உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள ஆய்வு பிரச்னையால் டாக்குமென்ட்கள் தேக்கம்: வீடு வாங்கியோர் பத்திரங்களுக்காக காத்திருப்பு

கள ஆய்வு பிரச்னையால் டாக்குமென்ட்கள் தேக்கம்: வீடு வாங்கியோர் பத்திரங்களுக்காக காத்திருப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கட்டடத்தின் மதிப்பு சரியா என்பதை உறுதி செய்வதற்கான களஆய்வு உரிய காலத்தில் நடக்காததால், பதிவு முடிந்தும் பத்திரங்களை பெற, வீடு வாங்கியோர் காத்திருக்கும் அவல நிலை உருவாகி உள்ளது.தமிழகத்தில் சொத்து பத்திரங்களை பதிவு செய்யும் பணிகள், 587 சார் - பதிவாளர் அலுவலகங்கள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. தாக்கல் செய்யப்படும் பத்திரங்களில், நிலத்தின் மதிப்பானது, அரசு நிர்ணயித்துள்ள வழிகாட்டி மதிப்புக்கு இணையாக இருக்க வேண்டும். மதிப்பு நிர்ணயம் அந்த நிலத்தில் கட்டடம் இருந்தால், அதற்கான மதிப்பையும் சரியாக குறிப்பிட வேண்டும். பொதுப்பணி துறையின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டு, இந்த மதிப்பு சரியாக உள்ளதா என்று பார்க்க வேண்டும்.பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட கட்டடம் எப்போது கட்டப்பட்டது, எந்த வகை பொருட்களால் கட்டப்பட்டது என்ற அடிப்படையில், அதன் மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், சொத்து வாங்கியவர்களுக்கு இந்த வழிமுறைகள் தெரியாது. விற்பனைக்கு வரும் சொத்தில் உள்ள கட்டடத்தின் மதிப்பானது, அது கட்டப்பட்ட போது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் அடிப்படையில் கருத்தில் கொள்ளப்படும். தற்போதைய நிலையில், எத்தனை ஆண்டுகள் ஆகியுள்ளன என்று பார்த்து, அதற்கேற்ப மதிப்பு கழிக்கப்படும்.ஆனால், பத்திரங்களில் குறிப்பிடப்படும் கட்டடத்தின் மதிப்பு, 50 லட்சம் ரூபாய் வரை இருந்தால், அதை சம்பந்தப்பட்ட சார் - பதிவாளர்களே, கள ஆய்வு வாயிலாக உறுதி செய்யலாம். இதில், தவறான மதிப்பு குறிப்பிடப்பட்டது தெரிய வந்தால், வேறுபாட்டு தொகை வசூலிக்கப்படும். சென்னை உள்ளிட்ட பகுதிகளில், வீடுகள் விலை வெகுவாக அதிகரித்துள்ளதால், கட்டட கள ஆய்வு செய்ய வேண்டிய பத்திரங்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. வேலைப்பளு உதாரணமாக, ஒரு அலுவலகத்தில் ஒரு நாளில், 100 பத்திரங்கள் வந்தால், அதில், 50க்கும் மேற்பட்ட பத்திரங்கள், கட்டட கள ஆய்வு செய்ய வேண்டிய நிலையில் உள்ளன.சார் - பதிவாளர்கள், தங்கள் வழக்கமான பதிவு பணிகளுக்கு இடையே, கட்டட கள ஆய்வுக்கு நேரில் செல்ல வேண்டி உள்ளது. இதில், வேலைப்பளு அதிகமாக உள்ளதாக கூறி, பெரும்பாலான சார் - பதிவாளர்கள், பத்திரங்களை நிலுவையில் வைக்கின்றனர். இதனால், வீடு வாங்கியோர் பதிவு முடிந்தாலும், பத்திரம் பெற ஒரு மாதம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இதைத்தவிர்க்க, கள ஆய்வு பணியில், உரிமம் பெற்ற மதிப்பீட்டாளர்கள் அல்லது பொறியாளர்களை பயன்படுத்த, பதிவுத்துறை முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

காரணமின்றி கிடப்பில் போட்டால் நடவடிக்கை

பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில், அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்கள் அதிகரித்துள்ளன. இதில், கட்டடத்தின் மதிப்பு தொடர்பாக, பத்திரத்தில் குறிப்பிடும் மதிப்பு, பொதுப்பணி துறை தள மதிப்பு பட்டியலுடன் பொருந்தும் நிலையில் இருந்தால், அதை அப்படியே ஏற்றுக் கொள்ளலாம். பொதுப்பணித்துறை மதிப்புக்கும், பத்திரத்தில் உள்ள மதிப்புக்கும் வேறுபாடு உள்ள பத்திரங்களை மட்டும், கவனமாக ஆய்வு செய்ய உத்தரவிட்டு இருக்கிறோம். ஆனால், சார் - பதிவாளர்கள் அனைத்து பத்திரங்களையும் இதைக் காரணமாக கூறி, தாமதம் செய்வதாக தெரியவந்துள்ளது. உரிய காரணம் இல்லாமல், பத்திரங்களை கிடப்பில் போடும், சார் - பதிவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Rathna
அக் 27, 2025 11:22

எப்படி வகை வகையை திட்டம் போட்டு சம்பாதிக்கராங்காபா..


Elamaran Guna
அக் 27, 2025 11:21

நான் கடந்த 3 மாத காலமாக பத்திரம் வரும் வரும் என வழி மேலே விழி வைத்து காத்துக்கொண்டிருக்கிறேன் ..தமிழ்நாட்டில் இரண்டு ஏரியாகாலில் மட்டும் தான் இந்த கட்டிட மதிப்பீட்டாளர் உள்ளார்கள். 1. சென்னை ௨.மதுரை . எவ்வளுவு கமிஷனுக்கேத்த மாதிரி பத்திரம் கிடைக்கும் ..கமிஷன் கொடுத்ததும் 3 மாதமாக இழுத்தடிக்கிறார்கள். கமிஷன் வாய்க்கரிசி மேலும் வேண்டுமோ என்னவோ


Rajeshwaran S
அக் 27, 2025 08:16

கொடுக்கிற பணத்துக்கு ஏற்ப வேலை வேகமாக நடக்கும். கள ஆய்வுக்கு தனியா பணம் வாங்குறாங்க. கேட்டத்தை விட அதிகமாக கொடுத்தா மறு நாள் பத்திரம் தர்றாங்க


R SRINIVASAN
அக் 27, 2025 08:15

அரசு வழிகாட்டி மதிப்பெண்ணுக்கு இணையாக கட்டடத்தின் மதிப்பு இல்லை. திடீரென்று அரசு வழிகாட்டி மதிப்பெண் அறிவிப்பில்லாமலே கூட்டப்படுகிறது. இதனால் மூலதன வரியும் எத்ரப்படிகிறது. மத்திய நிதி அமைச்சர் மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்கள் இதை கவனத்தில் கொண்டு வரும் நிதியாண்டு மத்திய பட்ஜெட்டில் சில மாத்ரங்களை செய்ய வேண்டும். ஏனென்றால் URBAN, செமி URBAN ஏரியாக்களில் அரசு வழிகாட்டி மதிப்பெண்ணுக்கு கீழேதான் விற்பனை விலை இருக்கிறது. இதனால் நடுத்தர மக்கள் மூலதன வரியை CAPITAL GAINS TAX அதிகமாக கட்ட வேண்டியிருக்கிறது


Kasimani Baskaran
அக் 27, 2025 03:56

வசூல் செய்ய ஏதுவாக சட்டதிட்டங்கள். ஆகவே தேக்கம் வரத்தான் செய்யும். தீம்க்காவுக்கு ஓட்டுப்போட்டால் இது போன்ற சிக்கல்களை எதிர்பார்க்கலாம்.


சமீபத்திய செய்தி