்களில் அர்ச்சகரும் அறநிலையத்துறையும் கூட்டு ஷேர் பண்ணிக்கொள்வார்கள். அங்கெல்லாம் எதையும் கண்டுகொள்வதில்லை. இவர்கள் சாதாரண சிறிய கோயில்களில் தான் ஆட்டம் போடுவாரகள். நாசமாய்ப் போவார்கள் அறநிலையத்துறை என்று நாம் சாபம் வேண்டுமானால் கொடுக்கலாம். அவ்வளவு தான் முடியும்


சாண்டில்யன்
அக் 30, 2024 05:48

அய்யர் சொன்னா பலரும் அப்டியே ஒத்து ஊதுகிறார்கள் "அர்ச்சகர்கள்" அரசு பணியாளர்களாக சேர விரும்புவதில்லை பணம் கொட்டும் கோயில்களில் மட்டுமே காணலாம் கிராமத்து வருமானமில்லாத ஏழை கோவில்களில் பணிசெய்ய முன்வருவதில்லை இந்த பாணியைத்தான் தமிழ்நாடு துவக்கப் பள்ளி ஆசிரியர்கள் கடைபிடிக்கிறார்கள் மலை / நகரங்களிலிருந்து தொலை தூர கிராமங்களுக்கு செல்வதில்லை


சமீபத்திய செய்தி