உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வரை சந்திக்க தொழில் துறையினர் காத்திருப்பு

முதல்வரை சந்திக்க தொழில் துறையினர் காத்திருப்பு

சென்னை : வீடு, தொழிற்சாலை உட்பட அனைத்து பிரிவுகளுக்கும் மின் கட்டணத்தை, இம்மாதம், 1ம் தேதி முதல், 3.16 சதவீதம் உயர்த்தி, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டது. இதனால், சிறு, குறு, நடுத்தர தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து, தொழில் துறை யினர் கூறியதாவது: மின் பயன்பாட்டு கட்டணம் மட்டுமின்றி அதனுடன் சேர்த்து மின்சார நிலை கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலை கட்டண உயர்வு தான், தொழில் நிறுவனங்களுக்கு அதிக சுமையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மின் கட்டண உயர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து, முதல்வர் ஸ்டாலினிடம் விரிவாக எடுத்துரைக்க, சென்னை, கோவை தொழில் கூட்டமைப்புகள் நேரம் கேட்டுள்ளன. இம்மாத துவக்கத்தில் நேரம் கேட்டு மின்னஞ்சல் அனுப்பிய நிலையில், இதுவரை நேரம் ஒதுக்காமல், அதிகாரிகள் இழுத்தடிக்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை