உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெற்றி பெற்றால் நல்ல தேர்தல்; தோற்றால் ஓட்டு திருட்டு என்கின்றனர்!

வெற்றி பெற்றால் நல்ல தேர்தல்; தோற்றால் ஓட்டு திருட்டு என்கின்றனர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

துாத்துக்குடி: 'வெற்றி பெற்றால், நல்ல தேர்தல்; வெற்றி பெறாவிட்டால், ஓட்டு திருட்டு நடப்பதாக சொல்கின்றனர்,' என தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா தெரிவித்தார்.துாத்துக்குடியில் அவர் அளித்த பேட்டி: கடந்த 2006 சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க., யாருடனும் கூட்டணி இல்லாமல், தனித்து போட்டியிட்டு தாக்கத்தை ஏற்படுத்தியது. அதேபோல, 2026 சட்டசபை தேர்தலில் த.வெ.க., தலைவர் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார். நம் நாட்டில், ஜி.எஸ்.டி.,யால் ஏற்கனவே பாதிப்பு நிலவும் சூழலில், அமெரிக்காவின் 50 சதவீத வரியால், பெரிய பாதிப்பு ஏற்படும். மத்திய அரசு, அமெரிக்காவிடம் பேசி, நம் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும்.தேர்தலில் வெற்றி பெற்றால் அது நல்ல தேர்தல் என சொல்கின்றனர். ஆனால், வெற்றி பெற முடியாமல் தோற்றுப்போனால், ஓட்டு திருட்டு நடக்கிறது, என குறை சொல்கின்றனர். தேர்தலில் பல பிரச்னை இருக்கிறது. நாடு முழுதுமே, 100 சதவீதம் சரியான தேர்தல் இன்றுவரை நடக்கவில்லை. நீதித்துறையும், தேர்தல் கமிஷனும், இதை சரிசெய்ய வேண்டும். இல்லாவிட்டால், தேர்தலில் நிற்பதே வேஸ்ட்.கடந்த தேர்தலில் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை, தி.மு.க., இன்னும் நிறைவேற்றவில்லை. அடுத்த தேர்தல் வருகிறது என்றவுடன் புதிது, புதிதாக பல அறிவிப்புகளை வெளியிடுகின்றனர். கச்சத்தீவை நாம் எப்போது இலங்கைக்கு விட்டுக்கொடுத்தோமோ அப்போதே நம் மீனவர்களின் வாழ்க்கை கேள்வி குறியாகிவிட்டது. கச்சத்தீவு மீட்பு தான் மீனவர்களுக்கு நிரந்தர தீர்வு என்பது தே.மு.தி.க.,வின் நிலைப்பாடு. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

ஜெய்ஹிந்த்புரம்
ஆக 30, 2025 17:42

அம்மிணிக்கு தேர்தல் முடிவு எப்படி இருந்தால் என்ன, பெட்டி பெருசா இருக்கணும் சரிங்க தானே அம்மிணி?


முருகன்
ஆக 30, 2025 14:57

விருதுநகர் தேர்தல் பற்றிய இவரின் கருத்து என்ன


Madras Madra
ஆக 30, 2025 11:18

இது ஒரு இம்சை


V Venkatachalam
ஆக 30, 2025 11:17

விரக்தியில் இந்த அம்மா உண்மையை சொல்லிட்டுது. விரக்தியில் சொன்னதுன்னாலும் உண்மைங்கிறதால பாராட்டுவோம்.


Abdul Rahim
ஆக 30, 2025 11:17

ஆமாங்க அண்ணியாரே ,விருதுநகரில் கூட ஒரு அம்மிணி தனது மகன் தோற்றுபோனவுடன் இந்த தேர்தல் முறையாக நடக்கவில்லை னு குய்யோ முறையோ னு ஒரே அழுகாச்சிங்க அண்ணியாரே அக்காங்க்க்க்.


Rameshmoorthy
ஆக 30, 2025 10:16

This lady do not understand the concept of GST and she thinks she was not paying any tax before GST How come she be the leader


baala
ஆக 30, 2025 10:16

இல்லை பணம் கொடுத்தால் நல்ல கட்சி இல்லை என்றால் பொய்யான செய்திகளை சொல்லுவது. இதுதான் இன்றைய அரசியலின் கேடுகெட்ட நிலை.


Ramesh Sargam
ஆக 30, 2025 09:56

வெற்றிபெற்றால் நல்ல வாக்கு இயந்திரம். தோற்றால் பாழாப்போன இயந்திரம்.


அரவழகன்
ஆக 30, 2025 09:53

நியாயமான பேச்சு...


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 30, 2025 09:05

கருங்காலிக்கோல் அம்மணியே, ஒரு கூட்டணியில் இடம்பிடித்து ஒரு தொகுதியில வெற்றிபெற்றுவிட்டால் அந்த கூட்டணி கொள்கை கூட்டணி, தோற்றுவிட்டால் நேற்றுவரை இகழ்ந்து வசைபாடிய கட்சி இன்றுமுதல் நல்ல கட்சி என்பதுதானே உங்கள் நிலைப்பாடாகவும் இருக்கிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை