தனியாகவோ, கூட்டணியாகவோ வந்தாலும் கவலை இல்லை
சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய அ.தி.மு.க., ஆட்சியில் அனுமதி அளிக்கவில்லை. தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின்தான், கேள்வி நேரத்தை நேரடி ஒளிபரப்பு செய்து வருகிறோம். பணத்தை எப்படி பதுக்குவது? எப்படி ரயிலில் அனுப்புவது? பிடிபட்டவுடன் எப்படி தப்புவது? என்பதெல்லாம் தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு தான் தெரியும். எங்களுக்கு அதெல்லாம் தெரியாது.தனியாக வந்தாலும், கூட்டணியாக வந்தாலும் ஒரு சஸ்பென்ஸ் இருக்க வேண்டும் என த.வெ.க., தலைவர் விஜய் பேசியுள்ளார். யார் தனியாக வந்தாலும், கூட்டணியோடு வந்தாலும் எங்களுக்கு கவலையில்லை. சஸ்பென்ஸ் தொடரட்டும்; யாராவது போய் சேர்ந்தால் கூட்டணியாக வரட்டும், இல்லையென்றால் தனியாக வரட்டும். அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் பரிசீலனை செய்து நிறைவேற்றுவார். - ரகுபதி, தமிழக அமைச்சர், தி.மு.க.,