உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு சிறை தண்டனை

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு சிறை தண்டனை

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்கு ஆளான ஐ.ஏ.எஸ்., அதிகாரி அன்சுல் மிஸ்ராவுக்கு, ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை ஐகோர்ட் நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டுள்ளார்.பொது நோக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்ட தங்கள் நிலம், அதற்குப் பயன்படுத்தப்படாமல் அப்படியே விடப்பட்டிருந்த காரணத்தால், அதை மீண்டும் தங்களுக்கே வழங்க கோரி லலிதாம்பாள் மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு செயல்படுத்தப்படாததை தொடர்ந்து அன்சுல் மிஸ்ரா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தின் முன்னாள் செயலாளர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி அன்சுல் மிஸ்ரா. நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்கு ஆளான, இவருக்கு இன்று (மே 23) தண்டனை விபரங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து சென்னை ஐகோர்ட் நீதிபதி வேல்முருகன் கூறியதாவது:* நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதால், ஐ.ஏ.எஸ்., அதிகாரி அன்சுல் மிஸ்ராவுக்கு, ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.* இருப்பினும், அப்பீல் செய்வதற்கு வாய்ப்பளிக்கும் வகையில், தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.* ஐ.ஏ.எஸ்., அதிகாரி அன்சுல் மிஸ்ரா தனது சம்பளத்திலிருந்து இரண்டு வயதான மனுதாரர்களுக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.* 30 நாட்களுக்குள் அன்சுல் மிஸ்ரா மேல்முறையீடு செய்ய விரும்பவில்லை என்றால், அவரை தண்டனை அனுபவிக்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு சென்னை ஐகோர்ட் நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டுள்ளார். அன்சுல் மிஸ்ரா தற்போது நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Kanns
மே 23, 2025 23:13

Bold Judgement. Require Frequently& More to Punish PowerMisusing RulingAlliance Parties, StoogeOfficials.


GMM
மே 23, 2025 21:07

அரசியல் கட்சிகள் அதிகாரிகளை போலீஸ் மிரட்டல், வழக்கு மூலம் அடிபணிய செய்து விட்டனர். மந்திரி சொல் ஏற்று ஊழல் செய்தால் தான் மாநில அரசு பணி? மறுத்தால் வழக்கு, சிறை, இழப்பீடு. அரசியல் சார்பு அதிகாரிகள் வழக்கில் இருந்து தப்பிக்க முடியும்?


Anantharaman Srinivasan
மே 23, 2025 21:05

நீதிமன்ற அவமதிப்பு செய்த IAS அதிகாரிக்கு ஒரு மாதம் சிறை தண்டனை என்ற தீர்ப்பு. அப்பீல் செய்து தப்பித்துக்கொள்ள ஒருமாதம் நிறுத்தி வைப்பு. அப்புறம் எதற்கு ஒரு மாதம் தண்டனை என்று சால்ஜாப்பு. ?


நசி
மே 23, 2025 20:08

ஓரு மாத அவகாசம்; அவர் ஜெயில் யூனிபார்ம் தைத்து கொள்ள ,மற்றும் செந்தில் பாலாஜி பள்ளியில் ஜெயில் மானேஜ்மென்ட் டிகிரி வாங்க...


sridhar
மே 23, 2025 20:02

இந்த IAS IPS அதிகாரிகள் நீதிமன்றத்தை விட ஆட்சியாளர்களிடம் தான் பயப்படுகிறார்கள் . இனிமேலாவது கட்சிக்கு வேலை செய்யாமல் நாட்டுக்கு வேலை செய்யட்டும் .


Ramesh Sargam
மே 23, 2025 20:00

நீதிமன்ற உத்தரவுகளை மீறும் அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள் மீதும் இப்படி நீதிமன்றம் கறாராக, கடுமையாக நடந்துகொண்டால் சிறப்பாக இருக்கும்.


Varadarajan Nagarajan
மே 23, 2025 19:39

மிக மிக மிக உற்சாகத்துடன் வரவேற்கத்தக்க நல்ல தீர்ப்பு. பல வழக்குகளில் நீதிமன்றத்தின் உத்தரவுகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது. பாதிக்கப்பட்ட பலர் மேல்முறையீடு செய்யவேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுகிறார்கள். ஏதாவது அரசியல் அழுத்தத்தால் அவர்கள் செயல்படமுடியவில்லையென்றால் நீதிமன்றத்தில் வெளிப்படையாக தெரிவிக்கலாம். ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் அரசியல் வியாதிகளாகவே செயல்பட ஆரம்பித்துவிட்டார்கள். எனவே அவர்களுக்கு இதுபோன்ற தண்டனைகள் வழங்குவது மிக மிக வரவேற்கத்தக்கது.


rama adhavan
மே 23, 2025 18:57

அப்படி போடு... போடு... போடு.... ஓரு 6 மாதம் போடு.


Padmasridharan
மே 23, 2025 16:43

வண்டிகளில் கறுப்பு கண்ணாடி கூடாது இதனால் உள்ளிருப்பவர்கள் மது_மாது கடத்தல் தடுக்கப்படும் என்று சொல்லியிருந்தும் பல வண்டிகள் கருப்பு கண்ணாடியுடன் சுற்றுகின்றன இவர்களும் சட்ட நீதியை அவமதிப்பவர்கள், இதை கண்டும் காணாமல் விடும் காவலர்களுக்கு எப்பொழுது தண்டனை


Padmasridharan
மே 23, 2025 16:39

லஞ்சம் வாங்குவது சட்டப்படி குற்றம். . பொய்கள் சொல்வது குற்றம். . தவறான முடிவுக்கு தூண்டுதலும் குற்றம். . இப்படி இருக்க கடற்கரை போன்று பொது இடங்களில் காதலர்களை மிரட்டி அதட்டி இளைஞர்களிடம் இலஞ்சம் வாங்கி அதனால் அவர்கள் வீட்டில் பொய்கள் சொல்லவும் குற்றங்கள் அதிகரிக்க செய்த காவலர்கள் சட்டத்தை அவமதிக்கும் நீதி வழக்குகளுக்கும் இந்த மாதிரி தண்டனைகள் கொடுக்கவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை