உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போதையில் மனைவியை கொன்ற கணவன் கைது

போதையில் மனைவியை கொன்ற கணவன் கைது

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை அருகே சரபோஜிராஜபுரத்தை சேர்ந்தவர் வடிவேல், 47.இவரது மனைவி கவிதா, 38. இவர்களுக்கு, 13, 9 வயதில் குழந்தைகள் உள்ளனர். தஞ்சாவூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து மொத்தமாக வைக்கோல் வாங்கி, விற்பனை செய்து வந்தனர். வைக்கோல் விற்பனை தொடர்பாக, நேற்று முன்தினம் இரவு, கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுஉள்ளது.மது போதையில் இருந்த வடிவேல், ஆத்திரத்தில் அருகில் இருந்த மூங்கில் கட்டையால் கவிதாவை கடுமையாக தாக்கினார்.பலத்த காயமடைந்த கவிதா சம்பவ இடத்திலேயே இறந்தார். அய்யம்பேட்டை போலீசார், வடிவேலை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை