உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரு பாட்டுக்கு மெட்டு போட ஒரு ஆண்டு எடுப்பது சாதனையா?

ஒரு பாட்டுக்கு மெட்டு போட ஒரு ஆண்டு எடுப்பது சாதனையா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நாலாயிர திவ்யபிரபந்தத்திற்கு இசையமைத்து முடித்து விட்டதாகவும், அதை வெளியிடும் சந்தர்ப்பத்திற்காக காத்திருப்பதாகவும், இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.ஜெயசுந்தர் எழுதிய, ஆண்டாள் திருப்பாவையை விவரிக்கும், 'மால்யதா' என்ற ஆங்கில நுால், நேற்று முன்தினம் சென்னையில் வெளியிடப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட, அதன் முதல் பிரதியை, இளையராஜா பெற்றுக் கொண்டார்.

பின், இளையராஜா பேசியதாவது:

நான் சிவபக்தன். ஆனால், நான் எதற்கும் எதிரி அல்ல. என் தந்தை ராமசாமி, வைணவத்தில் தீவிரமாக இருந்தவர். அந்த விட்ட குறையோ, தொட்ட குறையோ இங்கே வந்திருக்கிறேன். திருவாசகத்திற்கு இசையமைத்தது, ஒலிப்பதிவு செய்தது போல, நாலாயிர திவ்ய பிரபந்தத்திற்கும் இசையமைத்து, ஒலிப்பதிவு செய்து வைத்திருக்கிறேன். சரியான சந்தர்ப்பத்தில் வெளியிட காத்திருக்கிறேன்.மாதம், 30 நாட்களும் எனக்கு முழுமையாக இருக்கும். காலையில் ஒரு பாடல்; மாலையில் ஒரு பாடல். காலை, 7:00 முதல் பகல் 1:00 மணி வரை ஒரு 'கால்ஷீட்' இருக்கும். இப்போதெல்லாம் கால்ஷீட் கிடையாது. இரவு, பகலாக வேலை செய்கின்றனர். ஒரு பாடலுக்கு இசையமைத்து முடிக்க ஆறு மாதங்கள் ஆகின்றன. ஒரு ஆண்டு எடுத்துக் கொண்டு, சாதனை படைப்பவர்களும் இருக்கின்றனர். யாரையும் குறை சொல்வதற்காக, இதை சொல்லவில்லை. அவர்களுக்கு வரவில்லை அவ்வளவு தான்.ஒரே நாளில் மூன்று பாடல்களுக்கு இசையமைத்து உள்ளேன். மூன்று நாட்களில் மூன்று திரைப்படங்களுக்கு பின்னணி இசையை முடித்துக் கொடுத்திருக்கிறேன். இப்படி இசையமைத்தவர்கள் உலகில் யாரும் இல்லை. ஓய்வுக்காக பவுர்ணமி தினத்தில், கோடி சுவாமியை தரிசிக்க செல்வேன். கன்னியாகுமரி கடற்கரையில் பித்து பிடித்தது போல திரிந்து கொண்டிருக்கும் மாயமான் என்பவரையும் தரிசிப்பேன்.பின், திருவண்ணாமலை வந்து, காட்டுப்பாதையில் கிரிவலம் செல்வேன். 20 ஆண்டுகளுக்கும் மேலாக, மாதம் தவறாமல் காட்டுப் பாதையில் வெறும் காலில் கிரிவலம் சென்று வருகிறேன். அண்ணாமலை கோவிலில் சிவனை தரிசிக்கும் போது சொல்ல முடியாத உணர்வும், அமைதியும் ஆட்கொள்ளும்.திருவண்ணாமலை சென்று வந்த பின், ஒரு நாள் வீட்டில் உறங்கி எழுந்ததும், திடீரென, 10 நிமிடங்களில் 10 பாடல்கள் எழுதினேன். அடுத்த நாள், 10 பாடல்கள் எழுதினேன். எனக்குள் வந்தது எழுதினேன். இதுபற்றி புலவர் நமச்சிவாயத்திற்கு போன் செய்து, 20 பாடல்கள் எழுதியதைச் சொன்னேன்.அவர், 'மாணிக்கவாசகரும், 20 பாடல்கள் தான் எழுதினார். அவர் எழுதிய திருப்பள்ளியெழுச்சி பாடல்களையும் சேர்த்து திருவெம்பாவை என மார்கழியின், 30 நாட்களும் பாடுகின்றனர். நீங்களும் திருப்பள்ளியெழுச்சி எழுதி விடுங்கள்' என்றார்.அதன்பின், அடுத்த நாளே திருப்பள்ளியெழுச்சி, 10 பாடல்கள் எழுதினேன். இப்படி நானும் திருவெம்பாவை எழுதினேன். இதை இதுவரை நான் எங்கும் சொன்னதில்லை. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Indian
ஜன 06, 2024 17:11

ஓய்வு பெற்றவர்கள் இப்படத்தி தான் பேசுவார்கள் அந்த காலத்தில் நாமெல்லாம் அப்படி செய்தோம் இப்படி செய்தோம் என்று, வயசாகிவிட்டால் அப்படிதான் பேசுவார்கள் குழந்தை குணம் வந்து விடும்


RAMESH
ஜன 06, 2024 13:02

இசைக்கு பெருமை சேர்த்ததில் ராஜா சாரும் ஒருவர். 70, 80, 90 களில் இசையை சுவாசம் செய்த ராஜா ரசிகர்களில் நானும் ஒருவன் . வகுப்பில் வாத்தியார் ஸ்ட்ரிக்டா இருந்தா வாத்தியார் கெட்டவரா . அப்பா பையனை கண்டித்தால் அப்பா கெட்டவரா . தயவு செய்து ராஜா சாரை விமர்சனம் செய்யாதீர்கள் . ஆயிரக்கணக்கில் பாடல்கள் இன்றும் நாம் ரசிக்கும் விதத்தில் உள்ளது . ஏழ்மை தாண்டவம் ஆடியபோது ஆர்மோனிய பெட்டியுடன் தன நண்பர்களுடன் சென்னை வந்தவர் . அவருக்கு பரிபூர்ண சரஸ்வதி கடாட்சம் உள்ளது . அவரது பாடல்களில் உள்ள இசையை ரசியுங்கள் . சந்தோஷ படுங்கள் . மனதார அவரை பாராட்டுங்கள் .


rasaa
ஜன 06, 2024 11:55

திறமை இருக்கும் இடத்தில் ஆணவம் இருக்கும். தவறில்லை.


sridhar
ஜன 06, 2024 11:26

எல்லாம் சரி, தற்பெருமை ஒரு ஞானிக்கு அழகா .


K.Muthuraj
ஜன 06, 2024 11:03

உண்மையில் சினிமானை படைப்பாளியின் பார்வையில் உணர்ந்து இசை அமைப்பது இளையராஜா தான். ரசிகனின் ரசனை பத்தாண்டுகளுக்கு ஒருமுறை அவுட் ஆப் பேஷன் ஆகிவிடும். இளையராஜ் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இதில் நிலைத்து இருக்கின்றார். இசைபோல் உள்ள இன்றைய பாடல்களை ரசிக்கும் இன்றைய சிறுவர்கள் கூட இளையராஜாவின் பழைய பாடல் இசையினை ஒருமுறை ரசித்து கேட்பது போல் தான் இருக்கின்றது.


NicoleThomson
ஜன 06, 2024 10:25

மற்றவர்களை எள்ளிநகையாடுவது அழகல்லவே , உங்களின் திறமை தான் உங்களின் முகவரி அய்யா , முதல்வரிகளை கவனத்தில் கொள்ளுவீர்களா?


gayathri
ஜன 06, 2024 10:02

வாய்ப்பில்லாத மன விரக்தி திரைப்படத்தில்.


(null)
ஜன 07, 2024 04:05

Gayatri you are a tranny who happens to be a whore


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜன 06, 2024 09:41

இளையராஜாவின் இசை திறன் மீது அளவுகடந்த மரியாதை உண்டு. ஆனால் இவர் மற்றவர் பற்றி பேசாமல் இருப்பதே உத்தமம். வெறும் ஹார்மோனியம் மட்டும் வைத்துக்கொண்டு இசை அமைப்பது வேறு. இப்போது லேப்டாப் வைத்துக்கொண்டு புரோகிராம் எழுதி இசைக் கருவிகளே இல்லாத ஒலியையும் உருவாக்கும் திறமையுடன் இளைஞர்கள் உலா வருகின்றனர். புதியவர்களுக்கு வழிவிட்டு, ஆதரவு காட்டி, ஊக்கம் அளிப்பதுடன் மூத்தோரின் கடமை. அப்படி செயல்பட முடியவில்லை என்றால் அமைதி காப்பது சாலச்சிறந்தது. கூடவே இவரின் ஆரம்ப நாட்களில் ஒரே நாளில் இசை அமைத்தாரா என்றும் சொன்னால் நல்லது.


பேசும் தமிழன்
ஜன 06, 2024 11:10

அவர் யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை.... அவர் ஒரு நாளில் இசையமைத்தால்.... மற்றவர்கள் ஒரு மாததிலாவது இசையமைக்க வேண்டும் என்று தான் கூறுகிறார் ....அதை விடுத்து ஒரு பாடலுக்கு ஒரு வருடம் எடுத்து கொண்டால் ...அதில் பெருமை என்ன இருக்கிறது


சுந்தரம் விஸ்வநாதன்
ஜன 06, 2024 12:37

அவர் இசையமைத்த பெருமையை மட்டும் கூறிவிட்டு மற்றவர்களைப்பாற்றி ஏதும் கூறாமல் விட்டிருந்தால் அவருக்கு இன்னும் பெருமை கூடி இருக்கும்.


duruvasar
ஜன 06, 2024 09:13

இறையருள் பெற்ற ஒரு இசை மாமேதை. இது எல்லோருக்கும் சாத்தியப்படாது. இன்னும் நிறைய இசைத்தொண்டு செய்ய இறைவன் அருள்புரியவேண்டும்


VENKATESAN
ஜன 06, 2024 09:07

காதை தொடும், உள்ளத்தை தொடும் இசையைத்தான் உலகில் பலர் உருவாக்குகிறார்கள். ஆன்மாவை தொடும் இசையை உருவாக்கும் ஒரே ஒருவர் இசைஞானிதான். திவ்யப்பிரபந்தம் இவரது இசையில் கேட்டால், அண்டப் பிரபஞ்சம் நம்முள் நிச்சயம் அதிர்வுகள் ஏற்படுத்தும். உடனே வெளியிட வேண்டும் என்று இசைதேவனை, இசைக் கடவுளை, நம் இசைஞானியை கேட்டுக்கொள்கிறேன்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை