வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இதுக்கெல்லாம் இழப்பீடு வழங்க முடியாது. கள்ளச் சாராயம் குடித்து இறந்தால் உடனடியாக இழப்பீடு வழங்கப்படும், படும், டும்.
மேலும் செய்திகள்
தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட ஆலோசனை கூட்டம்
10-Oct-2024
கோவை ; வனவிலங்குகளால் பாதிக்கப்பட்டு இறக்கும் விவசாயிகளுக்கு மத்திய பிரதேச அரசு இருபத்தைந்து லட்சமும், கர்நாடக அரசு பதினைந்து லட்சமும் வழங்கி வரும்போது, தமிழக அரசு மட்டும் ஐந்து லட்சம் ரூபாயை வழங்கி வஞ்சிப்பதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவன தலைவர் ஈசன் முருகசாமி அறிக்கை:கள்ளச்சாராயம் குடித்து இறப்பவர்களுக்கு, 10 லட்சம் ரூபாய் கொடுக்கும் தமிழக அரசு, 130 கோடி மக்களுக்கு உணவு அளிக்கும் விவசாயிகளை யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் தாக்கி இறந்து போனால், 5 லட்சம் ரூபாய் மட்டுமே வழங்கி வஞ்சிக்கிறது. தமிழக விவசாயிகளின் உயிரை மிக மலிவாக தமிழக அரசு நினைப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும். விவசாயிகளின் ஒட்டு மொத்த மகசூலில், 23 சதவீதத்தை மயிலும், காட்டுப்பன்றியுமே சேதப்படுத்துவதாக அரசின் அறிக்கை தெரிவிக்கிறது.கேரளாவில் சமீபத்தில் காட்டுப்பன்றியை ஊராட்சி மன்ற தலைவர்களே சுட்டுக் கொல்ல அதிகாரம் வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால், காட்டுப்பன்றிகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் சேதம் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது.இது குறித்து உண்மை நிலையை தெரிந்து கொள்ள தமிழக அரசு குழு அமைத்து, அக்குழு கேரளாவுக்கு ஆய்வுக்கு சென்று அறிக்கை சமர்பித்தது. ஆறு மாதங்கள் ஆகியும் இதுவரை எவ்வித அறிவிப்போ நடவடிக்கையோ இல்லை.ஆனாலும் வனவிலங்குகளால் பயிர்களுக்கும், மகசூலுக்கும் ஏற்படும் சேதங்களுக்கு சொற்ப அளவிலேயே தமிழக அரசு இழப்பீடு வழங்குகிறது. நிலம் கையகப்படுத்தும் போது தென்னை மரத்துக்கு 72,000 ரூபாய் வழங்கும் தமிழக அரசு, யானைகள் அதே தென்னை மரத்தை பிடுங்கி அழிக்கும்போது, 500 ரூபாய் மட்டுமே வழங்கி விவசாயிகளை வஞ்சிக்கிறது. தமிழக அரசு விவசாயிகளின் நலன் காக்கும் அரசு என்றால் விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு, வனவிலங்குகள் தாக்கி இறப்பவர்களுக்கு இழப்பீடாக, 25 லட்சம் ரூபாயும், காட்டுப்பன்றியை சுட்டுக்கொல்ல அனுமதியும் வழங்க வேண்டும்.இவ்வாறு தமிழக அரசுக்கு, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுக்கெல்லாம் இழப்பீடு வழங்க முடியாது. கள்ளச் சாராயம் குடித்து இறந்தால் உடனடியாக இழப்பீடு வழங்கப்படும், படும், டும்.
10-Oct-2024