உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ட்ரோன் ஜாமர் கருவி வாங்குகிறது உளவுத்துறை

 ட்ரோன் ஜாமர் கருவி வாங்குகிறது உளவுத்துறை

சென்னை: சட்டவிரோத செயல்களில் ஈடுபடுத்தப்படும், 'ட்ரோன்'களை செயலிழக்க செய்ய, தமிழக உளவுத்துறை சார்பில், 'ட்ரோன் ஜாமர்' கருவி கொள்முதல் செய்யப்பட உள்ளது. சென்னை அபிராமபுரம் பகுதியில் உள்ள மருதம் வளாகத்தில், எஸ்.பி.சி.ஐ.டி., எனப்படும், உளவுத்துறையின் பாதுகாப்பு பிரிவு டி.ஐ.ஜி., அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகம் சார்பில், மர்ம நபர்கள் சட்ட விரோத செயல்களுக்கு பயன்படுத்தும், 'ஆளில்லா விமானம்' என, அழைக்கப்படும், 'ட்ரோன்களை' செயலிழக்க செய்ய, 'ட்ரோன் ஜாமர்' கருவி கொள்முதல் செய்யப்பட உள்ளது . இதற்காக, 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது. 'டெண்டர்' இறுதியானதும், 60 நாட்களுக்குள், 'ட்ரோன் ஜாமர்' கருவி வினியோகம் செய்ய வேண்டும். அதன் எடை, 6 கிலோவுக்கு அதிகமாக இருக்கக்கூடாது. மற்ற இடங்களுக்கு, எளிதில் எடுத்துச் செல்லக்கூடியதாக இருக்க வேண்டும். ஒரு கி.மீ., சுற்றளவில், 'ட்ரோன்'களை செயலிழக்க செய்வதாக இருக்க வேண்டும் என, பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை