வாசகர்கள் கருத்துகள் ( 51 )
To me, EPS approach is truly a genuine one to save ADMK party from onslaughts from both BJP and other infidels expelled from the erstwhile Jayalalitha ruled party. Look no further than Maharashtra where Eknath Shinde is struggling now to save his party from BJP's Fadnavis. ADMK cadre should unite under EPS's leadership and work for the party's return to theTN Assembly with good margin.
ஜெயலலிதாவுக்கு இரண்டு உதவியாளர்கள் இருந்தார்கள் ஒருவர் அரசு நிர்வாகத்திற்கு ஷீலா பாலகிருஷ்ணன். மற்றோருவர் வீட்டு நிர்வாகத்திற்கு சசிகலா. அரசு நிர்வாகம், மாநிலத்தின் வளர்ச்சி, திட்டங்கள், செயல்பாடுகள், அரசு உயர்பதவி அதிகாரிகளை வழிநடத்துவது போன்றவற்றை கவனிக்க ஜெயலலிதாவுக்கு உதவியாக இருப்பவர் ஷீலா பாலகிருஷ்ணன். அது போல ஜெயலலிதாவின் வீட்டு நிர்வாகம், சமையல் துணிதுவைப்பது, தோட்டத்தை கவனிப்பது, வீட்டுக்கு வருபவர்களை கவனிப்பது, ஓட்டடை அடிப்பது, வீடு கழுவி விடுவது இதற்கு சசிகலா. மன்னார்குடி குடும்பத்தை சேர்ந்த யாரையும் ஜெயலலிதா கட்சிக்குள் அண்டவிடவே இல்லை. தள்ளியேதான் வைத்து இருந்தார். இப்போதும் சசிகலா அரசியலில் இல்லை. ஜெயலலிதாவால் கட்சியை விட்டு துரத்திவிடப்பட்ட டிடிவி தினகரன் ஜெ மறைவுக்கு பிறகு சசிகலாவுடன் அட்டை போல் ஓட்டிக்கொண்டே கட்சிக்குள் நுழைந்தார். சசிகலா சிறைக்கு சென்றவுடன் அதிமுகவினர் இபிஎஸ் - ஓபிஎஸ் இருவரும் சேர்ந்து டிடிவியை கட்சியை விட்டு துரத்திவிட்டார்கள். அப்போதே மன்னார்குடி குடும்ப சகவாசம் முடிந்துவிட்டது. டிடிவி தினகரன் தனியாக கட்சி ஆரம்பித்து நடத்திக்கொண்டு இருக்கார். அதன் பிறகு அதிமுக கூடவிருந்தே குழிபறித்துக்கொண்டு இருந்த ஓபிஎஸ்ஸை கட்சியை விட்டு துரத்திவிட்டுவிட்டார்கள். இப்போதுதான் அதிமுக சரியான ஃபார்முக்கு வந்து இருக்கிறது. இனி நடப்பது யாவும் நன்மைக்கே. இனி அதிமுகவினர் தைரியமாக அமித்ஷா கனிமொழி கள்ளக்கூட்டணியை, பாஜக திமுக கள்ள உறவை, டீலிங்க்ஸை மேடையில் போட்டு பொளக்க வேண்டும்.
இ பி எஸ், அதிமுக வுக்கு ஆப்பு அடிக்கிறாரோ இல்லையோ தெரியவில்லை. ஆனால் இவரது நடத்தையால் தமிழ்நாடு பாஜக வுக்கு ரிவெட் அடிக்கறார். நெம்பக் கூட முடியாது. இனி ரெயிடு, இரட்டை இலை சின்னம் முடக்குவது என்று பாஜக ஏதாச்சும் ட்ரை பண்ணும். மசிய மாட்டார். எப்படியாவது அதிமுக முதுகில் ஏறி தேர்தல் குளத்தில், சாரி, களத்தில் இறங்கத் தவிக்கும் பாஜக பாவம்.
பழனி ஆட்சியில் இருக்கும்பொழுது திமுக எதற்கெடுத்தாலும் குறை கூறினர். எடுபிடி அரசு, கையால் ஆகாதவர் பழனிச்சாமி, ஆமாம் சாமி என்றும் அவருடைய பிறப்பை கொச்சைப் படுத்தியும் பலவாறாக விமர்சனம் செய்தனர். அரசியல் பண்ணாமல் அவியலா பண்ணுவோம் என்றனர். இதுபோன்ற சுடுகணைகள் எதுவுமே இவருக்கு பெரிதாகப்படவில்லை. ஆனல் தன் கட்சியிலுள்ளோரிடம் எதற்கு இத்தனை கடுப்பாக இருக்கிறர். ஜெயலலிதா இருந்திருந்தால் இது போன்ற நிகழ்வுகள் நடக்குமா? பழனி எதோச்சதிகாரத்துடன் முடிவுகள் எடுப்பது அதிமுக மைய்யத்தையும் விட குறைவான செல்வாக்குடன் இருக்கிறது. இரு மொழிக்கொள்கை, புதிய கல்வித்திட்டம் போன்ற பல பிரச்சினைகளை திமுகவும் பாஜகவும் கையிலெடுத்து தினமும் செய்திகள் கொடுத்துக்கொண்டு இருக்கின்றர். இந்த பழனி எங்கே இருக்கிறர் என்றே தெரியவில்லை. ஒருவேளை கொடநாடு குடைச்சலால் அமைதியாக இருக்கிறரோ என எண்ணத் தோன்றுகிறது. உண்மையான அதிமுக தொண்டர்கள் விரக்தி அடைந்திருக்கின்றனர்.
இந்த நபரின் தவறான கணிப்புகளினாலும் வழிநடத்தலாலும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவும் இவரும் காணாமல் போவது உறுதி
In his letter to cadres, it is unacceptable that EPS addresses Jayalalithaa by her name without any honorifics like Puratchi Thalaivar. Completely unacceptable
MGR உருவாக்கி வளர்த்த கட்சி EPS வயது 70 க்கு மேலாகிவிட்டது அவருக்கும் தெரியும் இதுதான் தனது கடைசி வாய்ப்பு என்று அதர்க்கு பின் கட்சி இருந்தாலென்ன போனாலென்ன என்று முடிவெடுத்து விட்டார்
கட்சியை அழிக்கத்தொடங்கிவிட்டார் இந்த பழனிசாமி . ஆண்டவனால் கூட இனி அதிமுகவை காப்பற்ற முடியாது.
அதிமுக .. அ - அட்டகாசம் செய்த தினகரன் கட்சி ..தி - மக்களை துன்புறுத்திய திருடிய சசிகலா கட்சி மு - முரட்டு EPS கட்சி க - கையாலாகாத OPS கட்சி என்று மாறிவிட்டது
கண்டிப்பாக கட்சியை அழிக்காமல் விடமாட்டேன் என்பதில் உறுதியாக எடப்பாடி உள்ளார். யாரோ ஆரம்பித்து, யாரோ வளர்த்தெடுத்த கட்சியை, இன்று பல உள்கூத்து வேலை பார்த்து, அபகரித்து ஆட்டம் போடும் எடப்பாடிக்கு 2026 தேர்தல் ஒரு பாடமாக அமையும். அவர் சொல்லும் ஆட்கள் ஒன்றும் தனி நபர்கள் இல்லையே. அவர்களுக்கு என்று ஒரு கூட்டம் உள்ளது என்பதை எடப்பாடி மறந்து விடக்கூடாது.
யாரோ ஆரம்பித்தது அல்ல..புரட்சிதலைவரால் உண்டாக்கியது.எடப்பாடி முதல் அனைவரும் எம் ஜி ஆரால் மட்டுமே வளர்ந்தார்கள்.இடையில் பல துரோகிகள் கட்சியை விட்டு வெளியேறினாலும் இன்றும்எடப்பாடி தலைமையில்தான் கட்சி நிக்குது.ஓபிஎஸ்..டிடிகே போன்றவர்கள் ஒரு தேசிய கட்சியின் தூண்டுதலில்தான் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள் என்பது அஇஅதிமுகவினருக்கும் தெரியும்.கர்மயுத்தம் என்ற பெயரில் முதலில் கலகத்தை தொடங்கியவரே ஓபீஸ்தான்.தாமரை கட்சியினரின் கணவு பலிக்காது.உண்மையாவே அஇஅதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் ஆர்வம் இருந்தால் உட்கட்சி விவகாரத்தில் தலையிடாமல் உங்க கட்சிய வளர்க்கும் வேலய பாருங்க.