உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருவாரூரில் சட்டவிரோதமாக இறால் பண்ணைகள்; ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையர் நியமனம்

திருவாரூரில் சட்டவிரோதமாக இறால் பண்ணைகள்; ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையர் நியமனம்

சென்னை; தி ருவாரூர் மாவட்டத்தில், சட்டவிரோதமாக இறால் பண்ணைகள் செயல்படுகின்றனரா என ஆய்வு செய்ய, வழக்கறிஞர் ஆணையரை நியமித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. திரு வாரூர் மாவட்டம் தில்லைவிளாகம், உதயமார்த்தாண்டபுரம் உள்ளிட்ட கிராமங்களில், விவசாய நிலங்களில் சட்டவிரோதமாக உள்ள இறால் பண்ணைகள் செயல்பட, இடைக்கால தடை விதிக்கக்கோரி, முத்துப்பேட்டை தாலுகாவை சேர்ந்த யோகநாதன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், 'மாவட்ட கலெக்டர் நேரடியாக அல்லது அதிகாரியை அனுப்பி சம் பந்தப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய வேண்டும். 'இறால் பண்ணைகள் முறையாக பதிவு இல்லாமல் செயல்படுவது கண்டறியப்பட்டால், உடனே அவற்றை மூட நடவடிக் கை எடுக்க வேண்டும். உரிம நிபந்தனைகள் மீறப்பட்டது கண்டறியப்பட்டால், உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். இந்த நடவடிக்கைகளை, 12 வாரங்களுக்குள் மேற்கொள்ள வே ண்டும்' என, கடந்த ஏப்., 28ல் உத்தரவிட்டது. இந்த உத்தரவை நிறைவேற்றவில்லை எனக்கூறி, திருவாரூர் கலெக்டர் வி.மோகனசந்திரனுக்கு எதிராக, யோகநாதன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, நீதிபதி டி.பரத ச க்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கிய 47 இறால் பண்ணைகள் கண்டறியப்பட்டு உள்ளன. 'அவர்களுக்கு உரிய நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அந்த விபரங்கள் மனுதாரருக்கும் தெரிவிக்கப்பட்டு உள்ளது' என, கலெக்டர் தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வி.காசிநாதபா ரதி ஆஜராகி, ''நீதிமன்ற உத்தரவை மீறி, சட்டவிரோதமாக, 300க்கும் மேற்பட்ட இறால் பண்ணைகள் செயல்படுகின்றன. ''கலெக்டர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தகவல்கள் மறைக்கப்பட்டு உள்ளன,'' என தெரிவித்து, விரிவான ஆதாரங் களுடன் பதில் மனுவை தாக்கல் செய்தார். இதை பார்வையிட்ட நீதிபதி, 'திருவாரூரில் தில்லைவிளாகம், உதயமார்த்தாண்டபுரம் உள்ளிட்ட பகுதிகளில், சட்டவிரோதமாக இறால் பண்ணைகள் செயல்படுகிறதா அல்லது நீதிமன்ற உத்தரவின்படி முழுமையாக அகற்றப்பட்டு விட்டதா என்பது குறித்து ஆய்வு செய்ய, வழக்கறிஞர் ஆணையர் பிரவீன்ராஜ் நியமிக்கப் படுகிறார். 'அவர், சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டு, செப்., 22க்கு வி சாரணையை தள்ளி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ