உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ., மீண்டும் வந்தால் இந்தியா ஒற்றை சர்வாதிகார நாடாகும் : ஸ்டாலின் பேச்சு

பா.ஜ., மீண்டும் வந்தால் இந்தியா ஒற்றை சர்வாதிகார நாடாகும் : ஸ்டாலின் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தேனி: பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஒற்றை சர்வாதிகாரம் தான் நிலவும் என தேனி பிரசார கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.லோக்சபா தேர்தலையொட்டி தேனி லோக்சபா தொகுதி தி.மு.க, வேட்பாளர் தங்கத்தமிழ் செல்வன், திண்டுக்கல் லோக்சபா தொகுதி சி.பி.எம். வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோரை ஆதரித்து தேனி அடுத்த பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியது,பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அமைதியான இந்தியா, அமளியான இந்தியாக மாறும். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநில சட்டசபைகள் இருக்குமா என்பதே சந்தேகம் தான். ஜனநாயகம் இருக்காது.சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவாக்கம் செய்யப்போவதாக அறிவிக்கிறார் மோடி, மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தடையாக இருப்பதே மத்திய அரசு தான். மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணிகளுக்கு இன்னும் மத்திய அரசு நிதி தரவில்லை. மதுரை எய்ம்ஸ் போல சென்னை மெட்ரோ ரயில் திட்டம் நின்றுவிடக்கூடாது என்பதற்காக மாநில நிதியிலிருந்து மெட்ரோ ரயில் திட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தியா ஒற்றை சர்வாதிகாரம்

ஊழலை சட்டபூர்வமாக செய்யும் மோடி, ஊழலை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது. ஊழலுக்கு யுனிவர்சிட்டி கட்டி அதற்கு வேந்தராக மோடியை நியமித்தால் பொருத்தமாக இருக்கும். ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு, ஒரே உணவு என ஒற்றை சர்வாதிகார நாடாக இந்தியாவை பா.ஜ., மாற்றிவிடும்.திராவிட மாடல் ஆட்சியில் தமிழகம் வளர்ந்து கொண்டிருக்கிறது. இங்கு மோடி மஸ்தான் வேலை இங்கு எடுபடாது. தமிழ்நாட்டை வளர்க்க போகிறேன் என ஹிந்தியில் உறுதி மொழி எடுக்கும் பிரதமர் தமிழ்நாட்டை புறக்கணிக்கிறார். மோடிக்கு நாம் ஒன்றே ஓன்று தான் சொல்ல வேண்டும். அது வேண்டாம் மோடி என்பது தான். இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால், இந்தியா வளரும், தமிழகம் மேலும் வளரும். தி.மு.க, பிரதமர்களை, ஜனாதிபதிகளை உருவாக்கும் இயக்கம்.

பழனிசாமிக்கு அறிவுரை

லோக்சபா தேர்தலுடன், சட்டசபைக்கும் தேர்தல் வரும் என பழனிசாமி இலவு காத்த கிளி போல் காத்திருந்தார். மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டில்லி போராடிய போது அவர்களை புரோக்கர்கள் என அழைத்தவர் தான் பழனிசாமி. தினமும் காலையில் எழுந்தவுடன் பழனிசாமி, பத்திரிக்கை படிக்க வேண்டும். நாள்தோறும் பத்திரிகைகளில் வெளிவரும் தி.மு.க, அரசின் சாதனைகள், திட்டங்களை படியுங்கள். மத்திய அரசில் தி.மு.க, அங்கம் வகித்த போதெல்லாம் ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தது. காலை உணவு திட்டத்தால் பள்ளி மாணவர்களின் எடையும், பள்ளி வருகையும் அதிகரித்துள்ளது. அ.தி.மு.க.வை அழிக்க வெளியிலிருந்து யாரும் வரவேண்டியதில்லை. தி.மு.க., ஆட்சியில் மண்ணும் செழிக்கிறது. மக்களும் செழிக்கிறார்கள் என்பது தான் திராவிட மாடல் அரசு. தேனி தொகுதி வேட்பாளர் இந்த மண்ணில் மைந்தர், தங்கத்தமிழ் செல்வன் அரசியலில் நீண்ட அனுபவம் பெற்றவர். பார்லிமென்ட்டில் அவரது குரல் ஒலிக்க அவருக்கு வாக்களிக்க வேண்டும்.இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் முல்லை பெரியாறு அணை , பேபி ஆணைகள் பலப்படுத்தப்படும். விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். திண்டுக்கல், சபரிமலை இடையே ரயில் சேவை துக்கப்படும். சென்னை திண்டுக்கல்லுக்கு தனி ரயில் இயக்கப்படும். மாணவர்களின் கல்விக்கடன் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும். மாநிலங்களுக்கும், நாட்டு மக்களுக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையிலும், மாநில உரிமைகளை பாதுகாக்கும் வகையில் காங்., தேர்தல் அறிக்கை இருக்கும். இந்தியா கூட்டணி சாதனை செய்யும் கூட்டணி. நாடும் நமதே, நாற்பதும் நமதே.

அ.தி.மு.க.வை ஆட்டுவிக்கும் பா.ஜ.,!

'பெரா' என்ற வார்த்தையை தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தியவரே தினகரன் தான்; போயஸ் கார்டனுக்குள் நுழையக்கூடாது என்று ஜெயலலிதாவால் தடை செய்யப்பட்டவர் தினகரன். இப்போது வழக்குக்கு பயந்து மோடி வாஷிங் மெஷின் மூலமாக தேனிக்குள் நுழைந்திருக்கிறார்.பழனிசாமி, பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோர் பா.ஜ.,வின் தொங்கு சதைகள்!சொந்தமாக முடிவெடுக்க முடியாத கீ கொடுத்த பொம்மை போல் அ.தி.மு.க.,வை ஆட்டுவிக்கிறது பா.ஜ., இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 63 )

Ramesh Sargam
ஏப் 13, 2024 11:54

ஆக மொத்தத்தில் திமுக கூட்டணி வெற்றிபெறாது என்று தெரிந்துவிட்டது இந்த தலைவருக்கு திமுக தோற்கும் என்று புரிந்தால் சரி


S.V.Srinivasan
ஏப் 12, 2024 13:02

தவறே இல்லை சீனா, வடகொரியா நாடுகள் அமெரிக்காவே வியந்து பார்க்கும் அளவு உயர்ந்துள்ளது சர்வாதிகார ஆட்சியில்தான் அதுபோல் இந்தியாவும் வரும் தேர்தல் செலவுகள் மிச்சம்


venugopal s
ஏப் 11, 2024 18:09

பாஜகவை ஆதரிப்பது என்பது பேன் தொல்லையை போக்க கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொறிந்து கொள்வது போல என்று தமிழர்களுக்கு நன்கு தெரியும்!


பேசும் தமிழன்
ஏப் 11, 2024 11:44

எப்படி.... நீங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு.... தமிழ்நாடு எப்படி சர்வாதிகார நாடு போல் காட்சி அளிக்கிறது..... அப்படியா... கண்டிப்பாக இருக்காது... பிரதமர் அவர்கள் நாட்டை காப்பது போல்... தமிழ் நாட்டையும் மக்களையும் காப்பார்.


Davamani Arumuga Gounder
ஏப் 11, 2024 19:51

நான் சொல்ல நினைத்தேன் ஆனால், நீங்களே சொல்லி விட்டீர்கள் சதிச்செயல் செய்பவன் புத்திசாலி, அதை சகித்துக்கொண்டிருப்பவன் குற்றவாளி உண்மையை சொல்பவன் சதிகாரன் இது இங்கு ஆள்பவனின் அதிகாரம்" கடவுள் ஏன் கல்லானான்?


vijai seshan
ஏப் 11, 2024 11:03

இந்தியாவில் ஆண்டாள் இதைவிட கேவலமாக போகும்


ராமகிருஷ்ணன்
ஏப் 11, 2024 10:36

ஸ்டாலின் அளவுக்கு அதிகமாக புலம்புவதில் அர்த்தம் உள்ளது. கூட்டுகளவாணி காங்கிரஸ் மத்தியில் இருக்கும் போது சேர்ந்து அடித்த கொள்ளை பணம் கண்ணில் வந்து போகுது. மோடிஜி வந்த பிறகு அந்த மாதிரி சுருட்ட முடியல்லே என்ற ஏக்கம் தான் கோபமா வாயில் வெளிப்படுகிறது. மேலும் வட இந்திய தேர்தல் முடிவுகள் பி ஜே பி க்கு சாதகமாக இருப்பது திமுகவை வெறி கொள்ள வைக்குது. திமுகவின் வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்யும் இடங்களில் வரும் எதிர்ப்புகள் தேர்தல் முடிவுகளை தெரிவிக்கின்றன. அதனால் தான் வெறிபிடித்து திரியுரார்.


S.V.Srinivasan
ஏப் 11, 2024 10:15

இப்போ தமிழ் நாட்டிலும் சர்வாதிகாரி ஆட்சிதான் நடக்குது இந்த முறையும் பா ஜா க தான் வரும் என்று சொன்ன ஒரு கிளி ஜோசியக்காரரை அர்ரெஸ்ட் பண்ற அளவுக்கு மட்டமான ஆட்சிக்கு வேறென்ன பெயர் கொடுக்க முடியும்


Ashok
ஏப் 11, 2024 09:38

sarvaathikaari... you told many times that you are Saevaathikaari.. ha ha .. VIDIYAL Asthamanam starts


karunamoorthi Karuna
ஏப் 11, 2024 07:12

பிஜெபி வந்தால் திமுக குடும்பம் சிறைக்கு போகும் என்பது உறுதி


Mani . V
ஏப் 11, 2024 06:12

ஸ்டாலின்: "பாஜ, மீண்டும் வந்தால் இந்தியா ஒற்றை சர்வாதிகார நாடாகும் திமுக கூட்டணி ஆட்சிக்கு வந்தால், தமிழகம் ஒரு குடும்பத்துக்கு சொந்தமாகும் அந்த ஒரு குடும்பம் கருணாநிதி குடும்பம்"


krishnamurthy
ஏப் 11, 2024 06:57

உண்மை


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை