வாசகர்கள் கருத்துகள் ( 18 )
அரிசி உற்பத்தியை குறைத்து விட்டு எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை அதிக படுத்த வேண்டும். அப்படி செய்தால் கடலை எண்ணெய் மற்றும் நல்ல எண்ணெய் உற்பத்தி அதிகரிக்கும். பாம் ஆயில் இறக்குமதியை குறைத்து விடலாம். அரிசியை போல் இல்லாமல் எண்ணெய் வித்துக்களுக்கு தண்ணீர் தேவை மிகவும் குறைவு.
அடுத்த 2 ஆண்டுகள், எல் நினோ காரணமாக, தென் மேற்கு பருவ மழை குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நல்ல செய்தி.
உற்பத்தி வரலாறு காணாத உட்சத்தை தொடும். ஆனால் அரிசி விலை அதையும் தாண்டி சென்று விட்டது. இதுவரை யாரும் அதை பற்றி பேசவில்லை கவலைப்படவும் இல்லை.
விதை பூச்சி மருந்து உரம் என எல்லாவற்றிற்கும் மானியமளித்து இலவச மின்சாரம் கொடுத்து விவசாயம் செய்து உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கிறார்கள். ஒருபுறம் நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. மறுபுறம் நிலவளம் வேகமாக குறைகிறது.ஒரே பயிரை தொடர்ந்து பயிரிடுவதால் தானியங்களின் தரமும் வெகுவாகக் குறைகிறது. அன்னியச் செலாவணியில் இறக்குமதி உரம் மானியம் வழங்கி உற்பத்தி செய்யப்பட்ட தானியங்களை ஏற்றுமதி செய்வது நமது நிலவளத்தையும் ஏற்றுமதி செய்வதற்கு சமம். நீண்டகால அடிப்படையில் இது நஷ்டமே.
நீங்கள் சொல்வது உண்மை ஆனால் நம் விளைவிக்கும் பயிர் தானியங்கள் மாற்றி விளைவிக்கவேண்டும். மேலும் நீங்கள் 40 acre நிலம் வைத்துக்கொண்டு moder machines உபயோக்காமல் இருந்தால் தவறு இன்றைய ஆட்சி முறையில் கூலி வேளைக்கு ஆட்கலை நம்புவது முட்டாள்தனம் .
விவசாயிகள் மத்திய அரசு திட்டங்களால் பயன் அடைந்துள்ளனர் அதன் வெளிப்பாடுதான் இந்த வளர்ச்சி. ஜெய் கிஷான்.
543[5] பேருடன் சேர்ந்து இருந்தாலும், சிவராஜ் சிங் சௌஹான் அவர்கள் தனியாக தெரிவார். அரிசி மட்டுமல்ல, அனைத்து தானியங்களின் விளைச்சலும் பல மடங்கு அதிகமாகும். 2029 வரை அவர் என்ன செய்யப்போகிறார்? என்பதை பார்ப்போம். தேவைக்கு மேல் செழிப்பாக விளைந்துள்ள உணவு தானியங்களை உலகம் முழுவதும் உள்ள அனைத்து நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் வழிவகைகளை மிகவும் எளிமையானதாக ஆக்கி உற்பத்தியாளர்களாக விளங்கும் விவசாயிகளை மிகப்பெரிய ஏற்றுமதியாளர்களாக ஆக்க வேண்டும். ஏழை விவசாயிகளுக்கும் ஏற்றுமதி செய்யும் வழிவகைகளை கற்பிக்க வேண்டும். விவசாயிகளின் வாழ்வு ஒளி பெற வேண்டும். திராவிடர்களும், திராவிட கிறிஸ்தவர்களும் விவசாயிகளை ஏமாற்றி, அவர்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து விடாவண்ணம் அனைத்து தமிழக மக்களும் விவசாயிகளுக்கு பக்கபலமாகவும், பின்பலமாகவும் இருந்து அவர்களை காப்பாற்ற வேண்டும்.
வறுமையை ஒழிக்கிறேன் பேர்வழி என்று மோடியின் அரசாங்கம் கிராமப்புறங்களில் உள்ள ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலைவாய்ப்பு கொடுத்தது மிகப் பெரும் தவறு இந்த திட்டம் பாஜக அரசின் தோல்வியடைந்த ஒரு திட்டமாகும். இந்த நூறு நாள் வேலை திட்டத்தால் 40 ஏக்கர் உள்ள எங்களின் நிலத்தில் வயல் வேலைக்கு ஆள் கிடைக்காமல் ஐந்து ஏக்கர் நிலத்தில் மட்டும் எங்கள் குடும்பத்திற்கு ஏற்றவாறு சாப்பாட்டுக்கு மட்டும் என் அப்பா பயிரிட்டுக் கொண்டிருக்கிறார் அவருக்குப் பின் கண்டிப்பாக நான் விவசாயம் பார்க்க வாய்ப்பு இல்லை காரணம் என்னை அவர் கூட மாட விவசாயத்தில் ஈடுபட வைக்காமல் என்னை உயர் படிப்பு படிக்க வைத்து விட்டார். இப்போது எங்கள் நிலத்தை வாங்க புரோக்கர்கள் பலரை அழைத்துக் கொண்டு வருகிறார்கள். பல விவசாயிகளுக்கும் எங்களை போன்ற நிலைமைதான். அப்படியிருந்தும் இந்தியாவின் அரிசி உற்பத்தி வரலாறு காணாத உச்சத்தை தொடும் என்ற செய்தியை படித்த போது மனசுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.
100 நாள் வேலை திட்டம் காங்கிரஸ் கொண்டு வந்தது அதை நிறுத்த முடியாமல் தொடர்கிறது பாஜக
100 நாள் வேலை திட்டம் காங்கிரஸ் கொண்டு வந்தது. புருடா எல்லாம் வேண்டாம்
நூறு நாள் வேலை திட்டம் காங்கிரஸ் அரசின் திட்டம். இதற்கு மாற்றுப் பார்வை இருந்தாலும் பிஜேபி வேறு வழி இல்லாமல் தொடர வேண்டிய நிர்பந்தம். ஆனால் இதையே சற்று மாற்றி யோசிக்கலாம். இன்று விவசாய வேலைகளுக்கு ஐந்து மணி நேர வேலைக்கு முன்னூறு முதல் ஐநூறு ரூபாய் கூலி கொடுக்க வேண்டி உள்ளது. நூறு நாள் வேலையில் வேலையே செய்வதில்லை. கை நாட்டு வைத்து விட்டு சம்பளம் பெறுகிறார்கள். அரசு நூறு நாள் வேலையை தனியார் வயல்களில் செய்ய சொல்லலாம். அதற்கு விவசாயிகளிடமிருந்து ஒருவருக்கு நூறு ரூபாய் வீதம் அரசு பெற்றுக் கொள்ளலாம். ஆனால் ஆட்கள் உட்கார்ந்து கதை பண்ணாமல் வேலை செய்ய வேண்டும். இதன் மூலம் விவசாயிகளுக்கும் அரசுக்கும் செலவு குறையும். வேலையும் நடக்கும். என்ன. உட்கார்ந்து இருந்து விட்டு சம்பளம் பெற முடியாது.
ஏலே யார் கொண்டு வந்தால் என்ன உனக்கு நிலம் இருந்தால் தெரியும்!
எப்படியோ, சில பல கம்பனிகளிடம், இருந்து தப்பி, இது போன்ற நல்லது நடந்துள்ளது என்று நினைத்தால் பெருமையே