உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உள்ளீட்டு வரவு கிடைக்காது

உள்ளீட்டு வரவு கிடைக்காது

சென்னை:மறுசீரமைக்கப்பட்ட ஜி.எஸ்.டி., செப்., 22ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.இதில், உள்ளீட்டு வரி என்னவாகும் என்பது குறித்து, ஆடிட்டர் சேகர் கூறியதாவது: செப். 21 வரை உள்ள உள்ளீட்டு வரி, 22க்கு பின் உள்ளீட்டு வரவாக எடுத்து கொள்ளப்படும். அந்த பொருட்களுக்கு ஏற்கனவே வரி விதிக்கப்பட்டிருந்து, 22ம் தேதியில் இருந்து வரி விலக்கு அளிக்கப்பட்டு இருந்தால், அந்த பொருளுக்கான உள்ளீட்டு வரவை எடுத்து கொள்ள முடியாது. உதாரணமாக ரூ.1000 சட்டை கொள்முதலில், 5 சதவீத வரி செலுத்தினால், அதன் விலை, 1050 ரூபாயாக இருக்கும். அதை, 1260 ரூபாய்க்கு விற்றால் 60 ரூபாய் வரி செலுத்த வேண்டும். 60 ரூபாயில் உள்ளீட்டு வரி செலுத்திய 50 ரூபாய் போக மீதமுள்ள, 10 ரூபாய் செலுத்தினால் போதும். அந்த பொருளுக்கு, 22ம் தேதிக்கு பின் வரி விலக்கு அளிக்கப்பட்டு இருந்தால் 50 ரூபாயை வரி செலுத்தியவர்கள், எடுத்து கொள்ள முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை