உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேர்தல் நெருங்குவதால் நழுவும் ஐ.பி.எஸ்.,கள்

தேர்தல் நெருங்குவதால் நழுவும் ஐ.பி.எஸ்.,கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சட்டசபை தேர்தல் நெருங்குவதால், 'அரசியல் கட்சிகளின் சார்பு அதிகாரிகள்' என்ற குற்றச்சாட்டில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க, சிறப்பு பிரிவுகளுக்கு மாறும் முயற்சியில், ஐ.பி.எஸ்., அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில், ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதேபோல, அவர் களுக்கு பதவி உயர்வும் அளிக்கப்படும். பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கு, ஐ.பி.எஸ்., அதிகாரிகள், 40 பேரின் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இப்பட்டியலில், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணியில் உள்ள, போலீஸ் கமிஷனர்கள், ஐ.ஜி., மற்றும் டி.ஐ.ஜி.,க்களின் பெயர்கள் உள்ளன. அவர்கள் தங்கள் மீது, அரசியல் கட்சிகளின் சார்பு அதிகாரிகள் என்ற முத்திரை குத்தப்படாமல் இருக்க, சிறப்பு பிரிவுகளில் தங்களுக்கு பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து, காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுவதாவது: தமிழக சட்டசபை தேர்தல் நேரத்தில், சட்டம் - ஒழுங்கு உள்ளிட்ட முக்கிய பிரிவுகளில் பணிபுரியும் போது, அரசியல் கட்சிகளின் சார்பு அதிகாரிகள் என்ற முத்திரை குத்தப்படும். ஆளும் கட்சிக்கு தேவையான உதவிகளை செய்தார் என்ற குற்றச்சாட்டிலும் சிக்க நேரிடும். அதனால், தேர்தல் கமிஷனின் நெருங்கிய கண்காணிப்பிற்கும், நடவடிக்கைக்கும் ஆளாகி, பணி பதிவேட்டிலும் கரும்புள்ளி வைக்கப் படும். இதையெல்லாம் தவிர்க்கவே, ஐ.பி.எஸ்., அதிகாரிகள், சி.பி.சி.ஐ.டி., - லஞ்ச ஒழிப்பு துறை, பொருளாதார குற்றப்பிரிவு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, தலைமையிடத்து டி.ஜி.பி., உள்ளிட்ட சிறப்பு பிரிவுகளுக்கு மாற்றம் கேட்டு, பொறுப்பு டி.ஜி.பி., அபய்குமார் சிங்கிடமும், அரசிடமும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இவ்வாறு அந்த வட்டாரத்தில் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

S.jayaram
டிச 20, 2025 17:51

இவ்வளவு நாட்டுமக்களுக்காக உழைக்காமல் ஆட்சியாளர்களுக்காக உழைத்து விட்டு இப்போ பணிகளை மாற்றிக்கொண்டால் போதுமா, மக்கள் மனதில் நிற்கவேண்டும்


duruvasar
டிச 20, 2025 12:36

"சி.பி.சி.ஐ.டி., - லஞ்ச ஒழிப்பு துறை, பொருளாதார குற்றப்பிரிவு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு," இதெல்லாம் என்ன வாழுது . பல்கா அமௌன்ட் பார்க்கும் துறைகள். ஷோயியன் குடுமி சும்மா ஆடாது


Keshavan.J
டிச 20, 2025 12:09

ஐபிஎஸ் எல்லாம் உப்பீஸ் ஆகாமல் தப்பிக்க பார்க்கிறார்கள். உங்கள் ல்லோருடைய files ரெடியா அமித் ஷாஹ் கையில் இருக்கு. வெயிட் பண்ணுங்க.


சுந்தரம் விஸ்வநாதன்
டிச 20, 2025 11:06

ஐபி எஸ் சை சொன்னீங்க. தேர்தல் முடிவு வெளியானதும் திருச்சி திமுக கட்சி ஆபீசுக்கே போயி மீட்டீங் நடத்தின கலெக்டர் திவ்யா, கட்சியின் மூணாவது வாரிசின் தோழமைக்காக தனது நாற்காலையையே தியாகம் செய்த சங்கீதா, போன்று வேஷம் போடாம வெட்ட வெளிச்சமா முழு நேர கட்சி ஊழியர்களாக செயல்பட்ட ஐ எ எஸ் களை என்ன செய்வது?


Field Marshal
டிச 20, 2025 08:09

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அந்த கட்சிக்கு சாமரம் வீசுவதும் ..தேர்தல் சமயங்களில் புனிதர் வேடம் போடுவதும் வாடிக்கை தான்


rama adhavan
டிச 20, 2025 07:22

இவர்கள் இந்த ஆட்சியில் போட்ட ஆட்டங்களை மாற்று ஆட்சி வருபர்களுக்குத் தெரியாதா என்ன. பாம்பின் கால் பாம்பு அறியும்.


Subramanian
டிச 20, 2025 06:36

They enjoyed ask the benefits by dancing to the tune of one party and getting ready to enjoy again after elections


Kasimani Baskaran
டிச 20, 2025 05:11

தீம்க்காவின் கள்ள ஆட்டத்துக்கு பயந்து பலர் அபேஸ் ஆகிறார்கள் போல தெரிகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை