உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செருப்பால் அடியுங்க: நடிகர் விஷால் நிறைய இருக்கு வேணுமா: ஸ்ரீரெட்டி

செருப்பால் அடியுங்க: நடிகர் விஷால் நிறைய இருக்கு வேணுமா: ஸ்ரீரெட்டி

சென்னை: 'தவறான நோக்கத்தில் அத்துமீற நினைப்பவர்களை செருப்பால் அடியுங்கள்' என, நடிகர் விஷால் கூறியுள்ளார். அதற்கு பதிலடி தரும் வகையில், 'என்னிடம் நிறைய செருப்பு உள்ளது; உங்களுக்கு வேண்டுமா?' என, நடிகை ஸ்ரீரெட்டி கேட்டுள்ளது, கேரளாவை போல, தமிழ் சினிமாவையும் பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.நடிகர் விஷால் நேற்று தன், 47வது பிறந்த நாளை கொண்டாடினார். இதற்காக கீழ்ப்பாக்கத்தில் உள்ள முதியோர் இல்லத்திற்கு சென்று உணவு வழங்கினார். பின் அவரிடம், 'கேரள சினிமாவில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை போல, தமிழ் சினிமாவிலும் உள்ளதா?' என்று, நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு விஷால் கூறியதாவது:தமிழ் சினிமாவில், சில டுபாக்கூர் கம்பெனி நடத்துபவர்களால், நடிக்க வாய்ப்பு தேடி வரும், 80 சதவீத பெண்கள் ஏமாற்றப்படுகின்றனர். நிறுவனங்கள் குறித்து ஆராய்ந்து, அங்கு வாய்ப்பு தேடி செல்ல வேண்டும். தமிழ் சினிமாவிலும், கேரளாவை போன்ற பாதிப்புகள் இருக்கலாம். நாம் என்ன போலீசா; இதுபற்றி நம் கவனத்திற்கு கொண்டு வரும் போது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.கேரளாவின் ஹேமா கமிட்டி போலவே, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பிலும், 10 பேர் இடம் பெறும் கமிட்டி அமைக்கப்படும். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். வாய்ப்பு தேடி வரும் பெண்களை, நடிகையரை, அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய யார் அழைத்தாலும், செருப்பால் அடியுங்கள். சில உப்புமா கம்பெனிகள் வேண்டுமென்றே, ஒரு ஆபிசை போட்டு, ஒரு கேமராவை எடுத்துக் கொண்டு வாய்ப்பு தருவதாக கூறி, போட்டோ ஷூட் நடத்தி தவறு செய்கின்றனர். என் மீது புகார் கூறிய ஸ்ரீரெட்டி யார் என்றே எனக்கு தெரியாது. ஆனால், அவர் செய்த சேட்டைகள் எல்லாம் எனக்கு தெரியும்.இவ்வாறு விஷால் கூறினார்.இந்நிலையில், விஷால் கருத்து குறித்து, எக்ஸ் பக்கத்தில் நடிகை ஸ்ரீரெட்டி கூறியிருப்பதாவது:நீங்கள் ஒரு பெண்ணை பற்றி பேசும் போது, உங்கள் நாக்கு ஊடகங்களுக்கு முன், மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.பிரச்னைகளை உருவாக்கும் விதம் அனைவருக்கும் தெரியும். நீங்கள் ஏற்கனவே பல முறை நிரூபித்துள்ளீர்கள். செய்த கர்மா ஏற்கனவே உங்களுக்கு நன்றாக வேலை செய்கிறது. என்னிடம் நிறைய செருப்பு சேகரிப்புகள் உள்ளன. உங்களுக்கு ஒன்று வேண்டுமா என, தெரியப்படுத்துங்கள். இவ்வாறு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Sridhar
ஆக 30, 2024 14:33

அவர யாருன்னே தெரியாது ஆனா அவர் செஞ்ச சேட்டை எல்லாம் தெரியும் ஒன்னும் புரியமாட்டேங்குதே சினிமாத்துறையில இருக்கற நடிகர்கள், தயாரிப்பாளர்கள், மற்றும் டைரக்டர்களில் யாராவது செருப்படியிலிருந்து தப்பிச்சாங்கன்னா, அவுங்க உடம்பு சரியில்லாத ஆளாத்தான் இருப்பாங்க


Velan Iyengaar
ஆக 30, 2024 08:20

அனகோண்டாவை அடியுங்க ......


Sundarakrishnan seshadri
ஆக 30, 2024 08:45

ரெட் ஜெயண்ட் அனகோண்டாவா?


Velan Iyengaar
ஆக 30, 2024 09:31

எதுன்னாலும் அவங்கள இழுக்கவில்லை என்றால் உங்களுக்கு கூலி தரமாட்டாங்களோ ??? அப்புறம் இங்க அனகோண்டா என்றாலே யாரோட அனகோண்டா என்று எல்லோருக்கும் தெரியும் .. கேவலமா பல்பு வாங்காதீர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை