உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., மாற்றம்: தயாராகிறது அடுத்த பட்டியல்

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., மாற்றம்: தயாராகிறது அடுத்த பட்டியல்

சென்னை: தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை இடமாற்றம் செய்வது தொடர்பான பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.லோக்சபா தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் துவங்கியுள்ள நிலையில், கலெக்டர்கள், ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். ஆனால், மூத்த அமைச்சர்கள் பொறுப்பு வகிக்கும் சில துறைகளில் நீண்ட காலமாக பணிபுரியும் அதிகாரிகள் இன்னும் இடமாற்றம் செய்யப்படவில்லை.இது, தேர்தல் கமிஷன் கவனத்திற்கு சென்றுள்ளது. அவ்வாறு உள்ளவர்கள் பட்டியலை, தேர்தல் கமிஷன் தயாரித்து வருகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததும், அந்த அதிகாரிகள் துாக்கி அடிக்கப்பட உள்ளனர். மேலும் பல அமைச்சர்கள், தேர்தலை சந்திக்க ஏதுவாக, தங்கள் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளை இடமாற்ற வலியுறுத்தியுள்ளனர்.அதிகாரிகளை இடமாற்றத்திற்கான நீண்ட பட்டியல் தயாராகி வருகிறது. இப்பட்டியல் விரைவில் வெளியிடப்பட உள்ளது. இப்பட்டியலில், மாநகராட்சி கமிஷனர்களும் இடம்பெற உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

விடியல்
ஜன 29, 2024 13:58

இதிலும் விஞ்சானபூர்வ ஊழல் கட்சி தங்களுக்கு வேண்டப்பட்ட அதிகாரிகள் தேர்தலில் உதவும் வகையில் வேண்டிய இடத்துக்கு மாற்றல்செய்வார்கள்.நேர்மையான அதிகாரிகள் மக்கள் நலனில் அக்கறை கொண்ட அதிகாரிகள் டம்மி இடங்களில் உட்கார வைத்து விடுவார்கள். கட்சி சார்பில் பணியாற்றும் அதிகாரிகள் யார் யார் என்று தெரிந்து அவர்களை தேர்தல் ஆணையம் தேர்தலில் அது சம்பந்தமான வேலை செய்ய முடியாத வாறு டிரான்ஸ்பர் செய்ய வேண்டும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை