உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருமணத்துக்கு முன்னரே மனைவியிடம் கூறிவிட்டார் ரஹ்மான்!

திருமணத்துக்கு முன்னரே மனைவியிடம் கூறிவிட்டார் ரஹ்மான்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தன்னுடன் எத்தகைய வாழ்க்கையை வாழ வேண்டியிருக்கும் என்பது பற்றி, திருமணத்துக்கு முன்னரே தன் மனைவியிடம் கூறிவிட்டேன்,' என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறிய பழைய பேட்டி, இப்போது வைரல் ஆகி வருகிறது.பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், அவரது மனைவி சாய்ரா பானுவை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார். 1995ல் திருமணமான இந்த தம்பதிக்கு, 2 மகள், ஒரு மகன் உள்ளனர். விவாகரத்து பற்றி ரஹ்மான் வெளியிட்ட பதிவில், 'திருமண வாழ்வில் 30 ஆண்டுகளை தொட்டுவிடுவோம் என நம்பினோம். ஆனால் எதிர்பாராமல் இப்படி ஒரு முடிவு வந்துவிட்டது. உடைந்து போன இதயங்களால் கடவுளின் சிம்மாசனமும் நடுங்கக்கூடும். உடைந்த துண்டுகள் மீண்டும் சேரவில்லை என்றாலும் நாங்கள் அதன் அர்த்தத்தை தேடுகிறோம்,' என குறிப்பிட்டு இருந்தார்.இந்த சூழலில், 2012ல் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரான சிமி கரேவால் உடன் நேர்காணலில் ரஹ்மான் திருமணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ''29 வயதான நிலையில், திருமணத்துக்கு சரியான காலம் அதுதான் என்று முடிவு செய்தேன். எனினும், மணப்பெண்ணைத் தேடிக் கொண்டிருக்க நேரமில்லாத நான், எனக்கேற்ற பெண்ணை பார்க்கும்படி தாயாரிடம் கூறியிருந்தேன்.''எளிமையான பெண்ணாக இருக்க வேண்டும், நான் இசைப்பணியை செய்வதற்கு அதிகம் தொந்தரவு தராதவராக இருக்க வேண்டும்,'' என்று தன் தாயாரிடம் கூறி இருந்ததாக, ரஹ்மான் கூறுகிறார். 'தன் மனைவியாக வரப்போகிறவர், கொஞ்சம் படிப்பு, கொஞ்சம் அழகு, நிறைய பணிவு கொண்டவராக இருக்க வேண்டும்' என்றும், அவர் கூறியுள்ளார். 'மனைவியாக வந்த சாய்ராவின் குணம், நீங்கள் எதிர்பார்த்தது போல் இருக்கிறதா' என்ற கேள்விக்கு ரஹ்மான் பதில் அளித்துள்ளார்.''அவர் அமைதியாக இருக்கிறார் என்றால், அமைதியாக இருப்பார். கோபம் வந்து விட்டால் அதைக்காட்டி விடுவார். அவருக்கு இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. தொடக்கத்தில், வெளியில் அழைத்துச் செல்வதில்லை என்பதால் அவர் விரக்தி அடைந்தார்.''திருமணத்துக்கு முன்னரே, அவர் எத்தகைய வாழ்க்கையை என்னுடன் வாழ வேண்டியிருக்கும் என்பதை நான் அவரிடம் தெரிவித்து விட்டேன். அந்த வகையில் அது ஒரு முன்கூட்டியே செய்யப்பட்ட ஒப்பந்தம் போன்றது' என்று ரஹ்மான் தெரிவித்துள்ளார்.தன் திருமணம், மனைவி பற்றி ரஹ்மான் அளித்த பேட்டி, இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

SHIVA
நவ 25, 2024 15:30

இசை ஹாரம் வட்டிக்கு பணம் கொடுப்பது....


V SURESH
நவ 24, 2024 06:19

எல்லாம் முடிந்து விட்டது. இன்னும் என்ன சப்பைக்கட்டு. தேவையா. சினிமாகாரர்கள் எல்லாம் கல்யாணம் பிறகு விவாகரத்து. சாதாரண மக்களுக்கு நல்ல முன்னுதாரணம்


SATHIK BASHA
நவ 23, 2024 11:50

அடுத்தவர் மதம் பற்றி கருத்து சொல்ல உனக்கு உரிமையில்லை. தினமலர் யார் மனதும் புண்படாதவாறு எழுதுமாறு அறிவுறுத்தும் ஆனால் செயல்முறையில் இருக்காது. எல்லா கழிசடை கருத்துக்களையும் பதிவிடும்.


நிக்கோல்தாம்சன்
நவ 22, 2024 21:14

ஆனால் ரகுமானின் சேர்க்கை அந்த கவிஞரோடு சேர்ந்த பிறகு இப்படியாயிட்டுதே


MUTHU
நவ 22, 2024 20:36

மேலை நாடுகளின் இரண்டாயிரம் ஆண்டு குழப்பங்களின் விடை இதுவே. மக்கள் வேண்டுமானால் நாகரீகமாய் ஒழுக்கசீலர் போன்று தோற்றமளிக்கலாம். ஆனால் அவர்களின் இயல்பு நிலை கொடூரமானது-மறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த நாற்பது ஆண்டுகளில் இதுவும் வேரூன்றி வருகின்றது. இது எங்கு போய் முடியும்....


Rasheel
நவ 22, 2024 18:54

மதம் அனுமதிக்கிறது. தொட்டுக்கொள்ள, வைத்து கொள்ள. பல் இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுகிறான். பெண்களின் நிலைமை தான் மோசம்.


ArGu
நவ 22, 2024 18:53

நாட்டுக்கு ரொம்ப முக்கியம். அடுத்த பொண்டாட்டி கட்றதுக்குள்ள என்ன என்ன எல்லாம் பேச போறானோ?


அப்பாவி
நவ 22, 2024 18:53

29 சேர்ந்தே குப்பை கொட்டியிருக்காங்க.


Ramalingam Shanmugam
நவ 22, 2024 18:24

நாட்டுக்கு ரொம்ப முக்கியம் போய் வேலைய பாருங்க நாட்டுக்காக என்ன செய்தார் இந்த தியாகி இதெல்லாம் ஒரு விளம்பரம்தான்


என்றும் இந்தியன்
நவ 22, 2024 17:28

அவர்களுக்கு பிடிக்கவில்லை அவர்கள் விவாகரத்து செய்து கொண்டார்கள். அது அவர்கள் தனி உரிமை அதை விட்டுத்தள்ளவேண்டியது தானே???இதனால் இந்தியாவின் GDP குறைந்து விடுமா இல்லை அதிகமாகிவிடுமா??/


முக்கிய வீடியோ