உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இஸ்ரோ விஞ்ஞானி வீர முத்துவேல் தமிழக உயர்கல்வி மன்ற உறுப்பினராக நியமனம்

இஸ்ரோ விஞ்ஞானி வீர முத்துவேல் தமிழக உயர்கல்வி மன்ற உறுப்பினராக நியமனம்

சென்னை: இஸ்ரோ விஞ்ஞானி வீர முத்துவேல் உட்பட 4 பேரை உறுப்பினர்களாக நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் கல்வி மேம்பாட்டுக்காக புதியத் திட்டங்களை வகுப்பது, பேராசிரியர்களுக்கு நவீன தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சிகளை அளிப்பது, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவது, புதிய கல்லூரிகள், பல்கலைக்கழகங்களைத் தொடங்குவதற்கான விதிமுறைகளை உருவாக்குவது உள்ளிட்ட மிக முக்கியப் பணிகளை மேற்கொள்ள 1992ம் ஆண்டு தமிழக சட்டசபையால் உயர் கல்வி மன்றம் தொடங்கப்பட்டது.இந்நிலையில், இன்று இஸ்ரோ விஞ்ஞானி வீர முத்துவேல் உட்பட 4 பேரை உறுப்பினர்களாக நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.1). பன்னீர்செல்வம், தரமணி உலக தமிழ் ஆராய்ச்சி மைய இணை பேராசிரியர்.2). வீரமுத்துவேல், இஸ்ரோ விஞ்ஞானி.3). முரளிதரன், தனியார் தொழில்நுட்ப நிறுவன CEO.4). சந்திரசேகர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர்.ஆகியோர் தமிழக உயர்கல்வி மன்ற உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

தி. குமார்
பிப் 13, 2025 20:25

மத்திய அரசு பல்கலைக் கழகங்களில் இது போன்று நிபுணர்களை நியமிக்க அளித்துள்ள பரிந்துரையை எதிர்த்த விடியா அரசு இப்போது அதையே செய்கிறது். ஒட்டுவது ஸ்டிக்கர் அதிலே ஜம்பம் வேறு!


karthik
பிப் 13, 2025 17:40

நல்ல வேளை லியோனுக்கு கீழ் பணிபுரிவது போல நியமிக்கவில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை