உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவில் யானைகளுக்கு புத்துணர்வு முகாமா?: அமைச்சர் சேகர்பாபு பதில்

கோவில் யானைகளுக்கு புத்துணர்வு முகாமா?: அமைச்சர் சேகர்பாபு பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

துாத்துக்குடி: தமிழக அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு திருச்செந்துாரில் நேற்று அளித்த பேட்டி:கடந்த காலங்களில் கோவில் யானைகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அருகிலேயே செய்யப்படாததால் புத்துணர்வு முகாம் தேவைப்பட்டது. தற்போது 26 கோவில்களில், 28 யானைகளை அறநிலையத் துறையே பராமரிக்கிறது; அவற்றிற்கு புத்துணர்வு முகாம் தேவைப்படவில்லை.வனத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள் மற்றும் மருத்துவர்களோடு கலந்து ஆலோசித்து, புத்துணர்வு முகாமிற்கு, கோவில் யானைகளை கொண்டு செல்ல வேண்டும் என அறிவுறுத்தினால் அதை ஏற்க, அறநிலையத்துறை தயாராக உள்ளது.வனத்துறை சட்டத்தின் படியும், தற்போது இருக்கும் விதிகளின்படியும் வனத்துறையின் அனுமதி பெற்ற பிறகு தான் யானை தொடர்பான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக, திருச்செந்துார் கோவில் யானை தாக்கியதில் உயிரிழந்த பாகன் உதயகுமாரின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய், சிசுபாலனின் குடும்பத்திற்கு, 5 லட்சம் ரூபாயை அவரது குடும்பத்தினரிடம் அமைச்சர் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

S Srinivasan
நவ 25, 2024 13:35

All temples are getting spoiled by this govt. வெளியில் அறநிலைத்துறை நன்றாக செய்வது போல் தோற்றமளித்து உள்ளே உள் குத்து அடித்து நன்றாக சம்பாதிக்கும் HRCE வணக்கம். யானைகளை நன்கு அறிந்தவர் ஜெயலலிதா அவர் இருந்தபோது எந்த யானையும் மதம் பிடிக்கவில்லை ஏன் மதம் பிடிக்கிறது எல்லாம் இறைவன் செயல்


Ramesh Sargam
நவ 25, 2024 12:22

புத்துணர்வு முகாம் முதலில் நடத்தவேண்டியது அமைச்சர்களுக்கு. ஏன்? ஏன் என்றால் அவர்கள்தான் செய்தி சேகரிக்கும் நிருபர்கள் reporters கேட்கும் கேள்விகளுக்கு நிதானம் இழந்து எறிந்து விழுகிறார்கள். ஒரு சில சமயம் கண்ணத்தில் அடிக்கிறார்கள், அல்லது தகாத வார்த்தைகளால் பேசுகிறார்கள். யானைகள் எவ்வளவோ பரவாயில்லை.


Barakat Ali
நவ 25, 2024 09:35

புத்துணர்வு முகாம் தேவைப்படவில்லை ன்னு கட்சி மாறி வந்து அடிமையா இருக்கிறவர் சொல்லிட்டார் ..... வெட்டரினரி டாக்டரை கேட்காதீங்க ......


கிஜன்
நவ 25, 2024 08:59

அனைத்து கோவில்களும் யானைகளை பராமரிக்க வேண்டும்... எல்லா யானைகளுக்கும் காட்டில் உணவுக்கிடப்பது எளிதல்ல... 28 கோவில் யானைகள் என்பது 100 கோவில் என்று மாற ஆனைமுகன் அருள்புரிவாயாக ....


N Sasikumar Yadhav
நவ 25, 2024 20:03

திருட்டு திராவிட மாடலுக்கு நீங்க கொடுக்கும் முட்டு அப்படியே புல்லரிக்க வைக்கிறது ஜெயலலிதா முதல்வராக இருந்த வரை எப்படி நடத்தினார் புத்துணர்வு முகாம்களை . யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடத்தினால் ஓட்டுப்பிச்சை போட்டவர்களை கோபித்து கொண்டு வருகிற சட்டமன்ற தேர்தலில் ஆப்படித்து விடுவார்களென ஏதேதோ சாக்கு சொல்கிறாராகள் கோபாலபுர கொத்தடிமைகள்


Raj
நவ 25, 2024 05:54

யாராவது இறந்தால் அவர்கள் குடும்பத்திற்கு 2 லட்சம் அல்லது 10 லட்சம் கொடுத்து வாயடைத்து விடுவார்கள். புத்துணர்ச்சி முகாம் மறைந்த ஜெயலலிதா அம்மையார் கொண்டுவந்தது, அதனால் தான் இந்த ஆட்சியாளர்கள் முகாம் வேண்டாம் என்று சொல்லுகிறார்கள்.


வைகுண்டேஸ்வரன்
நவ 25, 2024 09:54

புந்துணர்வு முகாம் ஏன் வேண்டாம் என்று அமைச்சர் சொல்கிறார் என்பது தமிழில் தெளிவாக போட்டிருக்கிறார்கள். ஜெயலலிதா கொண்டுவந்ததால் வேண்டாம் என்கிறாராம். ரொம்ப கஷ்டம். தமிழும் தெரியல ன்னா... என்ன தான் பண்றது?


சம்பா
நவ 25, 2024 04:34

ஒவ்வென்னா ரத்து பண்ணுவதே வாடிக்கை


சந்திரன்,போத்தனூர்
நவ 25, 2024 06:21

அந்த யானை நல்லவங்களையே தூக்கிப் போட்டு மிதிக்குது அதனால நீங்க ரொம்ப ஜாக்கிரதையா இருங்க யானை பக்கத்துல போகாதீங்க அதுக்கு நீங்க அமைச்சர் என்பதெல்லாம் தெரியாது.


சமீபத்திய செய்தி