உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டாக்டர் கனவு நிறைவேற உதவிய நீட் தேர்வு: இறுதியாண்டு மாணவர்கள் பேட்டி

டாக்டர் கனவு நிறைவேற உதவிய நீட் தேர்வு: இறுதியாண்டு மாணவர்கள் பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: 'எங்களை போன்ற வசதியற்ற மாணவர்களின் டாக்டர் கனவு நிறைவேற, 'நீட்' தேர்வு கட்டாயம் வேண்டும்' என்கின்றனர், கோவை மருத்துவக் கல்லுாரியில் மருத்துவம் பயிலும் இறுதியாண்டு மாணவ - மாணவியர்.எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர, நீட் தேர்வு கட்டாயமாகியுள்ளது. நீட் தேர்வை அமல்படுத்தியதால் ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு நனவாகிஉள்ளது. இன்று பல நடுத்தர குடும்பம் மற்றும் அதற்கு கீழ் உள்ள குடும்பங்களின் மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்ந்து, டாக்டராகும் நிலைக்கு வந்துள்ளனர். இதற்கு காரணம் நீட் என்பதால், கட்டாயம் தேவை என்கின்றனர் மாணவர்கள்.எஸ்.சாருமதி, எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு கோவை அரசு மருத்துவ கல்லுாரி மாணவி: சேலத்தில் இருந்து இங்கு வந்து படித்து வருகிறேன். அப்பா, ஜவுளி தொழிலாளி. சிறு வயது முதலே டாக்டராக வேண்டும் என்பது என் கனவு. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலை இருந்தது. பிளஸ் 2 முடித்ததும் பயிற்சி வகுப்புகளுக்கு சென்று படித்து தற்போது டாக்டராகியுள்ளேன். என்னை பொறுத்தவரை நீட் தேர்வு கட்டாயம் வேண்டும். எம்.பிரீத்தி ஸ்ரீ, எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு கோவை அரசு மருத்துவ கல்லுாரி மாணவி: தந்தை எலக்ட்ரீசியனாக உள்ளார். நடுத்தர குடும்பம். அனைவருக்கும் டாக்டராக வேண்டும் என்ற கனவு இருக்கும். ஏழை மாணவர்களின் அக்கனவு, மெய்பட நீட் தேவை. இங்கு மட்டுமல்ல எய்ம்ஸ் போன்ற மருத்துவமனைகளிலும், எளிதில் இடம் கிடைக்க நீட் தேர்வு உதவுகிறது. எங்களுக்கு நீட் தேர்வு பெரிய, கடினமான விஷயமாக தெரியவில்லை. டி.பேரறிவாளன், எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு கோவை அரசு மருத்துவ கல்லுாரி மாணவர்: சென்னையில் இருந்து இங்கு வந்து படிக்கிறேன். பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் போதே நீட் தேர்வுக்கு தயாராகினேன். இன்ஜினியரிங் உள்ளிட்ட பல படிப்புகளுக்கும் நுழைவு தேர்வு உள்ளது. அப்படியிருக்கையில் நீட் தேர்வு இருப்பதும் தவறில்லை. நீட் தேர்வு இருந்ததால் மட்டுமே இன்று டாக்டருக்கு படிக்க முடிகிறது. அது ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. ஆர்.பிரவீன்ராஜ், எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு கோவை அரசு மருத்துவ கல்லுாரி மாணவர்: என் தந்தை தனியார் பள்ளியில் காசாளராக பணிபுரிந்து வருகிறார். தனியார் கல்லுாரிகளில் மருத்துவம் பயில்வது, நடுத்தர வர்க்கத்தினருக்கு இயலாத காரியம். நீட் தேர்வு மூலமே அரசு கல்லுாரியில் இடம் கிடைத்துள்ளது. அதன் வாயிலாக குறைந்த கட்டணத்தில் மருத்துவம் பயில முடிகிறது.எம்.ஹேமலதா, எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு கோவை அரசு மருத்துவ கல்லுாரி மாணவி: தேனி மாவட்டத்தில் இருந்து இங்கு வந்து படிக்கிறேன். தந்தை ராணுவத்தில் பணிபுரிகிறார். எங்கள் குடும்பத்தில் நான் முதல் டாக்டர். நீட் பயிற்சி பெற்று படித்தேன். இந்த உலகம் போட்டிகளுடன் தான் உள்ளது. அப்படிப்பார்க்கும் போது, நீட் தேர்வு பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. நீட் இல்லை எனில், பிளஸ் 2 மதிப்பெண் வைத்து எம்.பி.பி.எஸ்., படித்திருக்க முடியாது. ஜே.ஆர்.யாழினி, எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு கோவை அரசு மருத்துவ கல்லுாரி மாணவி: திருப்பூர் மாவட்டத்தில் இருந்து இங்கு வந்து படிக்கிறேன். தந்தை ஜவுளித் துறையில் உள்ளார். மருத்துவம் படிக்க நீட் பெரிதும் உதவியது. போட்டி இருந்தால் மட்டுமே தகுதி பெற முடியும். எனவே, நீட் தேர்வு கட்டாயம் வேண்டும்.என்.யுவஸ்ரீ, எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு கோவை அரசு மருத்துவ கல்லுாரி மாணவி: தர்மபுரி எனது சொந்த ஊர். அப்பா சுயதொழில் செய்கிறார். மருத்துவம் என்பது மிகப்பெரிய விஷயம். தனியார் கல்லுாரிகளில் படிப்பது சிரமமான காரியம். அப்படியிருக்கையில் நீட் தேர்வு எழுதியதால், அரசு கல்லுாரியில் இடம் கிடைத்தது. நீட் தேர்வுக்கு தயாராகும்போது உயிரியல் பாடத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருக்கும். இவ்வாறு, மாணவ - மாணவியர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Rajagopalan R
ஜூலை 13, 2025 07:00

நீட் வந்ததில் நல்ல விஷயம் 2+2=4 என்று எழுதி டாக்டர் ஆக முடியாது .என் மகன் 18 மணி நேரம் 2 வருடம் படித்து இன்று அமெரிக்காவில் பெரிய டாக்டர் அக உள்ளான் . டாக்டர் மக்கள் உயிருடன் விளையாட கூடாது


ramesh pm
ஜூலை 08, 2025 18:08

ஒரு ஏழை மாணவர் வசதியான வாழ்க்கை வாழ நீட் அவசியம்.


ஆரூர் ரங்
ஜூலை 08, 2025 15:22

ஆற்காட்டார் அளித்த (ஒப்புதல் வாக்குமூல?) பேட்டியில் திமுக அரசு மருத்துவ கல்லூரி அட்மிஷன் பட்டியலை விற்று தமது கட்சிக்கு நன்கொடை வாங்கியதாகக் கூறியுள்ளார். அந்த சாட்சி ஒன்றே போதும் நீட் கொண்டுவந்ததற்கான நியாயம் புரிய.


Mettai* Tamil
ஜூலை 08, 2025 09:44

நான்கு வருசமாக கட்டிக்காத்த நீட் ரகசியத்தை சொன்ன இறுதியாண்டு மருத்துவ மாணவர்களுக்கு ரொம்ப நன்றி ...


ديفيد رافائيل
ஜூலை 08, 2025 09:35

தனியார் மருத்துவ கல்லூரிகளை நடத்துவதே பெரும்பாலும் அரசியல்வாதிங்க தான். அதனால தான் NEET exam கூடாதுன்னு தமிழக அரசியல்வாதிங்க சொல்றானுங்க போல.


venugopal s
ஜூலை 08, 2025 09:13

ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாம், ஆனால் லட்சக்கணக்கில் பணம் செலவழித்து நீட் பயிற்சி மையத்தில் படித்தார்களாம். இந்தக் கதைகளை எல்லாம் சங்கிகள் மட்டுமே நம்புவார்கள்!


Kjp
ஜூலை 08, 2025 09:29

ஆமாங்க.திமுக கொத்தடிமைகள் வயித்தெரிச்சலில் துடிப்பார்கள். தாங்க முடியலனா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டியதுதானே.


Kjp
ஜூலை 08, 2025 09:05

நீட் தேர்வு ரகசியத்தை தேடி அலைய வேண்டாம்.மாணவ மாணவிகள் நீட் தேர்வின் வலிமையை உணர்ந்து கொண்டார்கள்.


Kumar Kumzi
ஜூலை 08, 2025 08:29

நீட் தேர்வுக்கு நீங்கள் முட்டு கொடுப்பது எங்கள் உதைய்ண்ணா அந்த ரகசியத்தை சொல்லாமலே போயிடுவாரே


சிகண்டி ரங் aka ஆரியா ப்பசங்க
ஜூலை 08, 2025 08:28

நீட் தேர்வுக்கு எந்த பயிற்சி வகுப்பிற்கும் செல்லாமல் லட்சக்கணக்கில் பணம் செலவழிக்காமல்.. ஒரே முறை அந்த தேர்வெழுதி எழுதி தேர்வானவர்கள் எண்ணிக்கையை மொத்தமாக தேர்வானவர்கள் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டு உண்மையாக இந்த தளம் வெளியிடுமா? சமூக அக்கறை சிறிதேனும் இருந்தால் அதை இந்த தளம் செய்யவேண்டும் ....


Kjp
ஜூலை 08, 2025 09:22

உங்களுக்கு ஏனுங்க வயித்தெரிச்சல்.முட்டு கொடுக்க வழி இல்லாமல் போய் விட்டதோ?


Mettai* Tamil
ஜூலை 08, 2025 09:32

அப்படியே நீட்டுக்கு முன்பு, அரசு பள்ளியில் படித்த ஏழை மாணவர்கள் எத்தனை பேர் மருத்துவம் படித்தார்கள் என்றும் தற்போது எத்தனை பேர் மருத்துவம் படிக்கிறார்கள் என்றும் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டு உண்மையாக இந்த தளம் வெளியிடுமா?


ஜூலை 08, 2025 07:06

டாக்டர் கனவு நிறைவேற உதவிய நீட் தேர்வு.. இப்டியெல்லாம் இறுதியாண்டு மாணவர்கள் பேட்டி கொடுக்க கூடாது, முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதல் படி படித்தோம்.. டாக்டர் கனவு நிறைவேறியது.. திராவிட மடல் அரசிற்கும் முதல்வருக்கும் நன்றி என்று சொல்லவேண்டும். நீட் கோச்சிங் கிளாசுக்கு பத்து கோடி செலவு செய்தோம்.. இது ஏழைகளால் முடியாது என்று உருட்ட வேண்டும் ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை