உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உட்கட்சி விவகாரத்தை வெளியில் பேச முடியாது: மைத்ரேயன் விவகாரத்தில் இபிஎஸ் கருத்து

உட்கட்சி விவகாரத்தை வெளியில் பேச முடியாது: மைத்ரேயன் விவகாரத்தில் இபிஎஸ் கருத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பத்தூர்: ''மைத்ரேயனை கட்சியிலிருந்து நீக்கியது உட்கட்சி விவகாரம். என்ன நடக்கிறது என்று எங்களுக்குத் தான் தெரியும்'' என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்து உள்ளார்.திருப்பத்தூரில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் நிருபர்கள் கேள்விக்கு பதில் அளித்தார். அதன் விபரம் பின்வருமாறு: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0yl6jvn8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அமெரிக்காவின் வரி விதிப்பு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு இபிஎஸ் அளித்த பதில்: இது எல்லாம் சர்வாதிகாரப்போக்கு. இன்றைக்கு எல்லா நாடுகளும் சரி சமமாக வரி விதித்து, அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும். ஒவ்வொரு நாட்டில் ஒரு பொருட்கள் விளைவிக்கின்றனர். வேண்டுமென்று அதிக வரி விதித்து ஒரு நாட்டை அடிமைப்படுத்துவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது.நிருபர்: டிடிவி தினகரனும், நீங்களும் ஒரே மேடையில் இணைவார்கள் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளாரே?இபிஎஸ் பதில்: அது அவரிடம் கேளுங்கள். அவர் தானே சொல்லி இருக்கிறார். பாஜ கூட்டணி எங்கிட்ட உண்டு. மற்றது எல்லாம் நாங்கள் தான் முடிவு செய்வோம். அதிமுக தான் தலைமை தாங்குகிறது. சந்தர்ப்ப சூழ்நிலை வரும் போது அதற்கான பதில் தரப்படும்.நிருபர்: திமுக ஆட்சியில் அதிக கொலைகள் நடக்கிறது என்று கேள்வி எழுப்பப்பட்டது.இபிஎஸ் பதில்: திமுக ஆட்சி வந்த பிறகு சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது என்று பொதுக்கூட்டத்திலும் பேசி வருகிறேன். பத்திரிகைகளில் தங்கம், வெள்ளி நிலவரம் தான் வந்தது. இன்றைக்கு, கொலை நிலவரங்களை பட்டியலிட்டு சொல்லும் மோசமான நிலை நிலவுகிறது.குற்ற செயலில் ஈடுபடுவோர்களுக்கு போலீசாரை கண்டால் கொஞ்சம் கூட அச்சம் இல்லாத காரணத்தினால், இன்றைக்கு ரவுடிகளின் ராஜ்ஜியம், கொலை பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது. அதுமட்டுமின்றி இன்றைக்கு போதைப்பொருள் அதிகமாக விற்பனை செய்யும் காரணத்தினால், போதைக்கு அடிமையாகி அதனால் ஏற்படும் விபரீதமான செயல்கள் தான் இது.நிருபர்: ஒபிஎஸ் பாஜ கூட்டணியில் சேர்ந்து உங்களுடன் இணைந்து செயல்படுவாரா?இபிஎஸ் பதில்: அதெல்லாம் அவரைக் கேளுங்க. எங்களை ஏன் கேட்குறீங்க.நிருபர்: மைத்ரேயனை கட்சியிலிருந்து நீக்கியது ஏன்?இபிஎஸ் பதில்: மைத்ரேயனை கட்சியிலிருந்து நீக்கியது உட்கட்சி விவகாரம். என்ன நடக்கிறது என்று எங்களுக்குத் தான் தெரியும். ஒவ்வொரு கட்சிக்கும் கட்டுப்பாடு உள்ளது. அதன் அடிப்படையில் தான் நடவடிக்கை எடுப்போம். அதனை வெளியே பேசுவது சரியாக இருக்காது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

P. SRINIVASAN
ஆக 13, 2025 15:05

நீ உன்ன காப்பாத்திரத்தக்காக பிஜேபில் சேர்ந்த ... மத்தவங்க DMK போறாங்க.. இதிலென்ன தப்பு


Karthik Madeshwaran
ஆக 13, 2025 14:14

ஒருமுறை நிருபர் திராவிடம் என்றால் என்ன என்று பழனிசாமியிடம் கேள்வி எழுப்பினார். அப்போது தனக்கு தெரியாது, படித்தவர்களிடம் கேளுங்கள் என்று சொல்லிவிட்டார். அண்ணா திராவிட" முன்னேற்ற கழகம் தலைவர் இப்படி சொல்வதை கேட்டு என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. இவரிடம் போய் இன்டர்நேஷனல் பாலிடிக்ஸ் பற்றி கேட்டால் என்னா தெரியும் ? இவரெல்லாம் ஒரு தலைவர் ? என்னடா தமிழனுக்கு வந்த சோதனை. காலக்கொடுமை.


Anantharaman Srinivasan
ஆக 13, 2025 19:03

திராவிடம் என்றால் என்ன என்று ஸ்டாலின், உதயாநிதி க்கும் தெரிந்திருக்காது. ஆனால் ஆரிய, சானாதனம் என்பதற்கு மட்டும் குருட்டாம் போக்கில் பதில் சொல்வர்.


Karthik Madeshwaran
ஆக 13, 2025 13:56

நேற்று அன்வர் ராஜா , இன்று மைத்ரேயன், நாளை தங்கமணி என்று அதிமுகாவில் ஆணிவேர் ஒற்றொன்றாக சரிகிறது. ஏற்கனவே செங்கோட்டையன் ஒதுங்கி கொண்டார். பன்னீர் செல்வம், தினகரன், சசிகலா என்று முதுகில் குத்தி பழனிசாமி ஒதுக்கிவிட்டார். இரட்டை இலை என்ற சின்னம் மட்டும் இல்லை என்றால் அதிமுகாவில் ஒரு கவுன்சிலர் கூட வெற்றி பெறமாட்டான். துரோகி பழனிசாமியை எல்லாம் ஒரு தலைவராக தமிழ்நாடு மக்கள் ஏற்கவில்லை அதற்கு கடந்த பத்து தேர்தலிலும் பழனிசாமி வாங்கிய தோல்வியே சாட்சி.. முதலில் தலைவருக்கான தகுதியும் பழனிசாமியிடம் கிடையாது. அதிமுகவில் ஜெயலலிதா தனக்கு பிறகு நல்ல தலைவர்களை உருவாக்க வில்லை. தனது பேச்சை கேட்க்கும் அடிமைகளை மட்டுமே வைத்திருந்தார். அதன் விளைவு அதிமுகவின் அழிவு இன்று. அண்ணாமலை பாஜகா கட்சியின் தலைவராக இன்னும் சிலவருடம் இருந்திருந்தால், தமிழ்நாட்டில் திமுக vs பாஜக என்று தான் உருவாகியிருக்கும். நாலு கோடி நாகேந்திரன் எல்லாம் பாஜக கட்சியை அதிமுகவிற்கு அடகு வைப்பவர். தலைமை பண்பு இல்லாதவர். வேஸ்ட்.


Kadaparai Mani
ஆக 13, 2025 16:36

EPS far better than stalin and family . Now he is getting very big reception in his state tour. That is why dmk is scared. Anwar raja and maithreyan useless members and they carry no value.


Karthik Madeshwaran
ஆக 13, 2025 18:19

EPS came through the back door, and he doesn’t have any leadership skills or knowledge about education. That’s why people have kicked him out in more than 10 elections. How can you say he’s a good leader?


சமீபத்திய செய்தி