மேலும் செய்திகள்
சம்பளம் வழங்க வலியுறுத்தி பல்கலையில் உண்ணாவிரதம்
29-Jan-2025
மதுரை:மதுரை காமராஜ் பல்கலையின் மாணவர் சேர்க்கை மையங்களை மீண்டும் தனியாருக்கு தாரைவார்க்கும் போக்கு துவங்கியுள்ளது.இரண்டு மாதங்களாக சம்பளம் தராதது, நிதி நெருக்கடி என நிர்வாக குளறுபடிகளை ஏற்படுத்தி, கவர்னர் மீது குற்றஞ்சாட்ட அரசு முயற்சிப்பதாக கல்வியாளர்கள் குமுறுகின்றனர். இப்பல்கலையில் தற்போது துணைவேந்தர் பணியிடம் காலியாக உள்ளது. பதிவாளர், தேர்வாணையர், கூடுதல் தேர்வாணையர், டீன், தொலைநிலைக் கல்வி இயக்குநர் என உயர் பதவிகள் பல ஆண்டுகளாக காலியாக உள்ளன. பேராசிரியர்களே கூடுதல் பொறுப்பு வகிக்கின்றனர். நிர்வாகத்திற்காக அரசு அமைத்துள்ள கன்வீனர் குழு தலைவர் சுந்தரவள்ளி - கல்லுாரி கல்வி கமிஷனர் எப்போதாவது பல்கலைக்கு வருகிறார்.உச்ச பதவிகள் காலியாக இருப்பதால் பல்கலையின் நிதி நெருக்கடி பூதாகரமாக மாறியுள்ளது. பேராசிரியர்கள், அலுவலர்கள், ஓய்வூதியர்களுக்கு இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.பல்கலையின் பிரதான வருவாய், தொலைநிலைக் கல்வித் திட்டம் தான். அதில் எழுந்த முறைகேடு புகார்கள், மாணவர்களுக்கு சரியாக டிகிரி சான்றிதழ் வழங்காதது, தேர்வு சரியான நேரத்திற்கு நடத்தாதது போன்ற பிரச்னைகளால், லட்சக்கணக்கில் இருந்த மாணவர் சேர்க்கை எண்ணிக்கை, தற்போது சில ஆயிரமாக குறைந்துவிட்டது. இந்நிலையில் பல்கலையை மேலும் பலவீனமாக்கும் வகையில் பல்கலை நடத்திவந்த மாணவர் சேர்க்கை மையங்களை கமிஷன் அடிப்படையில் தனியாருக்கு தாரைவார்க்கும் நடவடிக்கை துவங்கியுள்ளது. பேராசிரியர்கள் கூறியதாவது: ஏற்கனவே தனியாருக்கு சேர்க்கை மையங்கள் தாரைவார்க்கப்பட்டதில், பல லட்சம் ரூபாய் இன்று வரை வசூலிக்க முடியவில்லை. மாணவர் சேர்க்கை ஆன்லைனில் மாற்றபட்டு, கட்டணங்களும் ஆன்லைன் மூலம் செலுத்தப்படுகின்றன. இந்நிலையில் தனியார் சேர்க்கை மையங்கள் நடத்த அனுமதிக்கப்பட்டு, 65:35 அடிப்படையில் கட்டணங்களை பகிர்ந்துகொள்ள உடன்பாடு ஏற்பட்டுள்ளது.பல்கலை மூலம் சேர்க்கையான மாணவர்களை கமிஷனுக்காக, தனியார் மையங்கள் மூலமாக சேர்க்கையானதாக காண்பித்து முறைகேடு நடக்கிறதா என சந்தேகம் எழுந்துள்ளது.இப்படி சம்பள பிரச்னை, நிர்வாகத்தில் குளறுபடி ஏற்படுத்தி, அதற்கு துணைவேந்தரை நியமிக்காததே காரணம் என கவர்னரை 'கார்னர்' செய்ய அரசு முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
29-Jan-2025