உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் நடப்பது போலீஸ் ஆட்சியா: கேட்கிறார் அன்புமணி

தமிழகத்தில் நடப்பது போலீஸ் ஆட்சியா: கேட்கிறார் அன்புமணி

சென்னை: தமிழகத்தில் நடப்பது மக்களாட்சியா? போலீஸ் ஆட்சியா? என பா.ம.க., தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.அவரது அறிக்கை: விழுப்புரம் மாவட்டம் அரசூர் கூட்டு சாலை என்ற இடத்தில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், போலீசாரின் அத்துமீறலைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் இருவேல்பட்டு கிராம மக்கள் மீது போலீசார் கடுமையாக அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை ஆண் போலீசார் அவமானப்படுத்தும் வகையில் இழுத்துச் சென்று அப்புறப்படுத்தியுள்ளனர். வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த அப்பாவி இளைஞர்களையும் போலீசார் பயங்கரவாதிகளை போல இழுத்துக் கொண்டு சென்றுள்ளனர். இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்துவதில் கூட தவறு இல்லை. ஆனால், கலைந்து சென்ற மக்களை பயங்கரவாதிகளைப் பிடிப்பதைப் போல போலீசார் வேட்டையாடியதை மன்னிக்க முடியாது. தி.மு.க.,வை ஆட்சியில் அமர்த்தியவர்கள் மக்கள் தான். இத்தகைய நிகழ்வுகளைப் பார்க்கும் போது தமிழகத்தில் நடப்பது மக்களாட்சியா, போலீஸ் ஆட்சியா? என்ற ஐயம் தான் எழுகிறது. இவற்றுக்கெல்லாம் மக்கள் பாடம் புகட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை. இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

sankar
ஜன 15, 2025 18:09

ரிமோட்டில் செயல்பாடு, ஆர்டருக்கு ஆக்ஷன்


Ramesh Sargam
ஜன 15, 2025 13:06

தமிழகத்தில் காவல்துறையினரை மிரட்டி, கையில்போட்டுக்கொண்டு திமுக ஆட்சி புரிகிறது. இதுகூட தெரியவில்லையே உங்களுக்கு...?


தமிழன்
ஜன 15, 2025 12:49

இதை தான் சில வருடங்களாக சவுக்கு ஷங்கர் கேட்டு கொண்டு இருக்கிறார்.. அதனால் இப்போ அவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.. இப்போ இவர் கேட்கிறார்.. எப்போ எது நடக்குமோ யாருக்கு தெரியும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை