உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வழக்கு ஆவணமே மாயமானால் சிலை எப்படி பாதுகாக்கப்படும்? ஹிந்து முன்னணி கேள்வி

வழக்கு ஆவணமே மாயமானால் சிலை எப்படி பாதுகாக்கப்படும்? ஹிந்து முன்னணி கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர் : 'கோவில் சிலை திருட்டு வழக்கு ஆவணங்களை கூட பாதுகாக்க முடியாவிட்டால், கோவில் சிலைகளை தமிழக அரசும், போலீஸ் துறையும் எவ்வாறு பாதுகாக்கும்' என, ஹிந்து முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.

அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:

தமிழகத்தில், 300 கோடி ரூபாய் மதிப்பிலான, 41 சிலைகளை கடத்தி சென்ற வழக்குகளின் ஆவணங்கள், போலீஸ் ஸ்டேஷன்களில் இருந்து காணாமல் போயுள்ளன. இதுதொடர்பான வழக்கு விசாரணையின் போது, தமிழக அரசை கண்டித்ததுடன் மட்டுமல்லாமல், தமிழக உள்துறை செயலர் நேரில் ஆஜராக வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சிலைகளை கண்டுபிடிக்க முடியாத நிலையில் உள்ள தமிழக அரசும், போலீஸ் துறையும், இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய அறநிலையத்துறை அதிகாரிகளும் மெத்தனமாக உள்ளனர். இதை விட, வழக்குகளின் ஆவணங்கள் போலீஸ் ஸ்டேஷன்களிலேயே காணாமல் போயுள்ளன என்ற, அவலம் அரங்கேறி இருப்பது வருத்தத்துக்குரிய விஷயம்.தமிழக அரசாலும், போலீஸ் துறையாலும், வழக்கு ஆவணங்களையே பாதுகாக்க முடியவில்லை என்றால், எப்படி கோவில்களும், சிலைகளும் பாதுகாக்கப்படும்? சிலை திருட்டு வழக்கு தொடர்பான ஆவணங்களை பாதுகாக்க தவறிய, போலீஸ் அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மெத்தனமாக இருந்த தமிழக அரசையும், அறநிலைய துறையையும் கண்டிக்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

Kavitha Sivakumar SG
டிச 23, 2024 18:49

thirudan kitta gajaana saavi. verenna nadakkum


V RAMASWAMY
டிச 23, 2024 15:12

இம்மாதிரி அவல நிகழ்வுகளை வைத்துத்தான் தமிழகம் எதிலும் முதல் இடம் பிடிக்கிறது என்று சொல்கிறார்களோ ?


ஆரூர் ரங்
டிச 23, 2024 14:12

ஆலய திருமேனிகள், சிற்பங்களின் முழு விவரங்களை இன்னும் அறநிலையத்துறை ஆவணப்படுத்தி முடிக்காததால் புதுச்சேரி ஃபிரஞ்சு இன்ஸ்டிட்யூட் டில் உள்ள பழைய புகைப்படங்களை நம்பி காணாமற் போனவற்றைத் தேடுகிறார்கள். அன்னிய நாடுகளில் சிக்கிய பல சிலைகளின் படங்களைக் காண்பித்தால் கூட எந்த ஆலயத்தினுடையது என்று துறையால் அறுதியிட்டுக் கூறமுடியவில்லை. அதாவது காணாமற்போனதே தெரிவதில்லை. ஆனால் ஆலயங்களின் வருமானத்திலிருந்து தயக்கமேயில்லாமல் பல நூறு கோடிகளை தணிக்கைக் கட்டணமாக எடுத்துக் கொள்கிறது. வெளித்தணிக்கை இதுவரை நடந்ததேயில்லை. இன்னும் இவர்களுக்கு வாக்களிப்பது இறைவனுக்கு நாம் செய்யும் துரோகம்.


pmsamy
டிச 23, 2024 13:05

நல்லா புலம்பு உனக்கு வேற என்ன தெரியும்


V வைகுண்டேஸ்வரன்
டிச 23, 2024 12:55

ஒன்றிய பாதுகாப்பு ஆபீஸில் இருந்தே ரபேல் விமான ஆவணங்கள் காணாமல் போன போது, காடேஸ்வரா வும் அவரது அடிப்பொடிகளும் கூட காணாம போயிருந்தாங்களோ??


ஸ்டாலின் ::"நான் திராவிட இனத்தை சேர்ந்தவன்"
டிச 23, 2024 12:19

அய்யா 900 கோடியல் கட்டிய சிவாஜி சிலை இடிந்ததே, மத்திய பிரதேசில் 800 கோடியில் கட்டிய சிவன் சிலை ஒரு மழைக்கு சுக்கு நூறாக இடிந்து விழுந்ததே இது இரண்டும் மோடியின் சாதனைகள்


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
டிச 23, 2024 13:07

ஏன் அந்த இரண்டு சிலைகளையும் கடத்தலாம் என்று திட்டம் ஏதாவது இருந்ததா? திருட்டை கண்டு பிடிக்க வேண்டிய காவல் நிலையத்தில் திருட்டு. இதுவும் மோடியின் சாதனை தான். அன்னை இந்திரா போல் ஆர்டிகள் 370 உபயோகப்படுத்தி கவர்னர் கையில் ஆட்சி சென்றிருந்தால் ஆவணங்கள் காணாமல் போயிருக்காது அல்லது திருடியவனே திரும்ப வந்து வைத்திருப்பான்.


V வைகுண்டேஸ்வரன்
டிச 23, 2024 10:34

காடேஸ்வரா.. வா தலைவா.. எங்கடா ஆளைக் காணோமே, ராஜஸ்தான் கவர்னர் லாம் வந்து ஸ்கோர் பன்றாரே ன்னு பார்த்தேன். இவரும் வந்துட்டார். சூப்பர் சூப்பர் என்டர்டெயின்மென்ட் தான்.


ghee
டிச 23, 2024 11:45

வாங்க வாங்க ஆபீஸர்...எங்களுக்கு நீங்கதான் மெயின் டைம் பாஸ்....


Mettai* Tamil
டிச 23, 2024 12:12

தமிழ் நாட்டில் சிலை கடத்துவதும் ,ஊழல் செய்வதும் பின் விஞ்ஞான ரீதியில் ஆதாரங்களை அழிப்பதும் உங்களுக்கு சூப்பர் என்டர்டெயின்மென்ட் தான். மத தீவிரவாதியினால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதும் , அந்த தீவிரவாதியை ஊர்வலமாய் எடுத்து போய் கொண்டாடுவதும் உங்களுக்கு சூப்பர் என்டர்டெயின்மென்ட் தான். உங்களோட சூப்பர் என்டர்டெயின்மென்ட் ரொம்ப நாள் ஓடாது. காலம் மாறும் களத்தில் அண்ணாமலை இருப்பார் . நடக்க இருப்பதும் சூப்பர் சூப்பர் என்டர்டெயின்மென்ட் ஆகத்தான் இருக்கும் ..தப்ப முடியாது ...


Sidharth
டிச 23, 2024 10:31

நொங்கெடுத்தா தன்னால சிலை திரும்பி வரும்


Sidharth
டிச 23, 2024 12:15

யாரை சொன்னேன்னு


nisar ahmad
டிச 23, 2024 09:57

ஆவனங்கள் கானவில்லையென்று விடியா பஜகா அரசு கூறிய போது இவர்கள் ....


N.Purushothaman
டிச 23, 2024 08:33

ஆவணங்கள் மாயமாகிறது ஒரு கொலைக்குற்றம் அல்ல ... முரசொலி கட்டிட விஷயத்தில் அரசிடமிருந்து மாயமாகாத ஆவணமா ?


V வைகுண்டேஸ்வரன்
டிச 23, 2024 12:17

ஒன்றிய பாதுகாப்பு ஆபீஸில் இருந்தே ரபேல் விமான ஆவணங்கள் காணாமல் போன போது, காடேஸ்வரா வும் அவரது அடிப்பொடிகளும் கூட காணாம போயிருந்தாங்க.


N.Purushothaman
டிச 23, 2024 15:34

செய்திக்கு உண்டான கருத்தை பதிவு செய்ய முடியலைங்கிறது நல்லா தெரியுது .....இந்த திசை திருப்புவது தோசை திருப்புவது எல்லாம் இங்கே வேண்டாம் ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை