உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஸ்ரீ சத்யசாய் திறன் மேம்பாட்டு மையம் திறப்பு

ஸ்ரீ சத்யசாய் திறன் மேம்பாட்டு மையம் திறப்பு

பாலக்குறிச்சி: திருச்சி மாவட்டம், பாலக்குறிச்சி மற்றும் 15க்கும் மேற்பட்ட கிராமங்களில், ஸ்ரீ சத்யசாய் சேவா சங்கங்கள், சேவைகளை செய்து வருகின்றன.இந்நிலையில், பாலக்குறிச்சியில், ஸ்ரீ சத்யசாய் திறன் மேம்பாட்டு மையம், 2,500 சதுர அடியில் கட்டப்பட்டது.மையத்தை, புட்டபர்த்தி பிரசாந்தி நிலையம் ஸ்ரீ சத்யசாய் மத்திய அறக்கட்டளை தலைமை அறங்காவலர் ஆர்.ஜே.ரத்னாகர் நேற்று திறந்து வைத்தார். இதில் ஸ்ரீ சத்யசாய் சேவா அமைப்பின் தமிழக தலைவர் சுரேஷ் மற்றும் எஸ்.ஆர்.சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த மையத்தில் தையல், கம்ப்யூட்டர் பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது. பயிற்சி வகுப்புகளில் சேர வயது வரம்பு இல்லை. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், பெண்கள், இளைஞர்கள் சேரலாம். பயனடைய விரும்புவோர், பாலக்குறிச்சி ஸ்ரீ சத்யசாய் திறன் மேம்பாட்டு மையத்தை அணுகலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை