உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ.,வினர் மீதான தாக்குதல் அதிகரிப்பு: செயற்குழு கூட்டத்தில் அண்ணாமலை பேச்சு

பா.ஜ.,வினர் மீதான தாக்குதல் அதிகரிப்பு: செயற்குழு கூட்டத்தில் அண்ணாமலை பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ‛‛ தமிழகத்தில் பா.ஜ.,வினர் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது'', என தமிழக பா.ஜ., செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.

தீர்மானம்

சென்னை வானகரத்தில் பா.ஜ., செயற்குழு கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான், மத்திய இணையமைச்சர் எல். முருகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.இக்கூட்டத்தில் ,* 3வது முறையாக பிரதமராக பதவியேற்ற பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள்.* கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.* தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து கள் இறக்க அனுமதிக்க வேண்டும்.* மேகதாது, முல்லை பெரியாறு அணை, சிலந்தி ஆறு, பாலாறு குறுக்கே தடுப்பணை கட்டுவதை தடுக்க தவறிய தி.மு.க.,விற்கு கண்டனம் தெரிவிப்பதுடன், அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்* தேர்தல் அறிக்கையில் கூறியவாறு, அனைத்து அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.* தமிழக சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் சக்தியை இழந்து விட்ட தி.மு.க., அரசுக்கு கண்டனம்* பார்லிமென்டில் தமிழர்களின் கலாசார அடையாளமான செங்கோலை அவமதித்ததற்கும், மாநிலக் கல்வி கொள்கை குறித்த முன்னாள் நீதிபதி சந்துரு அறிக்கைக்கும் கண்டனம் ஆகிய 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வளர்ச்சி

இந்த கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது: தமிழகத்தில் பா.ஜ., மெல்ல மெல்ல வளர்ந்து நிற்கிறது. பா.ஜ.,வினர் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவு சட்டம் ஒழுங்கு சரிந்துள்ளது. மாநிலத்தில் எந்த கட்சியினர் மீதும் இல்லாத அடக்குமுறை பாஜ., மீது ஏவப்படுகிறது.பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கூலிப்படையால் கொலை செய்யப்பட்டு உள்ளார். நேற்று கட்சி தலைவர் ஒருவர் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டார். தி.மு.க., ஆட்சியில் சாமானிய மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. மாநிலத்தில் கள்ளச்சாராயம் ஆறுபோல் ஓடுகிறது. இது குறித்து பேசவும், உண்மையை சொல்லவும், எதிர்க்கவும் யாருக்கும் தைரியம் இல்லை. மீறி எதிர்த்தால், அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

KRISHNAN R
ஜூலை 10, 2024 07:46

எல்லாம் சரி. ஆன்லைன் ரம்மி தடைசெய்யாமல்... எதற்காக... மைய அரசு விதி வகுத்தது....70 சதவீத...எல்லா பொருட்களை ஜி எஸ் டி யின் 12- 18 சதவீத வரி போட்டது யேன்


NAGARAJAN
ஜூலை 10, 2024 06:30

எல்லாவிதமான அயோக்கியர்களும் உள்ளடக்கிய கட்சி தான் நம்ம பாஜக


pv, முத்தூர்
ஜூலை 06, 2024 23:17

ரெய்டு செய்ய தமிழக அரசிடம் சிபிஐயோ, IT இல்லை. மேலும் கிரிமினல்கள் தற்போது பாஜகவில் அங்கம் வகிக்கின்றனர். அவர்கள் கொஞ்சிக்கொண்டா இருக்க முடியும்


அரசு
ஜூலை 06, 2024 16:37

இவரு கட்சிக்குள்ளேயே அடிச்சிக்கிறாங்களே முதல்ல அதை அடக்க சொல்லுங்க.


MADHAVAN
ஜூலை 06, 2024 14:33

பயப்படுறியா குமாரு ?


MADHAVAN
ஜூலை 06, 2024 14:32

தமிழகத்தில் உள்ள சமூக விரோதிகள் அனைவரும் பிஜேபி ல தான் இருக்காங்க சொன்னது உண்மைதான் போல ?


Lion Drsekar
ஜூலை 06, 2024 13:49

வீட்டுக்கு வீடு வாசற்படி . வந்தே மாதரம்


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 06, 2024 13:37

அண்ணாமலை இப்படி விரக்தியாகப் பேசக்கூடாது ..... பாஜக திமுகவுடன் கூட்டணி வைக்கப்போகிறது என்பதை அறியாமல் தாக்கி வருகிறார்கள் .....


கோவிந்தராஜ்
ஜூலை 06, 2024 12:43

சரி தாக்குதல் அதிகரிப்பு அது நடவடிக்கை என்ன பைல்ஸ் 3 ஆ


Senthoora
ஜூலை 06, 2024 14:09

என்னமோ ஆச்சியை கலைப்பது very simple என்ற நிலைப்பாடுதான், அடுக்கடுக்காக எதோ எல்லாமோ ரூம் போட்டு யோசித்து மேடையில் சொல்கிறார்.


மேலும் செய்திகள்