வீட்டுவசதி வாரிய வீடு வாங்க ஆன்லைன் வசதி
சென்னை: வீட்டுவசதி வாரிய திட்டங்களில், வீடு, மனை வாங்க விரும்புவோர், அதற்கான முன்பதிவு பணிகளை மேற்கொள்ள, 'ஆன்லைன்' வசதி வந்துள்ளது. குடியிருப்பு திட்டங்களில், விற்பனைக்கு தயாராக உள்ள வீடு, மனைகள் விபரங்களை இணையதளத்தில் வாரியம் வெளியிட்டது. அதன்படி, சம்பந்தப்பட்ட கோட்ட அலுவலகங்களை அணுகினால், உரிய ஒத்துழைப்பு கிடைப்பதில்லை என, புகார் எழுந்தது. இந்நிலையில், பொது மக்கள் தேர்வு முழு விபரங்களை அறிவதுடன், தங்களுக்கான வீடு, மனையை தேர்வு செய்ய, புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. வாரிய திட்டங்களில் வீடு, மனை விற்பனைக்கு என, பிரத்யேகமாக செயல்படும் வகையில், இந்த புதிய இணையதளம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. https://propertysales.tnhb.tn.gov.in/ என்ற புதிய இணையதளத்தில், பொது மக்கள் தங்கள் பெயர், இ - மெயில் முகவரி, மொபைல் போன் எண்ணை பதிவு செய்தால் போதும். வாரியத்தின் விற்பனை பிரிவு அதிகாரிகள் தொடர்பு கொண்டு வீடு, மனையை தேர்வு செய்ய தேவையான விபரங்களை வழங்குவர்.