உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய அரசுக்கும், தமிழகத்திற்கும் இடையே பாலமாக செயல்படுவேன்: முருகன் பேட்டி

மத்திய அரசுக்கும், தமிழகத்திற்கும் இடையே பாலமாக செயல்படுவேன்: முருகன் பேட்டி

சென்னை: மத்திய அரசுக்கும்- தமிழகத்திற்கும் இடையே ஒரு பாலமாக செயல்படுவேன் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட பிறகு, முருகன் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு பா.ஜ.,வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தின் பிரதிநிதியாக செயல்பட எனக்கு, பிரதமர் மோடி வாய்ப்பு கொடுத்துள்ளார். 2047 ல் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா இருக்கும். அதில் பணியாற்ற எனக்கு ஒரு வாய்ப்பை மோடி அளித்துள்ளார். மத்திய அரசுக்கும், தமிழகத்திற்கும் இடையே ஒரு பாலமாக செயல்படுவேன். முன்பை போல் தமிழகத்திற்கு பெரிய திட்டங்கள் கொண்டு வரப்படும். தவறான மற்றும் பொய்யான தகவல்களை பரப்புபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு முருகன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

கரன் தாகூர்
ஜூன் 15, 2024 12:35

போங்க.. போய் மத்திய பிரதேசத்தில்.பாலமா இருங்க.


Easwar Kamal
ஜூன் 14, 2024 23:26

இந்த UNFIT கு எல்லாம் அமைச்சர் பதவி ஒழுங்கா தமிழ் கூட பேச தெரியாது இந்த பிஜேபி தமிழகத்தை அவமான படுத்தது இதன் மூலம் தெரிஞ்சுக்கடலாம். திறமையான்ற்வகள் எல்லாம் கவர்னர் பதவி குடுத்து அனுப்பி விடுகிறார்கல். பிஜேபிக்கு இனி பெரிய பொற்காலம் எல்லாம் கிடையாது இறங்கு முகம்தான்.


ஆரூர் ரங்
ஜூன் 15, 2024 10:44

இத்தனை சாதிவன்மத்தையும் பொறுத்துக் கொண்டு பொறுமையாக அமைச்சராக தொடர்ந்து செயலாற்றுவதைப் பாராட்டியே ஆக வேண்டும்


Jysenn
ஜூன் 14, 2024 23:23

Who is this new joker? There are some people with vested interest or conflict of interest who will not permit the growth of BJP in the state. If his ears are not pulled up this person will do more harm to the party.


Siva
ஜூன் 14, 2024 20:59

நீங்க அடுத்த எலேஇக்சன் லே ஜெயிக்க பாருங்க .பாலம் ஒன்னும் வேண்டாம்


ஜோர்ஜ்
ஜூன் 14, 2024 20:40

இற்றனை வருஷம் மந்திரியா இருந்து நல்லா திட்டினீங்க. கெவுனர் ரேஞ்சுக்கு போகாம இருங்க.


venugopal s
ஜூன் 14, 2024 20:28

நாங்கள் கட்டு மரத்தின் மீதேறியே பயணித்தவர்கள், பாலத்தின் மீது பயணிக்க மாட்டோமா?


raju
ஜூன் 15, 2024 00:31

வேற leval தல நீங்க ???


M Ramachandran
ஜூன் 14, 2024 19:32

தமிழகத்தை பொருத்த வரைக்கும் அண்ணாமலையிடமே அதைய்ய விட்டு விடுங்கிகள் யாரும் குட்டையை குழப்ப வேண்டாம்.


Indian
ஜூன் 14, 2024 19:12

இதுவரை பாலமாக இருந்ததினால் தான் தேர்தலில் தோல்வியுற்றிகள் .....


Vathsan
ஜூன் 14, 2024 17:53

பாலமா இருந்தா எல்லாரும் ஏறி மிதிச்சுட்டு போயிருவாங்க முருகா.. தமிழக மக்கள் மத்திய அரசுக்கு தரும் நிதியை திருப்பி 27% தான் தர்றீங்க, ஒழுங்கா நியாயமா தர வேண்டிய நிதியை தந்தாலே போதும் தமிழ்நாடு முன்னேறும். அதை செய்ய சொல்லி நிம்மியை நிர்பந்தியுங்கள்.


Sri eservice
ஜூன் 14, 2024 17:33

பாலத்துக்கு டோல் கேட் & டோல் கட்டணம் உண்டா ?


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ