உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பரிவர்த்தனையில் பாதிப்பா? கூட்டுறவு துறை விளக்கம்!

பரிவர்த்தனையில் பாதிப்பா? கூட்டுறவு துறை விளக்கம்!

சென்னை: 'புதிய மென்பொருள் வாயிலாக, நகர கூட்டுறவு வங்கிகளின் அனைத்து நடவடிக்கைகளும் நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன' என, கூட்டுறவு துறை தெரிவித்து உள்ளது. கூட்டுறவு துறை செய்திக்குறிப்பு: தமிழகத்தில் உள்ள, 125 நகர கூட்டுறவு வங்கிகளும், வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ள மைய வங்கி தீர்வியல் மென்பொருள் பயன்படுத்தி வருகின்றன. மென்பொருள் சேவை வழங்கிய நிறுவனத்துடனான ஒப்பந்தம், 2023 ஜூனில் முடிவடைந்தது.மேம்படுத்தப்பட்ட சேவை வழங்க, புதிய மென்பொருள் அறிமுகம் செய்யப்பட்டது. பழைய மென்பொருளில் உள்ள வங்கிகளின் செயல்பாடு குறித்த அனைத்து தரவுகளும், புதிய மென்பொருளில் மாற்றம் செய்யப்பட்டு, சோதனை முறையில் பயன்படுத்தப் பட்டன.இம்மாதம், 2ம் தேதி முதல் புதிய மென்பொருள் வாயிலாக, அனைத்து வங்கி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கு தேவையான தொழில்நுட்ப உதவிகள், புதிய மென்பொருள் நிறுவனத்தால் வழங்கப்பட்டு வருகின்றன. அந்நிறுவனத்தின் பொறி யாளர்கள் மற்றும் நகர கூட்டுறவு வங்கி பணியாளர்கள் அடங்கிய குழு ஏற்படுத்தப்பட்டு, சென்னையில் உள்ள நகர கூட்டுறவு வங்கிகளால் தெரிவிக்கப்படும் குறைகள் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படுகின்றன. வங்கிகளின் பரிவர்த்தனை தரவுகள் வார அடிப்படையில், அரசின், 'எல்காட்' சர்வரில் சேமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி