உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாலியல் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை; போலீசாருக்கு மண்டல ஐ.ஜி.,க்கள் உத்தரவு

பாலியல் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை; போலீசாருக்கு மண்டல ஐ.ஜி.,க்கள் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான, பாலியல் குற்றங்கள் மீதான புகார்கள் மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, போலீசாருக்கு, மண்டல ஐ.ஜி.,க்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

பாலியல் ரீதியாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து, புகார் கிடைத்த, 30 நிமிடங்களுக்குள் விசாரணை அதிகாரி சம்பவ இடத்தில் இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளை, உடனடியாக மீட்டு, பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க வேண்டும். தாமதமின்றி மருத்துவ உதவி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சொந்தங்களிடம் இருந்து, உடனடியாக எழுத்து மூலமாக புகார் பெற்று, அவர்களுக்கு சி.எஸ்.ஆர்., வழங்க வேண்டும். அவர்கள் எழுத படிக்க தெரியாதவர்களாக இருந்தால், ஆலோசகர் ஒருவரை நியமித்து, அவரை சாட்சியாக பயன்படுத்த வேண்டும். பாலியல் வன்கொடுமைமாதிரிகளை, ஐந்து நாட்களுக்குள் சேகரிக்க வேண்டும். புகார்கள் கிடைத்த, 24 மணி நேரத்திற்குள், எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய வேண்டும். குற்றம் செய்த நபர், எக்காரணத்தை முன்னிட்டும் தப்பி செல்லாதபடி, நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில், காலதாமதம் கூடாது. அலட்சியமாக செயல்பட்டது தெரிய வந்தால், சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரி மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என, ஐ.ஜி.,க்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Shankar
ஜன 07, 2025 14:10

குற்றங்கள் நடந்தா உடனே நடவடிக்கை எடுக்க சொல்லும் இந்த மேலதிகாரி, அந்த குற்றங்களே நிகழாமல் பார்த்துக்கொள்ள ஏன் உத்தரவிடவில்லை. அப்படின்னா இதுபோன்று பாலியல் குற்றங்கள் தமிழகத்தில் மேலும் மேலும் எதிர்பார்க்கின்றீர்களா?


கத்தரிக்காய் வியாபாரி
ஜன 07, 2025 13:10

பொதுவெளியில் விட்டாலும் அதை தவறாக எழுதினாலும் என்ன தண்டனை?


sridhar
ஜன 07, 2025 12:44

30 நிமிடங்களுக்குள் இல்லை , முப்பது வருடங்களுக்குள் கூட நடவடிக்கை கிடையாது - ஆளும் கட்சிக்காரன் செய்தால் .


பூபதி
ஜன 07, 2025 11:52

பச்சோந்தி தனமாக செயல்படுவது தவறு


Ganapathy Subramanian
ஜன 07, 2025 11:38

ஆனால் இந்த வழிகாட்டுதல் மற்றும் வழிமுறைகள் எல்லாம் எதிர்கட்சியினராய் இருந்தால் மட்டுமே. யாரும் திராவிடியாஸ் மேல் நடவடிக்கை எடுத்துவிடாதீர்கள். இது வாய்மொழியில் சொல்லப்பட்டது.


Barakat Ali
ஜன 07, 2025 10:14

சட்டம் ஒழுங்கு அந்த சாரோட நேரடி கண்காணிப்பில் இருக்குது .... அந்த சார் சிறிதும் குற்றவாளிகள் மீது இரக்கம் காட்டாத சார் .....


RAJ
ஜன 07, 2025 08:31

மண்டல ஐ.ஜி.,க்கள் மண்டையில் புது ரத்தம் பாய்சப்பட்டது. இனி "சார்களை வளைத்து வளைத்து பிடிப்பார்கள்.. இனிமே பயம் இல்ல.


Bye Pass
ஜன 07, 2025 07:35

மண்டல IG க்கள். …திராவிட மாடல் ..குற்றம் நடை பெறாமல் இருக்க நடவடிக்கை எடுப்பது தானே சரியாக இருக்கும்


Kasimani Baskaran
ஜன 07, 2025 07:03

அப்படி என்றால் இதற்க்கு முன் நடவடிக்கை தாமதமாக, ஆதாரங்களை அழித்தபின்னர்தான் நடவடிக்கை எடுத்தார்களா அல்லது அதுவும் இல்லையா... நல்ல திராவிடமாடல்டோய்... இதுக்கும் அந்த பாமரன் முட்டுக்கொடுக்க வருவான் பாரு


D.Ambujavalli
ஜன 07, 2025 06:35

அந்த ‘சார்’ என்று சொல்லப்படுகிறவர் போன்ற ‘சார்வார்கள்’ சம்பந்தப்பட்டிருந்தால் உடனடியாக அவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுத்து வருஷம் ஆனாலும் மறைத்து வைத்து விசுவாசமாக கடமை ஆற்ற வேண்டும் வெளிவிட முன்வரும் , ஊகங்களை கூறும் media மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் இதெல்லாம் மிக மிக அவசியமான நடவடிக்கைகள்