உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இண்டியா கூட்டணி நாட்டை வழிநடத்தும் பணியை மேற்கொள்ளும்: முதல்வர் ஸ்டாலின்

இண்டியா கூட்டணி நாட்டை வழிநடத்தும் பணியை மேற்கொள்ளும்: முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'அரசியலமைப்பு வழங்கியுள்ள நெறிமுறைகளைப் பாதுகாக்கின்ற வகையில், நாட்டை வழிநடத்தும் பணியை இண்டியா கூட்டணி மேற்கொள்ளும்' என திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.திமுக தொடர்பாக ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: மகத்தான வெற்றியை நமக்கு அளித்திருக்கிறார்கள் மக்கள். அந்த வெற்றிக்கு அயராமல் உழைத்தவர்கள் தொண்டர்களாகிய நீங்கள். இந்த வெற்றியை ஒட்டுமொத்த இந்தியாவுமே திரும்பிப் பார்க்கிறது. நமது நோக்கத்தை அறிந்து கூடுதலான ஆதரவை வழங்கிய இயக்கங்களும் தோள் கொடுத்து நின்றன. இண்டியா கூட்டணியின் நம்பிக்கைமிக்க களமாகத் தமிழகம் அமைந்தது.மதவாதத்தையும், வெறுப்பு அரசியலையும் விதைக்க நினைப்பவர்கள் தமிழகத்தில் எப்படியாவது கால் ஊன்றி விடவேண்டும் எனத் திட்டமிட்டார்கள். வன்ம விதைகளைத் தூவினார்கள். வதந்தி நீர் ஊற்றி அதனை வளர்க்கப் பார்த்தார்கள். நாட்டின் பிரதமர் 8 முறை தமிழகத்திற்கு வந்தார். மற்றொருபுறம், இவர்களுக்கு அடிமைச் சேவகம் செய்த அ.தி.மு.க. தனித்து நிற்பதாகக் கூறி மறைமுகக் கூட்டணியாகச் செயல்பட்டது. இந்த இரண்டு சக்திகளும் தமிழகத்திற்கு எந்தளவு ஆபத்தானவை, எந்த அளவுக்குக் கேடானவை என்பதைக் கொள்கைத் தெளிவுடன் எடுத்துரைப்பது மட்டுமே எனது பிரசாரமாக அமைந்தது.

மக்களுக்கு நம்பிக்கையில்லை

நாடே திரும்பிப் பார்க்கும் வகையிலான நாற்பதுக்கு நாற்பது என்ற இந்த வெற்றி, இந்திய அரசியலின் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மத்திய ஆட்சியாளர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை என்பதைத்தான் தனிப்பெரும்பான்மை பெற முடியாத பா.ஜ.,வின் சரிவு காட்டுகிறது. அவர்களின் கோட்டை என நினைத்திருந்த மாநிலங்களில் இண்டியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. பார்லிமென்டில் சரிக்குச் சரியாக இண்டியா கூட்டணியின் உறுப்பினர்கள் இடம் பெறவிருப்பது ஜனநாயகம் கட்டிக் காக்கப்பட்டிருப்பதன் அடையாளமாகும்.

நாட்டை வழிநடத்தும் பணி

சர்வாதிகாரத்தனமான ஒற்றையாட்சி முறைக்கு மக்கள் ஆதரவாக இல்லை என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. தமிழகத்திலும் இந்திய அளவிலும் நமது கூட்டணி பெற்றுள்ள வெற்றியால் சர்வாதிகாரத்திற்குக் கடிவாளம் போடப்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் நம்பிக்கைத் துளிர்கள் அரும்பியுள்ளன. அரசியலமைப்பு வழங்கியுள்ள நெறிமுறைகளைப் பாதுகாக்கின்ற வகையில், நாட்டை வழிநடத்தும் பணியை இண்டியா கூட்டணி மேற்கொள்ளும். அதற்கு நாற்பதுக்கு நாற்பது என்ற மகத்தான வெற்றி பெருந்துணையாக இருக்கும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 75 )

தமிழன்
ஜூன் 09, 2024 12:37

பார்வை இல்லாத ஒருவர், இருட்டு அறையில் கருப்பு பூனையை அது இல்லாத போது தேடினால் எப்படி இருக்கும். அப்படி இருக்கு முதல்வரின் செய்தி ..


M.r Balakrishan
ஜூன் 09, 2024 00:04

முதல்ல தமிழ்நாட்டை ரௌடிசம் இல்லாத கஞ்சா இல்லாத ஊழல் இல்லாத நாடாக மாற்றி ஒழுங்கா வழி நடத்த பாருங்க அப்புறம் அங்க போலாம் ஏற்கெனவே அங்கு போய் ஒன்றும் கழட்டல மத்தியில் அவங்க பார்த்து கொள்வார்கள் எல்லோரும் படித்தவர்கள்


tmranganathan
ஜூன் 08, 2024 08:11

திமுக பணம் கொடுத்து வெற்றியை வாங்கியது உண்மைதான். இவர்கள் லோக்சபா போய் என்ன கிழிக்க போகிறார்கள். உருப்படாத கட்சி. ஹிந்தி மற்றும் ஆங்கிலம் தெரியாதவர்கள்


S.V.Srinivasan
ஜூன் 07, 2024 16:38

இந்தி கூட்டணி நாட்டை நல்வழிப்படுத்தும் பணியை மேற்கொண்டால் நாடு நாசமாகிவிடும்.


S.V.Srinivasan
ஜூன் 07, 2024 16:36

இந்தி கூட்டணி நாட்டை வழி நடத்தும் பணியை மேற்கொண்டால் நாடு நாசமாகி விடும்.


Thiruvengadam Ponnurangam
ஜூன் 07, 2024 20:35

நாடும் நாசமாகி விடும்.


Ramalingam
ஜூன் 07, 2024 16:07

ADMK வ அழிக்க இந்த ஆளு DMK கைக்கூலியா இருப்பார் போல, அதற்குத்தான் அம்மா இவருக்கு எந்த மினிஸ்டர் போஸ்டிங் கும் குடுக்காம தள்ளி வெச்சி இருந்தாங்க, அம்மா இறந்த அப்பறம் வந்து ஒட்டிக்குனு EPS கு ஜால்ரா போட்டு பழைய இடத்தை பிடிச்சிகிட்டார்


Kalyanasundaram Linga Moorthi
ஜூன் 06, 2024 18:23

- 1st he will remove NEET from The Great Tamilnadu, then improve, increase & introduce the TASMAC and increase the Ganja, weeds etc


Barakat Ali
ஜூன் 06, 2024 14:06

நாட்டை காக்கப்போவதாக பிரச்சாரம் செய்தீர்கள் ...... இப்போது நாட்டை வழிநடத்தப்போவதாகச் சொல்கிறீர்கள் .. அப்போ நாட்டைப் பாதுகாக்கும் பொறுப்பை யாரிடம் ஒப்படைத்தீர்கள் ????


Mohan
ஜூன் 06, 2024 14:04

ஆமாம் . கூச்சலிட்டு, கலாட்டா செய்து, பேப்பர்களை கிழித்து வீசி, தமிழ் நாட்டு எம்.பிக்கள், டி.ஆர்.பாலுமனதில் சங்கடத்துடன்,கனிமொழி,திருமா,ஜோதிமணி, வெங்கடேசன்,தயாநிதி போன்றோர் தலைமையில் """நாட்டை வெளி நடத்தி""" பார்லிமெண்டுக்கு அனுப்பும் தமிழ் மக்களுக்கு ""உயர்ந்த சேவை""" செய்யும் பணியை இண்டி கூட்டணியுடன் ஜோராக மேற்கொள்வார்கள். வாழ்க தமிழக எம்.பிக்களின் சேவை


RAAJ68
ஜூன் 06, 2024 07:52

ஆமாம் ஜி. மது கஞ்சா கொலை கொள்ளை கனிம வளம் கொள்ளை 60 ஆயிரம கோடி மணல் திருட்டு, 30 ஆயிரம் கோடி மகன் மருமகன் திருட்டு ...... வழி நடத்தப் போகிறார்களாம்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை