உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதற்கும் பா.ஜ.,வுக்கும் தொடர்பு இல்லை; சொல்கிறார் பா.ஜ., தலைவர் நயினார்!

அதற்கும் பா.ஜ.,வுக்கும் தொடர்பு இல்லை; சொல்கிறார் பா.ஜ., தலைவர் நயினார்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: குருமூர்த்தி, சைதை துரைசாமி ஆகியோர் ராமதாசை தனிப்பட்ட முறையில் சந்தித்துள்ளார். அதற்கும் பா.ஜ.,வுக்கும் தொடர்பு இல்லை என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.கோவை விமான நிலையத்தில் நயினார் நாகேந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மதுரையில் கால் பதிக்க வேண்டும் என்பதற்காகவே வரும் ஜூன் 8ம் தேதி அமித்ஷா வருகிறார். முருக பக்தர் மாநாட்டில் ஒலிக்கும் குரல் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் எதிரொலிக்கும். அனைவரும் ஓரணியில் இணைந்து தி.மு.க., அரசைத் தோற்கடிக்க வேண்டும் என்பதே நிலைப்பாடு. த.வெ.க., தலைவர் விஜய்க்கும் இதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குருமூர்த்தி, சைதை துரைசாமி ஆகியோர் ராமதாசை தனிப்பட்ட முறையில் சந்தித்துள்ளார்.அதற்கும் பா.ஜ.,வுக்கும் தொடர்பு இல்லை.பெங்களூரில் நெரிசலில் சிக்கி இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். கர்நாடக மாநிலத்தின் ஆளும் கட்சியினர் சரியான ஏற்பாடு செய்யாததே காரணம். இது போன்ற நிகழ்வுகளை பாதுகாப்போடு நடத்த வேண்டும். மஹாராஷ்ராவில் அதைவிட அதிகமாக கூட்டம் கூடிய போதும் கூட சிறு பிரச்சனை ஏற்படவில்லை. தேனி விவசாயி தீக்குளிப்பு சம்பவம் தொடர்பாக உரிய விசாரணையும் இழப்பீடும் வழங்க வேண்டும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

venugopal s
ஜூன் 06, 2025 15:33

அதுதானே! இவர்களுக்கு நன்றாக இருப்பவரை கெடுத்துத் தானே பழக்கம், பிரிந்தவர்களை சேர்த்து வைத்துப் பழக்கமே இல்லையே!


ராஜா
ஜூன் 05, 2025 23:26

ஓரு வேளை இவரை கண்டு கொள்ளாமல் இருப்பது போல தோன்றுகிறது, என்று தோன்றுகிறது.


தாமரை மலர்கிறது
ஜூன் 05, 2025 19:01

நயினார் சொல்வதை நம்புவதற்கு யாருமில்லை.


madhesh varan
ஜூன் 05, 2025 18:39

ஒத்த ஒட்டு பிஜேபி


venugopal s
ஜூன் 05, 2025 18:15

சந்தேகம் வருவது இயற்கை தானே!


Raja k
ஜூன் 05, 2025 17:20

குருமூர்த்திக்கும் அமிஷ்தாவுக்கும்தான் தொடர்பு


K V Ramadoss
ஜூன் 05, 2025 16:36

மதுரை முருக பக்தர் மாநாட்டில், கூட்ட நெரிசலோ, வேறு எந்த பாதிப்போ வராமல் முன்னெச்சரிக்கையாக செயல்படுங்கள்.


புதிய வீடியோ