உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 40 தொகுதிகளிலும் மோடிக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி பிரசாரம்

40 தொகுதிகளிலும் மோடிக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி பிரசாரம்

சென்னை: இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு ஆதரவாக ‛ மீண்டும் மோடி வேண்டும் மோடி' என்ற பிரசாரத்தை இந்து மக்கள் கட்சி மற்றும் ஆன்மீக அமைப்பு துவக்கி உள்ளது. 9 பிரசார வாகனங்களுடன் 40 லோக்சபா தொகுதிகளிலும் 40 முழு நேர ஊழியர்கள், 234 சட்டசபை தொகுதிகளில் தேர்தல் பணி குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இல்லம் தோறும் மோடியின் திட்டங்கள், உள்ளம் தோறும் தாமரை என்கிற நிகழ்ச்சி நடைபெறுகிறது. 40 தொகுதிகளிலும் பிரச்சார பொதுக் கூட்டங்கள், தெருமுனை கூட்டங்களும், 234 சட்டமன்ற தொகுதிகளிலும் செங்கோல் வழிபாடு மற்றும் பிரச்சாரமும் நடக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை