வாசகர்கள் கருத்துகள் ( 2 )
அங்கேயும் ராமர் கோவிலை கட்டி உண்டியலை வைப்பீங்களா?
இவர் ரிட்டயர்டு ஆயிடுவார்
தேனி: ''மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தின் ஆரம்ப கட்டப்பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்த திட்டம் 2040ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வரும்,'' என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.இது தொடர்பாக நிருபர்களுக்கு நாராயணன் அளித்த பேட்டி: சந்திரயான் 5 திட்டம், சந்திரயான் 3 போல் ஒரு லேண்டர். இது 100 நாட்கள் நிலவில் ஆய்வு செய்யும் வகையில் உருவாக்கப்படுகிறது. மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தின் ஆரம்ப கட்டப்பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்த திட்டம் 2040ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வரும். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=s61mpxey&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இஸ்ரோவின் மூன்றாவது ஏவுதள மையம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைக்க உள்ளோம். இரண்டாவது ஏவு தளம் மையம் குலசேகரபட்டினத்தில் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக 95% இடங்களை தமிழக அரசு ஒதுக்கி தந்து விட்டது. வரும் 2026ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்படும். இவ்வாறு நாராயணன் கூறினார்.
அங்கேயும் ராமர் கோவிலை கட்டி உண்டியலை வைப்பீங்களா?
இவர் ரிட்டயர்டு ஆயிடுவார்