உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நெல்லையை உலுக்கிய ஐ.டி., ஊழியர் ஆணவக் கொலை: எஸ்.ஐ., தம்பதிக்கு வலை

நெல்லையை உலுக்கிய ஐ.டி., ஊழியர் ஆணவக் கொலை: எஸ்.ஐ., தம்பதிக்கு வலை

திருநெல்வேலி: திருநெல்வேலியில் காதல் விவகாரத்தில் ஐ.டி., ஊழியர் கவின் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, கைதான சுர்ஜித்தின் பெற்றோர் எஸ்.ஐ., சரவணன், எஸ்.ஐ., கிருஷ்ணகுமாரி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை கே.டி.சி.ஆர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி கிருஷ்ணகுமாரி. இவர்கள் இருவரும் பட்டாலியன் போலீசில் சிறப்பு எஸ்.ஐ., ஆக பணியாற்றி வருகின்றனர். இந்த தம்பதிக்கு சுர்ஜித் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவரது மகள் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்த விவசாயி சந்திரசேகர் மகன் கவின் என்பவரை காதலித்து வந்துள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=g04fdy3z&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சென்னையில் கவின்குமார் ஐ.டி.நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் தனது சொந்த ஊரான ஏரலுக்கு வந்து இருந்தார். அப்போது பாளையங்கோட்டைக்கு சென்று தனது காதலியை சந்தித்து பேசி உள்ளார். இந்த காதல் விவகாரம் இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்த சூழலில், நேற்று கவினை சந்தித்து அவரது காதலியின் சகோதரர் சுர்ஜித் பேசி உள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கவின்குமாரை சுர்ஜித் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினார். இதில் சம்பவ இடத்திலேயே ஐ.டி., ஊழியர் கவின்குமார் உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் இருந்த சி.சி.டி.வி., காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். தப்பியோடிய சுர்ஜித்தை போலீசார் கைது செய்தனர். தற்போது, சுர்ஜித்தின் பெற்றோர் எஸ்.ஐ., சரவணன், எஸ்.ஐ., கிருஷ்ணகுமாரியை போலீசார் தேடி வருகின்றனர். பட்டபகலில் ஐ.டி., ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

SUBBIAH RAMASAMY
ஜூலை 29, 2025 14:07

இது திருமாவளவன் அறிவுரை படி அடங்க மறு தத்துவத்தில் நடந்த கதை போல் இருக்கிறது. கவின் ஒருவேளை திருமா வகையறாவாக இருந்தாலும் சந்தேகம் இல்லை


m.arunachalam
ஜூலை 28, 2025 20:48

காலையில் வந்த செய்தியின்படி ஜாதி விஷயம் வருகிறது . அந்த பெண்பிள்ளைக்கு தெரியாதா இவ்வாறான பிரச்சனைகள் வரும் என்று ? . அண்ணா பல்கலை விஷயம் கூட இதுபோன்ற ஒரு பெண்ணின் செயலால் வந்ததுதான். தெளிதல் நலம் .


Edwin Jebaraj T, Tenkasi
ஜூலை 28, 2025 20:11

ஏன் என்றே தெரியவில்லை காதலிக்கிறேன் என்று ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து அடுத்த சமூகத்தை குறி வைத்து காதலில் வளைத்து போடுவது எப்படியாவது தன் நிலை உயராதா என்று ஏங்குவதையே காட்டுகிறது. சிலர் இதை வாழ்நாள் குறிக்கோளாக வைத்து செயல் படுகின்றனர் சிலர் அதில் வெற்றியும் பெறுகின்றனர் சிலர் மரணிக்கவும் செய்கின்றனர்.


magan
ஜூலை 28, 2025 17:53

சாதி சாதினு வெட்டிட்டு சாகுங்கடா அப்ப தான் திராவிடனுங்க தமிழ்நாட்டை ஆள வசதியா இருக்கும்


Balaa
ஜூலை 28, 2025 16:22

சமூக நீதி திராவிட மாடல் அரசு. இதுல முன்னாள் நீதிபதி ஸ்டன்ட் சந்துரு மத அடையாளங்கள் அணிந்து வரக்கூடாது என்று பரிந்துரை.


Santhakumar Srinivasalu
ஜூலை 28, 2025 14:34

இப்போ அந்த பொம்பள புள்ள அனாதை. இதுக்கு யார் பொறுப்பு. யார் மறு வாழ்வு தருவது?


சமீபத்திய செய்தி