உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க.,வையும் பா.ஜ.,வையும் ஒழிப்பேன்: சீமான்

தி.மு.க.,வையும் பா.ஜ.,வையும் ஒழிப்பேன்: சீமான்

மதுரை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டி:செம்மொழிக்கும் கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம். தமிழ் செம்மொழியாக இருந்ததா அல்லது கருணாநிதி சொன்னதால் செம்மொழி ஆனதா?கீழடியில் இரண்டு ஏக்கர் மட்டும் தோண்டி, மூடியது ஏன்? அதற்கு மேல் தோண்டினால், தமிழர்களின் தொன்மை தெரிந்துவிடுமா. பா.ம.க.,வில் அன்புமணி, ராமதாசிற்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடு கட்சி பிரச்னை. அதை சரி செய்யணும். நானும், இருவரையும் சந்திப்பேன். பா.ஜ., - தி.மு.க.,வை ஒழிக்க வேண்டும் என்கிறது. தி.மு.க., - பா.ஜ.,வை வளர விடக்கூடாது என்கிறது. நான் இருவரையும் ஒழிப்பேன்; அதனால்தான் நீண்ட நாட்களாக, தனி ஆளாக நிற்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Nagarajan S
ஜூன் 29, 2025 19:04

அதனால் தான் யாருடனும் கூட்டணி அமைக்காமல் தனியாக தேர்தலை சந்தித்து அனைத்து தொகுதிகளிலும் தோற்கிறது நாம் தமிழர் கட்சி


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூன் 29, 2025 08:53

இது தான் உனக்கு கடைசி தேர்தல்.. கட்சியை ஆரம்பித்து நிறைய பணம் சேர்த்திருப்பார் இனி இவரின் செல்வாக்கு மக்களிடம் சரிவதால் கட்சி எனும் கடையை சாத்திவிட்டு தெரிந்த வேலையான நடிப்பு இயக்கம் என்று கிளம்பி விடுவார்.. என்ன லட்சியத்திற்காக கட்சியை ஆரம்பித்தோம் என்று அவருக்கும் தெரியல. இவரை ஏன் ஆதரிக்கிறோம் என்று மக்களுக்கும் புரியல.....!!!


R.MURALIKRISHNAN
ஜூன் 29, 2025 04:56

ஊறுகாய் ஊறுகாய்தான்.கனவில் கூட உன்னால் முடியாது சீமான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை