வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நம்பிக்கை இல்லாதவன் எதற்காக நம்பிக்கை உள்ளவருக்கு வாழ்த்துக்கள் சொல்ல வேண்டும்? நரகாசுரன் திராவிடர் அப்டின்னு புருடா விட்டார்கள்
திருப்பூர்: ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: ஆன்மிக பூமியான தமிழகத்தில் ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாத திராவிட மாடல் அரசு அதிகாரத்தில் உள்ளது. விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி, தமிழ் புத்தாண்டு என, எந்த ஹிந்து பண்டிகைகளுக்கும் ஆளும்கட்சியினர் வாழ்த்து சொல்வதில்லை. சென்னையில் நடந்த கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி, 'நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டும் தீபாவளி வாழ்த்துகள்' என கூறியிருக்கிறார். இது, உலகெங்கும் இருக்கக்கூடிய, ஹிந்துக்களை அவமதிக்கும் செயல். ஹிந்து மதத்துக்கு எதிராக செயல்படுபவர்களை, ஹிந்துக்கள் அடையாளம் காண வேண்டும். மேற்கத்திய நாடுகளின் தாக்கத்தால், தமிழகத்தில் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' போன்ற கலாசார சீர்கேடுகள், தி.மு.க., அரசால் நடந்து வருகின்றன. நமது கலாசார, பண்பாடுகளை பாதுகாத்து எதிர்கால தலைமுறையினருக்கு தேச பக்தியையும், தெய்வ பக்தியையும் வளர்த்திட, ஒவ்வொருவரும் முன்வர வேண்டும். பண்டிகைகளின் மகத்துவத்தையும், அது எப்படி உருவானது என்பதையும் வளரும் குழந்தைகளுக்கு சொல்லித் தர வேண்டும்.
நம்பிக்கை இல்லாதவன் எதற்காக நம்பிக்கை உள்ளவருக்கு வாழ்த்துக்கள் சொல்ல வேண்டும்? நரகாசுரன் திராவிடர் அப்டின்னு புருடா விட்டார்கள்