உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள் இறக்கி போராட்டம் நடத்த போகிறேன்

கள் இறக்கி போராட்டம் நடத்த போகிறேன்

இன்று விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு, அவர்களே விலையை தீர்மானிக்க முடியாது; அவற்றை வாங்குகிறவன் தீர்மானிக்கிறான். விவசாயத்தில் விளைந்த பொருட்களை பயன்படுத்திய வரையில், எங்கேயாவது ஒருவருக்கு சர்க்கரை நோய் இருந்ததா? ஆனால், இன்று சர்க்கரை நோய் இல்லாதவர்கள் யாரும் இல்லை. காரணம், ரசாயன உணவுப் பொருள்.'கள்' போதை பொருள் என்றால், அரசு மதுபான கடையில் விற்பனை செய்வது என்ன புனித நீரா, கோவில் தீர்த்தமா? 'கள்' உணவின் ஒரு பகுதி. அதை குடித்து இறந்தோர் யாரும் இல்லை. நான் கல்லுாரிக்கு போகும்போது, 'கள்' குடித்துவிட்டு தான் போவேன்; திரும்ப வரும்போதும் குடிப்பேன். அது, ராஜ வாழ்க்கை.'கள்' விடுதலைக்கு துணை நிற்பது நாம் தமிழர் கட்சியின் கடமை. ஒரு நாள் நானே, பனை மரம் ஏறி 'கள்' இறக்கி போராட்டம் நடத்தப்போகிறேன்.- சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Palanisamy T
மே 26, 2025 14:52

1. கள் இறக்கிப் போராட்டம் நடந்தப் போகின்றேன் என்று சொல்வதை விட கள் இறக்கி மக்களை டாஸ்மாக் கடைகளில் விற்க்கப்படும் சாராயங்களிலிருந்து ஏற்படும் தீமைகளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக காப்பாற்றுவேன் என்றுச் சொல்லுங்கள். ஒருவேளை நாளை நீங்கள் முதமைச்சராக தேர்தெடுக்கப்பட்டால் உடனே டாஸ்மாக் கடைகளை மூடுவீர்களா? கொஞ்சம் யோசித்துச் பேசுங்கள். 2. அன்று ஜெயா அம்மையார் ஆட்சிக்கு வந்த முதல் வேலையாக டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்லி கையெப்பம் இட்டவர் ஜெயா அவர்கள். அதை வாங்கியவர் அமைச்சர் நெடுஞ்செழியன் அவர்கள். மறுகணமே பின் வாங்கினார். இதெல்லாம் அதிமுக வினருக்கு தெரியாதா? ஏனென்று அவர்களுக்கு தெரியாதா ? நாம் வெட்டிப் பேச்சை நிறைய பேசலாம், அதனால் எவ்விதப் பயனுமில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை