உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டம் பயிலும் மாணவியர் நிலையே இப்படியா? அரசை கேட்கிறார் அண்ணாமலை!

சட்டம் பயிலும் மாணவியர் நிலையே இப்படியா? அரசை கேட்கிறார் அண்ணாமலை!

சென்னை: சட்டம் பயிலும் மாணவியர் நிலையே இப்படி என்றால், இதர மாணவ, மாணவியர் விடுதிகளின் நிலை எத்தனை மோசமாக இருக்கும்? என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.அவரது அறிக்கை: சென்னை பெருங்குடியில் அமைந்துள்ள, அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவியர் விடுதியில், அடிப்படை வசதிகள் கோரி பல காலமாக மாணவியர் கோரிக்கை வைத்து வந்துள்ளனர். 152 அறைகள் இருக்கும் இந்த விடுதியில், 40 கழிப்பறைகளே உள்ளன. அறைக்கு மூன்று பேர் என, சுமார் 450க்கும் அதிகமான மாணவியர் இங்கு தங்கிப் பயின்று வருகின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=csf1faht&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், சேப்பாக்க வளாக மாணவியர் 115 பேரையும், பெருங்குடி வளாகத்திற்கு மாற்றியுள்ளனர். ஏற்கனவே அடிப்படை வசதிகள் முறையாக இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்த மாணவியர், மேலும் அதிகமாகப் பாதிக்கப்பட்டு, வேறுவழியின்றி, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.மாநிலத்தின் தலைமைச் சட்டக் கல்லூரி விடுதியில், அடிப்படை வசதிகளைக் கூட செய்து தராமல், மேலும் மேலும் அவர்களை அலைக்கழிப்பது ஏன்? நல்ல குடிநீர், தரமான உணவு என எதுவும் வழங்கப்படுவதில்லை. சட்டம் பயிலும் மாணவியர் நிலையே இப்படி என்றால், இதர மாணவ, மாணவியர் விடுதிகளின் நிலை எத்தனை மோசமாக இருக்கும்?அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவியருடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று தி.மு.க., அரசு சார்பில் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தி.மு.க., அரசு, வழக்கம்போல இந்தப் பிரச்னையை மடைமாற்றிவிடலாம் என்று எண்ணினால், அது நடக்காது. அம்பேத்கர் சட்டக் கல்லூரி விடுதி மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவ, மாணவியர் விடுதிகளிலும், முறையான அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். தரமான உணவு, நல்ல குடிநீர், சுகாதாரமான சுற்றுச்சூழல் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்கு முதல் படியாக, சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவியர் போராட்டம் அமைந்திருக்கிறது. தங்கள் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடிய அனைத்து சட்டக் கல்லூரி மாணவியருக்கும் எனது வாழ்த்துக்கள். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

c.mohanraj raj
ஜூன் 26, 2025 07:01

ஆகாத கழுதைகள்அனைத்தும் அங்கே தான் இருக்கும் போல


திகழ்ஓவியன்
ஜூன் 25, 2025 22:43

தி மு க தமிழுக்காக உயிரை தியாகம் செய்தவர்கள். நீங்கள் சொல்லும் ஆந்திரா, கர்நாடகா மக்களின் தாய்மொழியே காணல் நீராய் மாற்றப்பட்டிருக்கிறது. தமிழ்மொழியை செம்மொழியாக்கியது திமுக. வேல் கொண்டு வேடம் போடும் கூட்டத்துக்கு தமிழை பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது. கலைஞரின் பேனா என்ற ஆயுதம் ஆரியர்களிடம் இருந்து தமிழர்களை தமிழை காப்பாற்றியிருக்கிறது. செந்தமிழ்மொழி அந்தஸ்ததே தி மு க வின் அஸ்திரமானது. இன்று பல நாட்டில் தமிழ் இருக்கைகள் இருக்கிறது. சீனர்கள் தமிழை கற்கிறார்கள். தமிழ் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது. தமிழ் தெரிந்தால்தான் தமிழ்நாட்டில் அரசு வேலை என்ற நிலைப்பாட்டை கொண்டுவந்தவர் எங்கள் தலைவர் முதல்வர். வேடம் போடுபவர்கலெல்லாம் தி மு க விற்கு பாடம் சொல்ல தேவையில்லை.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 26, 2025 08:01

தமிழுக்காக திராவிட தலைவர்களோ அல்லது அவரது குடும்பத்தினரோ இதுவரை உயிர் தியாகம் செய்திருக்கிறர்களா ? இருந்தால் பட்டியலை தாருங்கள் ... தொண்டர்களை தூண்டிவிட்டு தீக்குளிக்க வைத்து சாகடிக்கும் தலைவர்களா தமிழை காப்பாற்றினார்கள் ? தமிழை வைத்து பிழைப்பு நடந்தும் கும்பல் இது ...


M Ramachandran
ஜூன் 25, 2025 22:42

மொதல்ல கொடுத்த நிதிக்கு கணக்கு காட்டுங்க ஜி. யேஅன்னைய்யா நேரிடையாக மத்திய அரசு எல்லா கல்லூரிகளையும்எடுத்து நடத்தலாமெ? இதற்கு தமிழக அரசு எதற்கு?


adalarasan
ஜூன் 25, 2025 22:23

அரசியல் வியாதிகளுக்கு,நினைவு சின்னம் , மண்டபஙகள்,போன்றவைக்கு பதில்,, மாணவியர்களுக்கு கழிப்பறை கட்டலாம்.


sampath, k
ஜூன் 25, 2025 22:16

Mr. Annamalai, before blaming in each and every issue and everyday, you should compare with other states with database details. Mere bestow the day to day affairs unwantedly any motivation which would damage your carrier in future


vivek
ஜூன் 26, 2025 06:07

useless sampath....do you compare your house with other house problem.... please solve your house problem firstly....don't bluff


அப்பாவி
ஜூன் 25, 2025 21:29

உ.பி, பிஹார்,குஜராத்ல சட்டம் பயில்பவர்களுக்கு ஏ.சி ரூம் ஃப்ரீயா குடுக்கறாங்களாம்.


Barakat Ali
ஜூன் 25, 2025 21:16

மாணவ மாணவியரா ன்னு மொதல்ல போயி பாருங்க 20000 புக்ஸ் படிச்சவரே முப்பது வயதைக் கடந்தவர்களாக உள்ளனர் ...


rama adhavan
ஜூன் 25, 2025 20:51

மாண்புமிகு நீதி அரசர்கள் தானே முன்வந்து இதனை அவசரமாக விசாரணை செய்யலாமே?


V Venkatachalam
ஜூன் 25, 2025 20:44

சிம்பிளா ஒரே விஷயம் உறுதிப்படுத்தினா போதுமே. சட்டம் படித்து வெளியே வந்து முதல் திருட்டு தீயமுக வை சப்போர்ட் பண்ணுவோம்.முழு மூச்சாக திருட்டு தீய முகவுக்கு உழைப்போம் அப்புடீன்னு அத்தனை பேரும் துண்டு சீட்டில் எழுதி குடுத்தாலே போதும். எல்லா வசதிகளும் உடனே செய்து தரப்படும். போராட்டம் வேண்டாம். அண்ணாமலையும் கீறல் விழுந்த இசைத்தட்டு மாதிரி கத்த வேண்டாம்.


Ram
ஜூன் 25, 2025 20:41

திராவிட மாடல் , பட்டாதான் புத்திவரும்