உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கழிவுகளை சுமக்கும் ஆறாக மாறுகிறதா பவானி: குடிநீர் திட்டங்கள் பாதிக்கும் அபாயம்

கழிவுகளை சுமக்கும் ஆறாக மாறுகிறதா பவானி: குடிநீர் திட்டங்கள் பாதிக்கும் அபாயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்: கொங்கு மண்டலத்தின் ஜீவநதியாக விளங்கும் பவானி ஆற்றுநீர் மாசடைந்து, கழிவுகளை சுமக்கும் ஆறாக மாறி வருகிறது என்ற புகார் எழுந்துள்ளது.நீலகிரி மாவட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்யும் மழைநீர், பவானி ஆற்றில் சங்கமிக்கிறது.இந்த நீரை ஆதாரமாக கொண்டு, மேட்டுப்பாளையம் முதல் பவானி கூடுதுறை வரை, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், 16 கூட்டு குடிநீர் திட்டங்கள், 46 தனி குடிநீர் திட்டங்கள் வாயிலாக தினசரி 30 கோடி லிட்டர் நீர், பவானி ஆற்றில் இருந்து எடுக்கப்பட்டு, குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.இந்த நீரை ஆதாரமாக கொண்டே காளிங்கராயன் அணை, கொடிவேரி அணை மற்றும் கீழ்பவானி பாசனத்திற்குட்பட்ட 3 லட்சம் ஏக்கர் நிலங்கள்பாசன வசதி பெறுகின்றன.இந்நிலையில், கொங்கு மண்டலத்தின் ஜீவநதியாக விளங்கும் பவானி ஆற்றுநீர் மாசடைந்து, கழிவுகளை சுமக்கும் ஆறாக மாறி வருகிறது என்றபுகார் எழுந்துள்ளது.கொடிவேரி அணை - பவானி நதி பாசன விவசாயிகள் சங்க தலைவர் தளபதி, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனு:மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், பவானி நகராட்சிகள், 12 பேரூராட்சி மற்றும் 44 ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள நகர, கிராமப்புறங்களில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், நேரடியாக பவானி ஆற்றில் கலக்கிறது.ஆறு. பாசன கால்வாய் கரையோரங்களில் குப்பை உள்ளிட்ட திடக்கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால், நன்னீர் வழிந்தோடி வரும் இந்த ஜீவநதி, கழிவுகளை சுமக்கும் ஆறாக மாறி வருகிறது.உள்ளாட்சி நிர்வாகங்கள், தங்கள் எல்லைக்குட்பட்ட குடியிருப்பு, வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரித்து, வெளியேற்ற வேண்டும்.தொழிற்சாலைகள், உற்பத்தி கூடங்கள், வியாபார நிறுவனங்கள் மற்றும் வணிக வளாகங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீரை, நீர்நிலை, ஆறுகள் மற்றும் வாய்க்காலில் கலக்க விடுவது, போன்ற செயல்களில் ஈடுபடுவோரின் உரிமம் ரத்துசெய்யவும் சட்டத்தில் அனுமதியுண்டு.இதுபோன்ற சட்ட விதிகளை புறந்தள்ளி, பவானி ஆற்றில் தொடர்ந்து திட, திரவ கழிவுகள் கொட்டப்படுகின்றன; களைச்செடிகள் மற்றும் ஆகாயத்தாமரை பல இடங்களில் படர்ந்துள்ளன.மாநில அரசு, உரிய கவனம் செலுத்தி பவானி நீர் மாசுபடுவதை தவிர்க்க, தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் கொங்கு மண்டலத்தின் அடையாளமாக விளங்கி, இன்று பாழ்பட்டு கிடக்கும் நொய்யல் நதி போன்று, பவானி ஆற்றின் நிலையும் மாறும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

rasaa
ஜூன் 30, 2025 09:43

கழிவுகளை சுமக்கும் ஆறாக பவானி மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது.


Mario
ஜூன் 30, 2025 09:17

பிணம்களை சுமக்கும் ஆறாக மாறுகிறதா கங்கை


Iyer
ஜூன் 30, 2025 08:01

1 DOMESTIC கழிவுகளை நதிகளில் கலப்பதை கண்டிப்பாக தடை செய்யுங்கள் 2 அதேபோல் ஆலை கழிவுகள் தடை செய்யுங்கள் 3 நதிக்கரைகளில் சோப்பு போட்டு குளிப்பதையும், துணிதுவைப்பதையும் தடை செய்யுங்கள் 4 ரசாயன விவசாயத்தை தடை செய்து பசு ஆதார விவசாயத்தை மட்டுமே அனுமதிக்க வேண்டும். இந்த 4 நான்கு விதி முறைகளை தீவிரமாக கடைபிடித்தாலே நமது நாட்டு நதிகள் தேவாம்ருதம் ஆகிவிடும்.


இறைவி
ஜூன் 30, 2025 07:56

பவானி நதி மட்டுமில்லை. தமிழ் நாட்டில் இன்று ஓடிக்கொண்டிருக்கும் அனைத்து நதிகளும் அந்த நிலைக்கு மாறி அரை நூற்றாண்டு ஆகி விட்டது. அறுபதுகளில் காவிரியில் இருந்து நேரடியாக குடிக்க நீர் எடுப்போம். இன்று குளிக்கவே யோசனை செய்ய வேண்டும். நீர் நிறம் மாறி இருக்கும். தமிழ் நாட்டில் நீர் நிலை பாதுகாப்பு என்பது பூஜ்யம். அவர்களுக்கு நதிகள் என்பது கழிவுகளை கொட்டும் இடம். குளம், ஏரிகள் வீடு கட்ட பிளாட் போடும் இடம். நமது தர்ம சாஸ்திரம், நதியில் துணி துவக்கக் கூடாது, இயற்கை அழைப்புகளை செய்யக்கூடாது, என்று ஒரு பெரிய பட்டியலையே கொடுத்திருக்கிறது. இன்று எவரும் அவைகளை கடை பிடிப்பதில்லை. சரி. இவர்கள் கொட்டும் குப்பைகளாவது அடித்துச் சென்று கடலில் கலக்கிறதா என்றால் அதுவும் இல்லை. அளவுக்கு மீறிய மணல் எடுத்ததால் நாணலும் காட்டாமணக்கும் புதராக வளர்ந்து நதி சிற்றொடையாக அவைகளுக்கு இடையில் ஓடுகிறது. கொட்டும் குப்பைகள் புதர்களில் தடுக்கப் படுகிறது. இன்று கடுமையாக திட்டங்கள் தீட்டினால் நாம் மீண்டும் நதிகளை ஐம்பது வருடங்களில் மீட்கலாம்.


Iyer
ஜூன் 30, 2025 07:53

நமது முன்னோர்கள் - நதிகளையும் - நீர் நிலைகளையும் கடவுளாக கருதி கும்பிட்டனர். நமது முன்னோர்கள் படித்தவர்கள் அல்ல - ஆனால் நன்கு கற்றவர்கள். இந்தக்காலத்தில் படிப்பு என்ற பெயரில் - நம்மை கல்வி கற்கவிடாமல் செய்துவிட்டார்கள். மாணவர்களின் கல்வி திட்டத்தில் யோகா, பிராணாயாமம், சூரியநமஸ்காரம், த்யானம், தமிழர்களின் இயற்கை சித்த வைத்தியம், தமிழர்களின் இயற்கை விவசாயம் - போன்ற விஷயங்களை கட்டாய பாடமாக்க வேண்டும்.


சமீபத்திய செய்தி