மேலும் செய்திகள்
இடைத்தேர்தல் பொறுப்பாளர்கள்: பா.ஜ., நியமனம்
5 minutes ago
முதல்வர் விஜயின் பிரிட்டன் பயணம் ஏன்?: தமிழக அரசு விளக்கம்
1 hour(s) ago | 2
இதே நாளில் அன்று
3 hour(s) ago
சென்னை : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றம் இன்று(பிப்.,28) வழங்குகிறது.சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். ஜாமின் கோரி, இரண்டாவது முறையாக, உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனுத்தாக்கல் செய்தார். நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், ஜாமின் மனு விசாரணைக்கு வந்தது.செந்தில் பாலாஜி தரப்பில், மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், வழக்கறிஞர்கள் மா.கவுதமன், பரணிக்குமார் ஆகியோரும், அமலாக்கத் துறை சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன், சிறப்பு வழக்கறிஞர் ரமேஷ் ஆகியோரும் ஆஜராகினர். இரு தரப்பு வாதங்களும் முடிந்ததை தொடர்ந்து, தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது. ஜாமின் வழக்கில் இன்று காலை, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பிக்கிறார்.
5 minutes ago
1 hour(s) ago | 2
3 hour(s) ago