உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்து வருகிறது இந்தியா: கவர்னர் ரவி

தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்து வருகிறது இந்தியா: கவர்னர் ரவி

சென்னை : ''உலகளவில் இந்தியா தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்து வருகிறது,'' என, தமிழக கவர்னர் ரவி கூறினார். 'பிக்கி புளோ' எனப்படும், இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபையின், பெண்கள் கூட்டமைப்பு சார்பில், 17வது ஆண்டு, 'பெண் சாதனையாளர்கள் 2024' விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. 'பிக்கி புளோ' தலைவர் ராஜி ராஜு வரவேற்புரை ஆற்றினார்.விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக கவர்னர் ரவி, பல்வேறு துறைகளில் தனிச்சிறப்பு, தலைமைத்துவம், புதுமையான மாற்றத்தை ஏற்படுத்திய பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்ட, ஒன்பது பெண் சாதனையாளர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

பின்னர், கவர்னர் ரவி பேசியதாவது:

இந்தியா, 10 ஆண்டுகளாக வளர்ச்சியடைந்து வருகிறது.உலகளவில் இந்தியா தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்து வருகிறது. அறிவியல் தொழில்நுட்பம், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை கண்டுள்ளது. 2047ல் இந்தியா தன்னிறைவு பெற்ற வல்லரசு நாடாக உருவெடுக்கும். இதற்கான, பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டுவருகிறது. நம் நாட்டில், பெண்கள் முன்னேற்றத்தில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருக்கிறது. தமிழக பல்கலையில் தங்கம் பதக்கம் பெறும் 100 பேரில், 80 பேர் பெண்களாக இருக்கின்றனர். ஆனாலும், அவர்கள் ஏதோ சில காரணத்தால், அடுத்தகட்ட சாதனையை நோக்கி செல்வதில்லை. தங்களது சாதனை, கனவு திட்டங்களை நிறைவேற்றாமல், இல்லதரசிகளாக வாழ்ந்துவருகின்றனர். இங்கு சாதனையாளர்களாக விருது பெற்றுள்ள பெண்கள், மற்ற பெண்கள் மாணவியரிடம் நேரில் சென்று உங்களின் சாதனையை எடுத்து கூறி ஊக்கப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

venugopal s
மார் 18, 2024 04:24

இவருக்கு தூக்கத்தில் பேசும் வியாதி எதுவும் உள்ளதோ?


Arul Narayanan
மார் 17, 2024 17:42

நன்கு கற்ற இல்லத்தரசிகளிடம் வளரும் குழந்தைகள் சிறப்பாக விளங்குவார்கள்.


T.sthivinayagam
மார் 17, 2024 12:45

நாட்டை வளர்க்கிறேன் என்று கட்சியை வளத்துட்டாங்களே நாட்டாமை


Sridhar
மார் 17, 2024 12:02

நீங்க சும்மா இப்படியே பாரதம் பாரதம்னு அதன் பெருமை பத்தியே பேசிக்கொண்டிருந்தால் போதும், கால்டுவேல் GU போப் போன்றவர்கள் பத்தி பேசவே வேணாம். திருட்டு கும்பலுக்கு எரிச்சல் ரெண்டு மடங்கு வரும். ஏன் என்றால், அதுங்க வெளிப்படையா அந்த கருத்துக்கு ஒரு கண்டனமும் தெரிவிக்க முடியாது. உள்ளுக்குள்ளேயே புகைஞ்சு சாகவேண்டியதுதான். பாக்கறதுக்கே செம ஜாலியா இருக்கும்.


முருகன்
மார் 17, 2024 11:30

இந்தியா என்றால் எதிர்க்கட்சிகள் இல்லாத நிலை ஏற்பட்டு சர்வாதிகாரம் என மாறப்போகிறது அப்போது இங்கு ஆதரிக்கும் பலரின் அலறல் அதிகமாக இருக்கும்


J.Isaac
மார் 17, 2024 11:18

இந்தியா கூட்டணி தவிர்க்க முடியாதது


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 17, 2024 11:12

சீன அடிமைகளுக்கு எரிச்சலைக் கிளப்பாதீர் தமிழக கவர்னரே .....


கனோஜ் ஆங்ரே
மார் 17, 2024 14:07

சீனா..காரன்கிட்ட “கட்டிங்” வாங்குன கும்பலு கூவுறத பாரேன்....?


Bala
மார் 17, 2024 21:35

யாரை சொல்லறீங்க ஆங்க்ரே? சமீபத்துல கட்டிங் வாங்கிட்டு விளம்பரத்துல சீன கொடிய போட்டாங்களே அவுங்கள சொல்லறீங்களா?


செந்தமிழ் கார்த்திக்
மார் 17, 2024 10:58

எப்படி ? தேர்தல் பாண்டு விஷயத்தில் பல ஆயிரம் கோடி கார்ப்பரேட் ஊழல் செய்தா ?


N SASIKUMAR YADHAV
மார் 17, 2024 13:43

உங்க எஜமான் கட்சிதான் ஏறக்குறைய 1200 கோடி ரூபாய்க்கு தேர்தல் நிதி வசூலித்திருக்கிறதாம்


enkeyem
மார் 17, 2024 19:39

இது அவர் காதில் விழாது நண்பரே. அப்புறம் இருநூறு ரூபாய் கிடைக்காது


sahayadhas
மார் 17, 2024 10:31

பெண்கள் சாதானையா?


Barakat Ali
மார் 17, 2024 08:32

தேசவிரோதிகளுக்கு, திராவிடியால் ஸ்ட்டாக்குக்கு, அர்பன் நக்ஸல்களுக்கு அப்பப்ப எனிமா குடுத்துக்கிட்டே இருக்காரே ????


Bala
மார் 17, 2024 21:38

சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது பரக்கத் அலி அவர்களே


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ