உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மோடி ரோடு ஷோ வில் குழந்தைகள்; தேர்தல் கமிஷன் விளக்கம் கேட்பு

மோடி ரோடு ஷோ வில் குழந்தைகள்; தேர்தல் கமிஷன் விளக்கம் கேட்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:கோவையில், பிரதமர் மோடி பங்கேற்ற 'ரோடு ஷோ'வில், பள்ளி குழந்தைகள் பங்கேற்றது தொடர்பாக, மாவட்ட தேர்தல் அலுவலரிடம், தேர்தல் கமிஷன் விளக்கம் கேட்டுள்ளது.கோவையில் நேற்று முன்தினம் பிரதமர் மோடி பங்கேற்ற, 'ரோடு ஷோ' நிகழ்ச்சி நடந்தது. சாலையின் இருபுறமும் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் திரண்டு, மலர் துாவி மோடியை வரவேற்றனர்.இந்நிகழ்ச்சியில், பள்ளி மாணவ - மாணவியரும் பங்கேற்றதாக, தி.மு.க., சார்பில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம், புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தி.மு.க., வழக்கறிஞர் சரவணன் கூறியதாவது:கோவையில் நேற்று முன்தினம், பிரதமர் மோடி பங்கேற்ற ரோடு ஷோவுக்கு பள்ளிக் குழந்தைகள் அழைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள், பா.ஜ.,வை புகழ்ந்து பாட்டு பாடியுள்ளனர். இது, தேர்தல் நடத்தை விதி மீறல். குழந்தைகளை எந்தவிதமான தேர்தல் பிரசாரத்துக்கும் பயன்படுத்தக்கூடாது என, தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.பா.ஜ., தன் இருப்பை காண்பிக்க, குழந்தை முதல் முதியோர்கள் வரை ஆதரவு இருப்பதை காண்பிக்க, குழந்தைகளை சட்ட விரோதமாக பயன்படுத்தி உள்ளது. இது தேர்தல் விதி மீறல் மட்டுமல்ல. குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டத்தின்படியும் குற்றம். இதை ஏற்பாடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் கேட்ட போது, ''பிரதமர் ரோடு ஷோவில், பள்ளி மாணவ - மாணவியர் பங்கேற்றது தொடர்பாக, மாவட்ட தேர்தல் அலுவலரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அறிக்கை பெறப்பட்டதும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

shyamnats
மார் 21, 2024 10:45

நீட் தேர்வுக்கு எதிராக, பதினெட்டு வயது கூட நிறையாத மாணவர்களிடம் கையெழுத்து வாங்கினார்களே? அப்பொழுது இந்த மாதிரி பொங்குபவர்கள் எங்கே போனார்கள்.


RAMAMOORTHI S
மார் 20, 2024 14:47

பெற்றோருக்கு தெரிந்து, பெற்றோர் களின் சம்மதத்துடன் வரும் குழந்தைகளை தடுக்க முடியாது. தேர்தல் கமிஷன், மற்ற வேலைகளுக்கு கவனித்தால் போதும்.


Indian
மார் 20, 2024 13:44

குழந்தைகளை வெயிலில் ஏன் அலைக்கழிக்கிறார்கள்? மாணவர்கள் தேர்வு நேரம் இதெல்லாம் தேவையா?


PREM KUMAR K R
மார் 20, 2024 13:41

கோவையில் மோடி இரண்டு கி.மீ. தூரம் மட்டுமே அனுமதிக்கப்பட்ட ரோட் ஷோ மாலையில் தான் நடந்தது. அதில் பங்கேற்க பிரதமர் கோவையில் வந்து சேர்ந்ததே மாலை 5 மணிக்கு மேல் தான். ரோட் ஷோ துவங்கிய நேரமான 5.45 மணி என்பது பள்ளி நேரமாக இருக்க வாய்ப்பே இல்லை. பிரதமரை பார்க்க ஆர்வம் பலருக்கும் இருப்பதை போல் பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளி நேரம் முடிந்த பின் வந்தால் அதை எப்படி விதி மீறலாக கருத முடியும். இது வேண்டுமென்றே தி.மு.க. காழ்ப்புணர்ச்சி காரணமாக கொடுக்கப்பட்ட புகாராக கருதி அதை மாவட்ட தேர்தல் அதிகாரி நிராகரிக்க வேண்டும்.


VARUN
மார் 20, 2024 14:21

உன்னமாதிரி படிக்காத பாமரிக்கலாம் பள்ளிமாணவர்களைப்பத்தி கவலையில்லை


ram
மார் 20, 2024 13:13

பயம் பயம் திருட்டு திமுகவுக்கு, அவர்களை பார்த்தால் குழந்தைகள் மாதிரி தெரியவில்லை, பத்தாவது, பனிரெண்டாவது படிக்கும் மாணவர்கள், அவர்களை வருவதில் இவர்களுக்கு எங்கேய எரியுது. உதநிதி பங்கேற்ற விழாவிற்கு லேட்டாக வந்ததால் , சிறு குழந்தைகளை நிற்க்க வைத்து அவர்கள் சாப்பிடாமல் மயக்கம் போட்டார்களே அப்ப இந்த நபர்கள் எங்கே போனார்கள்


pandit
மார் 20, 2024 13:09

பள்ளிகளில் புகுந்து நீட் கையெழுத்து வாங்கியாவது எங்கே போனார்கள்


அஜய் சென்னை, இந்திய அன்னையை நேசிப்போம்
மார் 20, 2024 11:41

உண்மையில் மக்கள் ஆயிரம் கேள்விகள் கேட்கும் அளவிற்கு தான் இந்த அரசியல் அமைப்புக்கள் விதி முறைகளும் இருக்கிறது. முதலில் எல்லா இடத்திலும் சரி செய்ய வேண்டும். முதலில் மதம், ஜாதி பெயரில் கட்சிகள் இருக்க கூடாது. ஜாதியை வைத்து கட்சி இயங்க கூடாது. மதம்,ஜாதி அடிப்படையில் MP, MLA sear ஒதுக்கும் போதே இங்கு ஜாதி, மத வேறுபாடு வளர்க்க படுகிறது. நீ SC/ST தானே என்று கேட் கும் அளவிற்கு ஜாதிய வெறி அதிகம் உள்ளது. இன்னும் இந்திய முழுவதும் கிராமங்களில் இந்த ஜாதி காரர்கள் இந்த கோவிலுக்கு வரகூடாது போக கூடாது என்று பிரிவினை வாத பிரச்சனை உள்ளது. இதற்கு முதல் காரணம் அரசியல்வாதிகளில் சுயநல அரசியல் மட்டுமே. மத, ஜாதி அடிப்படையில் மக்களை பிரித்து ஆளும் கொள்கையை இன்னும் கடைபிடிக்கிறார்கள்.


ஆரூர் ரங்
மார் 20, 2024 11:13

சென்ற தேர்தல் நேரத்தில் ராகுல் தமிழக பெண்கள் கல்லூரிகளின் அரங்குகளில் பிரச்சாரம் செய்ததாக நினைவிருக்கிறது.


Barakat Ali
மார் 20, 2024 13:39

குழந்தைகள் விஷயம் வேறு .......


Balasubramanyan
மார் 20, 2024 09:23

For our ministers functions school children are kept in school for hours in sun. The minister will come late by 3 to 5 hours and be with the children for few minutes and go after photo shoot They have to praise govt and ministers. Is it fair.senthamiz Karthika, velan Iyengar,ovia Vijay.


Prasanna Krishnan R
மார் 20, 2024 11:48

Well said Balasubramaniam sir. These people are good for nothing. Simply doing jinjak to DMK party rascals.


பேசும் தமிழன்
மார் 20, 2024 08:59

பள்ளி லீவு விட்ட பின்.... குழந்தைகள் நாட்டின் பிரதமர் அவர்களை பார்க்க போய் இருப்பார்கள்.... இதில் தவறு ஏதும் இல்லையே ???


sri
மார் 20, 2024 14:16

சரியான பதில்.குழந்தைகளிடம் விசாரித்தால் உண்மை தெரியும்.இதை அரசியலாக்காமல், தலைமையாசிரியருக்கும் பாதகம் இல்லாமல் முடிவு எடுக்க வேண்டும்


மேலும் செய்திகள்









புதிய வீடியோ