உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரபாகரன் கொடுத்த சயனைடு குப்பி இன்றும் வைத்திருக்கிறேன்: வைகோ..

பிரபாகரன் கொடுத்த சயனைடு குப்பி இன்றும் வைத்திருக்கிறேன்: வைகோ..

தர்மபுரி: ''தி.மு.க.,விடம் ஆறு எம்.எல்.ஏ., சீட்டுக்காக நான் காத்து கிடக்கவில்லை,'' என, தர்மபுரியில் நடந்த ம.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச்செயலர் வைகோ பேசினார்.கூட்டத்தில் வைகோ பேசியதாவது:நான் மாநில கல்லுாரியில் படித்தபோது, மாணவர்கள் கூட்டத்தில் பேசியதை பார்த்து, முன்னாள் முதல்வர் காமராஜர் என்னை காங்கிரசில் சேர அழைத்தார். ஆனால், நான் தி.மு.க.,வில் இணைந்து விட்டதாக கூறி மறுத்து விட்டேன். மிசா சட்டத்தில் கைதாகி, கடைசியாக விடுதலையானது நான் தான். தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட பின், ம.தி.மு.க.,வை துவங்கினேன். அப்போதும் நான், தி.மு.க.,வை எதிர்க்கவில்லை. ஜெயலலிதாவை எதிர்த்து அரசியல் செய்வதாக அறிவித்தேன். அ.தி.மு.க.,வுடன் கூட்டணி என்ற முடிவு தவறாக முடிந்து விட்டது. இலங்கையில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை சந்தித்தபோது, அவர் வைத்திருந்த இரண்டு சயனைடு குப்பிகளில் ஒன்றை எனக்கு அணிவித்தார். அதை நான் இன்னமும் பத்திரமாக வைத்துள்ளேன். ஹிந்துத்துவா சக்திகளை தமிழகத்தில் நுழைய விடக்கூடாது என்பதற்காக, தி.மு.க.,வை ஆதரித்து வருகிறேன். ஆறு சீட்டுக்காக காத்து கிடக்கவில்லை.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ஜூலை 18, 2025 06:16

ஒருமாபெரும் போராளி கொடுத்த பரிசை பயன்படுத்தாமல் அலங்காரத்திற்கு வைத்திருப்பது நல்லதா ? வைகோ சார் ...அதுதான் அவருக்கு செய்யும் மரியதையா ?


சமீபத்திய செய்தி