உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நடுநிலை பள்ளிகள் தரம் உயர்வு

நடுநிலை பள்ளிகள் தரம் உயர்வு

தமிழக அரசு பள்ளிகளில், 1 முதல், 5ம் வகுப்பு வரை துவக்கப்பள்ளி, 1 முதல், 8ம் வகுப்பு வரை நடுநிலை, 6 முதல், 10 வரை உயர்நிலை, 6 முதல் பிளஸ் 2 வரை மேல்நிலைப் பள்ளிகள் என செயல்படுகின்றன. இதில், நடப்பு கல்வியாண்டில் அரியலுார் மாவட்டம் கரையவெட்டி நடுநிலை; ஈரோடு மாவட் டம் மேட்டுநாசுவம்பாளை யம் நடுநிலை; சிறுக்களஞ்சி நடுநிலை; கடலுார் மாவட்டம் ஆ.நத்தம் நடுநிலை. செங்கல்பட்டு மாவட்டம் ஒட்டியம்பாக்கம், கீரப்பாக்கம் நடுநிலைப்பள்ளிகள் உட்பட, 14 பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி, அரசு முதன்மை செயலர் சந்தரமோகன், அரசாணை வெளியிட்டுள்ளார். மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஆசிரியர் பணியிடங்கள் பிரிக்கப் பட வும், புதிதாக உருவாக்கப் படவும் உள்ளன. - - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !